உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

வெள்ளி, 27 செப்டம்பர், 2024

a 93 கொழும்பு - கண்டி வீதியில் பேருந்து மோதி வயோதிபப் பெண் பலி

 

கொழும்பு - கண்டி வீதியில் பேருந்து மோதி வயோதிபப் பெண் பலி

கொழும்பு - கண்டி வீதியில் பேருந்து மோதி வயோதிபப் பெண் பலி | Elderly Woman Dies After Being Hit By A Bus

கொழும்பு - கண்டி வீதியில் உள்ள அம்பேபுஸ்ஸ பிரதேசத்தில் பேருந்து மோதி வயோதிபப் பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம்  நேற்று(27.09.2024) மாலை இடம்பெற்றுள்ளதாக வரக்காப்பொல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


விபத்துச் சம்பவம்

கண்டியில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்று வீதியில் பயணித்த வயோதிபப் பெண் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின்போது படுகாயமடைந்த வயோதிபப் பெண் வரக்காப்பொல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


அம்பேபுஸ்ஸ, வரக்காப்பொல பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதுடைய வயோதிபப் பெண்ணே உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, பேருந்தின் சாரதி சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன்  விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வரக்காப்பொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 303 கிளிநொச்சியில் வெள்ளத்தில் மூழ்கிய பல வீடுகள்

  கிளிநொச்சியில் வெள்ளத்தில் மூழ்கிய பல வீடுகள் கிளிநொச்சியில் நேற்று பகல் சுமார் ஒரு மணி நேரம் பெய்த கடும் மழை காரணமாக ஆங்காங்கே வெள்ளம் ஏற...