உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

திங்கள், 16 செப்டம்பர், 2024

a72 யாழ்ப்பாணம் - கண்டி வீதி விபத்தில் 7 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு

 

யாழ்ப்பாணம் - கண்டி வீதி விபத்தில் 7 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு

யாழ்ப்பாணம் - கண்டி வீதி விபத்தில் 7 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு | 7 Year Old Girl Death For Accident Kandy To Jaffna

கண்டி-யாழ்ப்பாணம் வீதியின் மாரகஹ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 7 வயது சிறுமி பரிதாபமாக பலியாகியுள்ளார்.

முச்சக்கரவண்டி ஒன்று பவுசர் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். 

பிரேத பரிசோதனை

முச்சக்கரவண்டி சாரதி, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் பயணித்துள்ளதாகவும் திடீரென முச்சக்கரவண்டி சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கத்தால் இவ்விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


விபத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே மேற்படி 7 வயது மகள் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக ரம்பேவ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 204 சர்வதேச பிடியாணை உத்தரவு

சர்வதேச பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தம்பதியினர் கட்டுநாயக்கவில் கைது சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்ட  தம்பதியின...