உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

ஞாயிறு, 29 செப்டம்பர், 2024

a 100 தாய் வெளிநாட்டில்... பாடசாலை மாணவியை கர்ப்பமாக்கிய பக்கத்துவிட்டு மாணவன்!

 

தாய் வெளிநாட்டில்... பாடசாலை மாணவியை கர்ப்பமாக்கிய பக்கத்துவிட்டு மாணவன்!

மட்டக்களப்பு - காத்தான்குடி பகுதியில் பாடசாலை மாணவியை இரண்டு மாதம் கர்ப்பிணியாக்கிய பக்கத்து வீட்டைச் சேர்ந்த மாணவனை நேற்றையதினம் (27-09-2024) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடி பகுதியில் வசித்துவரும் 16 வயது சிறுமியின் தாயார் வெளிநாட்டில் வேலை செய்துவரும் நிலையில் அவரின் அம்மம்மாவின் பாதுகாப்பிலிருந்து வந்துள்ளார்.

தாய் வெளிநாட்டில்... பாடசாலை மாணவியை கர்ப்பமாக்கிய பக்கத்துவிட்டு மாணவன்! | Student Made A Schoolgirl Pregnant In Batticaloa

இதன்படி, மாணவியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் 16 வயது மாணவனின் தந்தை உயிரிழந்துள்ள நிலையில், அவரின் தாயாரும் வெளிநாட்டில் வேலை வாய்ப்புக்காக சென்றுள்ளதுடன் அம்மம்மாவின் பாதுகாப்பில் சிறுவனும் இருந்து வந்துள்ளார்.

இவ்வாறான நிலையில், இருவரும் ஒரே வகுப்பில் கல்வி கற்று வந்துள்ள நிலையில், சிறுவனின் வீட்டிற்கு கல்வி கற்பதற்காக சிறுமி சென்று வந்துள்ளார்.

இதனால் இருவருக்கும் ஏற்பட்ட காதல் காரணமாக சிறுமியை சிறுவன் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


   

இதனையடுத்து சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டதையிட்டு அவரை நேற்று வைத்தியசாலைக்கு அழைத்து சென்றபோது, சிறுமி 2 மாத கர்ப்பிணியாக உள்ளமை தெரியவந்ததையடுத்து வைத்தியர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

பின்னர் சிறுமியை கர்ப்பிணியாக்கிய 16 வயது சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 204 சர்வதேச பிடியாணை உத்தரவு

சர்வதேச பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தம்பதியினர் கட்டுநாயக்கவில் கைது சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்ட  தம்பதியின...