உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

புதன், 4 செப்டம்பர், 2024

a 40 தமிழீழப்பகுதியில் சிங்களக்கைக்கூலிகள் அட்டகாசம்?

 

யாழில் இரவு வீடு புகுந்து இளைஞன் மீது வாள்வெட்டு! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி

யாழில் இரவு வீடு புகுந்து இளைஞன் மீது வாள்வெட்டு! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி | Jaffna Chunnakam Sword Attacked Youth Injured

யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியில் இளைஞன் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தாவடி தெற்கு பத்திரகாளி கோவில் பகுதியில் கடந்த 01-09-2024 ஆம் திகதி இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.


சம்பவ தினத்தன்று வீடொன்றுக்குள் நுழைந்த மர்ம நபர்கள், இளைஞன் மீது வாள் வெட்டினை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் 22 வயதான இளைஞன் கையில் வாள்வெட்டு தாக்குதலுக்கு உள்ளாகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் குறித்த தாக்குதலை 4 பேர் கொண்ட குழுவே மேற்கொண்டுள்ளதாக பாதிக்கப்பட்ட இளைஞன் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

யாழில் இரவு வீடு புகுந்து இளைஞன் மீது வாள்வெட்டு! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி | Jaffna Chunnakam Sword Attacked Youth Injured

இதற்கு முன்னரும் கடந்த ஆண்டு குறித்த இளைஞன் மீதும் தாயார் மீதும், தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இந்த வாள்வெட்டு தாக்குதல் ஏன் நடத்தப்பட்டது என்பது தொடர்பில் இதுவரை தெரியவராத நிலையில், மேலதிக விசாரணைகளை சுண்ணாகம் குற்றத் தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் . வந்தவர்கள் ஆயுதம் வைத்துயிருந்ததாகவும் தங்களின் முகத்தை மறைத்து இருந்ததாகவும் இது சாதரண பொதுமக்கள் இப்படியானதுணிச்சலானவேலை செய்ய மாட்டார்கள் என இளைஞன் தெரிவிப்பு?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 204 சர்வதேச பிடியாணை உத்தரவு

சர்வதேச பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தம்பதியினர் கட்டுநாயக்கவில் கைது சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்ட  தம்பதியின...