பிரித்தானியாவில் ஈழத்தமிழ் பெண் உமா குமரனை சந்தித்த சிறீதரன்
கிளிநொச்சி (Kilinochchi) நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S.Sritharan) தொழிற்கட்சி (Labour Party) உறுப்பினரும் ஈழத்தமிழ் நாடாளுமன்ற உறுப்பினருமான உமா குமரனை சந்தித்துள்ளார்.
சிறீதரன் பிரித்தானியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையிலே இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது இரு நாட்டு அரசியலின் தற்கால போக்கு தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உமா குமரனின் பதிவு
இது தொடர்பில் உமா குமரன் (Uma Kumaran) எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த பதிவில், “வடக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் ஐக்கிய இராச்சிய நாடாளுமன்றத்திற்கு வரவேற்பதில் பெருமையடைகிறேன்.
எனது தேர்தலுக்குப் பிறகு நான் பெற்ற முதல் வாழ்த்துக்களில் அவருடைய வாழ்த்துக்களும் அடங்கும்.
ஐக்கிய இராச்சியம், இலங்கை மற்றும் உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கு தொழிற்கட்சியின் ஆதரவை நான் மீண்டும் உறுதிப்படுத்தினேன். ஒன்றாக, நீதிக்கான எங்கள் போராட்டத்தை தொடர்வோம்” என குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக