என்னை தோற்கடிக்க சதி திட்டம் தீட்டும் ரணில், அநுர... சஜித் வெளியிட்ட தகவல்!

ஜனாதிபதி வேட்பாளர்கள் ரணில் மற்றும் அநுர குமார திசாநாயக்க தன்னை தோற்கடிக்கும் சதியில் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்
கேகாலையில் இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச இதனை குறிப்பிட்டுள்ளது.
"அநுர குமார திசாநாயக்க இங்கு வந்து கூட்டம் நடத்தியதாக கேள்விப்பட்டேன். ஆனால் அவர் தனியாக வந்தாராம். ரணில் விக்கிரமசிங்க வரவில்லை.
இப்போது இருவரும் சஜித் பிரேமதாசாவை தோற்கடிக்க வேண்டுமென்று டீல் போட்டுள்ளனர். ஏன்? அவர்கள் பயப்படுகிறார்கள்" என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக