திருகோணமலை பிரதான வீதியில் லாறியுடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து : ஒருவர் பலி
தம்புள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பேபுஸ்ஸ – திருகோணமலை பிரதான வீதியில் தம்புள்ளையிலிருந்து ஹபரணை நோக்கி பயணித்த லாறியுடன் எதிர்த்திசையில் வந்த முச்சக்கரவண்டியொன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்தானது நேற்று (07.09.2024) மாலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது தம்புள்ளை கிரலகொல்ல பிரதேசத்தில் வசிக்கும் 73 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
இந்த விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி மற்றும் பின் இருக்கையில் பயணித்த இருவர் காயமடைந்து தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பின் இருக்கையில் அமர்ந்திருந்த நபர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் தம்புள்ளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், லாறியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை தம்புள்ளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக