உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

ஞாயிறு, 22 செப்டம்பர், 2024

a 82 Anura முன்னிலை | Election 2024 | Rj Chandru Report

நாளை காலை அநுர ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் - வெளியான தகவல்

நாளை காலை அநுர ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் - வெளியான தகவல் | Anura Will Sworn As President Today Evening

புதிய இணைப்பு

ஜனாதிபதித் தேர்தலில் அநுரகுமார திசாநாயக்க வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்தால் நாளை (22) காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும் எளிமையான வைபவத்தில் அவர் புதிய ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது 

முதலாம் இணைப்பு

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க (Anurakumara Dissanayake) வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றார்.

தபால் மூல வாக்களிப்பில் வடக்கு மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் அநுரகுமார திஸாநாயக்க (Anurakumara Dissanayake) முதலிடம் பெற்றுள்ளார்.


இந்தத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் அநுரகுமார திஸாநாயக்க 50 சதவீதத்துக்கும் மேல் அதிகூடிய வாக்குகளைப் பெற்று வருவதால் இரண்டாம் சுற்றுக்குக்குச் செல்லாமல் முதல் சுற்றிலேயே வாக்கு எண்ணும் பணிகள் நிறைவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் அடுத்த ஜனாதிபதி

இந்நிலையில், தேசிய மக்கள் சக்தியின் (National People's Power) தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இன்றைய தினம் ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொள்ளக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அக்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நாளை காலை அநுர ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் - வெளியான தகவல் | Anura Will Sworn As President Today Evening

நாட்டின் அடுத்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க என்பது தெளிவாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக பாரியளவு வாக்கு வித்தியாசத்தில் தமது கட்சி வெற்றியீட்டியுள்ளதாக இரண்டாவது இடத்தைப் பெறும் வேட்பாளரினால் அநுரவின் வாக்கு எண்ணிக்கையை பிடிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகாரபூர்வமாக ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டியதாக அறிவிக்கப்பட்ட உடன் அநுரகுமார பதவிப் பிரமாணம் செய்துகொள்வார் என அவர் தெரிவித்துள்ளார்.

சில வேளையில் இன்று மாலையே அநுர ஜனாதிபதியாக பதவி ஏற்பார் என அவர் குறிப்பிட்டுள்ளார். 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 302 பூமியின் கடைசி நாள் எப்போது : வெளியான அதிர்ச்சி தரும் அறிவிப்பு

  பூமியின் கடைசி நாள் எப்போது : வெளியான அதிர்ச்சி தரும் அறிவிப்பு   பூமியில் அனைத்து உயிர்களும் அழியும் நாளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக...