தனது இறுதி உரையை ஆற்றி முடித்தார் தமிழ் பொது வேட்பாளர்
யாழில் (Jaffna) தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனை (P. Ariyanethiran) ஆதரித்து இறுதி தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றுள்ளது.
குறித்த பிரசாரக் கூட்டமானது இன்று (18) யாழ்ப்பாணம் நல்லூர் சங்கிலியன் தோப்பில் இடம்பெற்றுள்ளது.
இராஐதந்திர போராட்டம்
இதன் போது, கருத்து தெரிவித்த பொது வேட்பாளர் அரியநேத்திரன், “ஈழத் தமிழ் மக்கள் பல அகிம்சை ரீதியாக போராடி அதன் பின்னர் ஆயுத ரீதியாகவும் போராடி வந்த நிலையில் முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்குப் பின்னர் தற்போது இராஜதந்திர ரீதியாக போராடிக் கொண்டிருக்கின்றனர்.
எமது அரசியல் தலைமைகள் அகிம்சை ரீதியாக போராடிய போது மக்கள் வழங்கிய வட்டுக்கோட்டை தீர்மானம் என்ற மக்கள் ஆணை இப்போதும் இருந்து கொண்டிருக்கிறது.
பல்வேறு வழிகளிலும் போராடி பலதையும் இழந்திருக்கிற இந்த நேரத்தில் நாம் இராஐதந்திர ரீதியாக போராடுகிற நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம். இதனூடாக நாம் எமது இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும். இப்போது நாம் முன்னெடுத்துள்ள பயணமும் பதவிக்கானது அல்ல.
எமது இனத்தின் அடையாள குறியீடாகவே இத் தேர்தலில் போட்டியிடுகிறேன். இதில் நீங்கள் எனக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் எனக்கானது என்பதை விடவும் உங்களுக்கானது இனத்திற்கானது தான் என்பதை அனைத்து உறவுகளும் புரிந்து கொள்ள வேண்டும்.
எமது இனத்திற்காக பல்வேறுபட்ட போராட்டங்களை அகிம்சை ரீதியில் நடாத்தியவர்கள் நாங்கள். முதலில் தந்தை செல்வா அகிம்சை ரீதியில் போராடினார். அதன் பின்னர் தலைவர் பிரபாகரன் போராடியிருந்தார்.
சதி வேலைகள்
இந்த தலைவர்கள் இனத்திற்கீக போராடிய காலங்களில் வடக்கு கிழக்கை எந்தவித்திலும் பிரித்து பார்க்கவில்லை. இங்கிருந்த வடக்கு தலைமைகள் கிழக்கை விட்டு எதையும் செய்யவும் இல்லை. குறிப்பாக வடக்கு கிழக்கை இணைத்தே அவர்கள் தமது செயற்பாட்டை முன்னெடுத்தனர்.
வடக்கு கிழக்கு என்ற பாகுபாடில்லலாமல் இரண்டையும் இணைத்து அதிலும் கிழக்கில் இருந்து ஒருவரை நிறுத்த வேண்டும் என்பது முதல் என்னைத் தேர்ந்தெடுத்து அதற்கு பல்வேறு தரப்பினரதும் ஆதரவைப் பெற்று இருக்கிற பொது வேட்பாளர் விவகாரம் ஒட்டுமொத்த தமிழ்க மக்களின் திரட்சியாகவே பார்க்கிறேன்.
இதில் என்னை தேர்ந்தெடுத்ததில் பெருமைபடுகிறேன். தமிழ்த் தேசியத்தின் ஒற்றுமைக்கான திரட்சி தொடர வேண்டும். அதுவே எமக்கு எப்போதும் பலமானதாக இருக்கும். இதனை அரசியல் கட்சிகளும் சிவில் சமூகத்தினரும் தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும்.
தமிழ் மக்கள் ஒரணியில் திரளுகின்ற இந்த நேரத்தில் அதனை சகித்துக் கொள்ளாத எம்மவர்கள் சிலரும் தெற்கில் உள்ளவர்களுடன் கூட்டு சேர்ந்து எமக்கு எதிராகவே சதி வேலைகளை செய்கின்றனர்.
குறிப்பாக தமிழ் பொது வேட்பாளர் ஏறக்குறைய ஐந்து இலட்சம் வாக்குகளை பெறுவார் என்பதாக இலந்கை இந்திய புலனாய்வு கட்டமைப்புக்கள் சொல்லி உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிற நேரத்தில் அதற்கு எதிராக தெற்கிலுள்ள பிரதான வேட்பாளர்கள் பலரும் பல கோடிகளை வடக்கு கிழக்கில் கொட்டி தமது முகவர்களை இறக்கி விட்டுள்ளனர்.
அதிலும் இன்றைக்கு எதிர்க்கட்சி தலைவராக இருக்கிற சஜித் பிரேமதாசாவிற்கு தமிழரசுக் கட்சியையும் இணைத்து சஜித்தின் படங்களுடன் போஸ்டர்களை ஒட்டுகின்றனர்.
சஜித்திற்கு ஆதரவு
பாரம்பரிய கட்சியான தமிழரசுக் கட்சியை சஜித்துடன் இணைத்து போஸ்டர் ஒட்டுபவர்கள் வெட்கம் கெட்டவர்கள். அவர்களால் தான் வெட்க கேடான இந்த விடயத்தை செய்ய முடியும்.
இவ்வாறு செய்பவர்கள் பாராளுமன்றம் கலைத்தால் அதன் பின் வரவுள்ள பாராளுமன்ற தேர்தலில் சஜித்தின் கட்சியிலா கேட்க போகிறார்கள். என்னை பொறுத்த வரையில் உண்மையில் இவர்கள் சோரம் போகும் அரசியலை தான் செய்கிறார்கள்.
மேலும் இத் தேர்தல் தொடர்பில் தமிழரசின் மத்தியகுழு ஒரு முடிவை எடுத்ததாக இப்போது சொல்கிறார்கள். ஆனால் சஜித்திற்கு ஆதரவு வழங்குவதென மத்திய குழு முடிவெடுக்கவில்லை.
அதில் இருக்கின்ற ஓரு தரப்பினரே முடிவை எடுத்து ஒட்டுமொத்த முடிவாக கூறி வருகின்றனர். எனவே தமிழ் மக்கள் எதற்கும் குழப்பமடையாமல் தாமாவே சிந்தித்து இனத்தின் குறியீடாக இருக்கிற சங்கிற்கு தமது வாக்கை அளிக்க வேண்டும்
உண்மையில் நீங்கள் ஒவ்வொருவரும் சங்கிற்கு போடுகிற வாக்கு என்பது எனக்கானதல்ல. அது இனத்திற்கானது தான். அதனை உணர்ந்து சங்கிற்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக