இந்தியாவில் போர்விமானம் விழுந்து பற்றி எரிந்தது
இந்தியாவின்(india) மிக்ரக போர் விமானம் திடீரென விழுந்து விபத்துக்குள்ளானதில் தீப்பற்றி எரிந்து நாசமானது.
இச்த சம்பவம் ராஜஸ்தானின்(rajasthan) பார்மர் என்ற பகுதியில் உத்தராலி விமானப்படை தளம் அருகே இடம்பெற்றது.
தொழில்நுட்ப கோளாறே விபத்துக்கான காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. இதில் விமானி அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்தப்பியதாக கூறப்படுகிறது .
யாருடைய உயிருக்கும் பாதிப்பு இல்லை
இதில் யாருடைய உயிருக்கும் பாதிப்பு இல்லை. எந்தவொரு சொத்துக்கும் பாதிப்பு இல்லை என கூறப்பட்டுள்ளது.
தகவல் அறிந்தமீட்பு படையினர் விபத்து நடந்த பகுதிக்கு சென்றுள்ளனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்ட போதிலும், விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு விமானப் படை உத்தரவிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக