உடல் ரீதியான தண்டனைகளுக்குத் தடை
ஏதாவது முறையில் மேற்கொள்ளப்படும் உடல் ரீதியான தண்டனைகளைத் தடை செய்வதற்காகத் தண்டனைச் சட்டக் கோவையைத் திருத்தம் செய்தல் மற்றும் அதற்காகப் பொருத்தமான சட்டத்தைத் தயாரிப்பதற்காக ஏப்ரல் 29 ஆம் திகதி அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது
அதற்கமைய, சட்ட வரைஞர் தயாரித்துள்ள சட்ட வரைபுக்குச் சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது.
மேலே சொல்லப்பட்ட சட்ட வரைபை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், அதன் பின்னர் அங்கீகாரத்துக்காக நாடாளுமன்றத்துக்குச் சமர்ப்பிப்பதற்கும் நீதி, சிறைச்சாலைகள் விவகார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக