உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

வெள்ளி, 13 செப்டம்பர், 2024

a 62 தமிழீழக்கனவை நிலைநாட்ட ஆரம்ப முதல் படியில் கால் வைக்கும் தமிழர்கள், இதை முற்றாக எதிர்க்கும் அரச கைக்கூலிகள்?

 

மன்னாரில் ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டம்

மன்னாரில் ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டம் | Arianethran Public Meeting Mannar

ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனை (P. Ariyanethiran) ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கூட்டமானது இன்றைதினம் (13.09.2024) மன்னார் (Mannar) நகர பேருந்து நிலையத்தில் நடைபெற்றுள்ளது.

பொதுக்கூட்டம்

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் (Selvam Adaikalanathan) ஏற்பாட்டில், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் மோகன்ராஜ் ஒருங்கிணைப்பில் பொதுக்கூட்டம் இடம் பெற்றது.


பொதுக் கூட்டத்தில் தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் ( Siddharthan), முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் (Suresh Premachandran) ,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ( Sivasakthy Ananthan), தமிழ் தேசிய கட்சியின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி சிறிகாந்தா, முன்னாள் யாழ் மேயர் மணிவண்ணன் மற்றும பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.

பொதுக்கூட்டத்தின் போது ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் பா.அரிய நேத்திரனுக்கு மன்னார் மக்கள் அமோக வரவேற்பு வழங்கிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Gallery
GalleryGallery
GalleryGallery
GalleryGallery

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 204 சர்வதேச பிடியாணை உத்தரவு

சர்வதேச பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தம்பதியினர் கட்டுநாயக்கவில் கைது சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்ட  தம்பதியின...