கிளிநொச்சி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி
கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து நேற்றையதினம் (14.09.2024) இடம்பெற்றுள்ளது.
இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்த காரணத்தினாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.
மேலதிக விசாரணைகள்
இந்நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக