உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

ஞாயிறு, 15 செப்டம்பர், 2024

a 69 விடுதலைப் போராட்டத்தை அழித்த ரணிலின் ஆணவம் முடிவிற்குவருவதற்கான நாட்கள் நெங்கிவருவதாக யாழ்மக்கள் தெரிவிப்பு?

 

யாழில் நடுத்தர வர்க்கத்தினருக்கு மகிழ்ச்சி தகவலை வெளிட்ட சஜித்

யாழில் நடுத்தர வர்க்கத்தினருக்கு மகிழ்ச்சி தகவலை வெளிட்ட சஜித் | Fuel Relief For Farmers And Drivers Via Qr

கியு ஆர் (QR CODE) முறையில் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கும், விவசாயிகளுக்கும், கடற்தொழிலாளர்களுக்கும் எரிபொருள் நிவாரணங்களை வழங்குவோம் என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ (Sajith Premadasa) தெரிவித்தள்ளார்.

செல்வந்தர்களுக்கும் பணக்காரர்களுக்கும் இந்த எரிபொருள் நிவாரணம் கிடைக்கப் பெற மாட்டாது எனவும் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்தில் இன்று(15) முன்னெடுக்கப்பட்ட வெற்றிப்பேரணியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் அதனை குறிப்பிட்டார்.

அதிகார பகிர்வு

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், வடகிழக்கு பிரதேசத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்த மக்களுக்கு தீர்வினை பெற்றுக் கொடுப்போம். நல்லிணக்க செயற்பாடுகளின் ஊடாகவே பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வர முடியும்.

யாழில் நடுத்தர வர்க்கத்தினருக்கு மகிழ்ச்சி தகவலை வெளிட்ட சஜித் | Fuel Relief For Farmers And Drivers Via Qr

அது நாட்டின் ஐக்கியத்தை பாதிக்கின்றமையால் நல்லிணக்கத்தை மையப்படுத்தி இளைஞர்களை வலுப்படுத்தும் வேலை திட்டத்தை முன்னெடுப்போம். ஒன்றிணைந்த நாட்டிற்குள் அதிகார பகிர்வுக்காக குறுகிய காலத்திற்குள் மாகாண சபை தேர்தலை நடாத்துவோம்.

மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை மத்திய அரசு எடுத்துக்கொள்ளக் கூடாது. கோட்டாபயவும் ரணிலும் நிறுத்திய வீட்டுத் திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்போம். இளைஞர்களின் தொழில் வாய்ப்பு பிரச்சினையை தீர்ப்பதற்காக புதிய தொழிற்சாலைகளை ஆரம்பிப்போம்.

 வடக்கு கிழக்கு

வீடமைப்பு அமைச்சராக இருந்தபோது நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் வீடமைப்பு நடவடிக்கைகளையும் மாதிரி கிராமங்களை உருவாக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்தோம்.

யாழில் நடுத்தர வர்க்கத்தினருக்கு மகிழ்ச்சி தகவலை வெளிட்ட சஜித் | Fuel Relief For Farmers And Drivers Via Qr

அனைத்து பாடசாலைகளையும் சகல வசதிகளையும் கொண்ட பாடசாலைகளாக மாற்றுவதோடு, அனைத்து வைத்தியசாலைகளையும் சகல வசதிகளும் கொண்ட வைத்தியசாலைகளாகவும் மாற்றுவோம்.

இலவச கல்வியையும் இலவச சுகாதார சேவையையும் வளமான சேவையாக மாற்றுவோம். வட கிழக்கை போன்று ஏனைய மாகாணங்களிலும் பெருந்தொகையான இளைஞர்கள் இருக்கின்றார்கள்.

இவர்களுக்கு நவீன தொழில்நுட்பத்தையும் உயர்கல்வியையும் வழங்க கூடிய வகையில் சர்வதேச தரத்திலான இளைஞர் அபிவிருத்தி மத்திய நிலையங்களை உருவாக்குவோம்.

வறுமை ஒழிப்பு வேலை திட்டம்

வறுமை ஒழிப்பு வேலை திட்டத்தின் ஊடாக 24 மாதங்களுக்கு வரிய குடும்பங்களுக்கு தலா 20000 ரூபா வீதம் ஐந்து பிரிவுகளுக்குள் உள்ளடங்கிய வகையில் பெற்றுக் கொடுப்போம்.


அதனூடாக வறுமையை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுப்போம். பெண்களை மையப்படுத்தி இந்த வேலை திட்டத்தை முன்னெடுப்போம்” என்றார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் (Sumanthiran) , வட மாகாண முன்னாள் தவிசாளர் சி. வி. கே. சிவஞானம், வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கேசவன் சயந்தன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
Gallery

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 204 சர்வதேச பிடியாணை உத்தரவு

சர்வதேச பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தம்பதியினர் கட்டுநாயக்கவில் கைது சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்ட  தம்பதியின...