ரஷ்ய படையெடுப்பு: தீவிரமடையும் தாக்குதல், சீர்குலைந்த நகரங்கள்; வீதிகளில் சமையல் - புகைப்படத் தொகுப்பு
யுக்ரேன் நகர மக்களுக்கு வான் தாக்குதல் குறித்து எச்சரிக்கும் சைரன் ஒலியில்தான் நாள் விடிந்தது.
மேலே இருக்கும் புகைப்படம், தலைநகர் கீயவுக்கு கிழக்கு பகுதியில் இருக்கும் பாரிஷிவ்கா என்ற பகுதியில் எடுக்கப்பட்டது.
இதுபோலதான் பல்வேறு நகரங்களில் ராக்கெட், ஏவுகணை தாக்குதல்களின் சுவடுகள் வான் முழுவதும் நிறைந்திருந்தன.
யுக்ரேனில் ரஷ்யா நினைத்ததைக்காட்டிலும் மெதுவாக முன்னேறி கொண்டு செல்லலாம் ஆனால் அதன் ஷெல் தாக்குதல்கள் தீவிரமாக உள்ளன.
ரஷ்ய படையினர் யுக்ரேனின் ராணுவம் தொடர்பான இடங்களில் தாக்குதல்களை நடத்திவருவதாக தெரிவிக்கின்றனர்.
கீழே உள்ள இந்த புகைப்படம், நாட்டின் மையப்பகுதியில் உள்ள காலிநிவ்கா என்ற ராணுவ சேமிப்பு கிடங்கில் நடந்த தாக்குதலை காட்டுகிறது.
இருப்பினும் பொதுமக்கள் இருக்கும் பகுதிகளையும் ரஷ்ய படையினர் தாக்கி வருவதாக யுக்ரேன் மக்கள் தெரிவிக்கின்றனர்.
யுக்ரேனின் கிழக்கு பகுதியில் இருக்கும் கார்ஹீவ் மிக மோசமாக சேதமடைந்த நகரங்களில் ஒன்றாகவுள்ளது.
நகரின் மையப் பகுதிக்குள் நுழைந்தால் வேறு ஒரு உலகத்திற்குள் செல்வது போலக் காட்சியளிக்கிறது.
ரஷ்யா தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருவதன் மூலம் அங்கிருந்த 15 லட்சம் மக்கள் வெளியேறிவிட்டனர் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
காலை பொழுதில் மருந்தகங்கள், வங்கிகள், சூப்பர் மார்கெட்டுகள், பெட்ரோல் நிலையங்களில் மக்கள் வரிசையில் காத்திருந்தனர்.
கார்ஹீவ் நகரில் தன்னார்வலர்கள் ஓயாமல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். படையினருக்கு அவர்கள் உணவு தயாரிக்கின்றனர்.
துல்லியமான அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவரவில்லை என்றாலும், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. பலருக்கு தீவிரமான காயங்கள் ஏற்பட்டிருக்கலாம். பலர் தங்களின் கை கால்களை இழந்துள்ளனர்.
மேரியோபோல் நகரில் நிலைமை மோசமாகவுள்ளது. இருவாரங்களாக நகரம் ரஷ்யப் படையினரால் சூழப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் ஷெல் குண்டு தாக்குதல்களால் மட்டும் இதுவரை 1600 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேரியோபோலிருந்து வெகு சில தூரத்திலிருக்கும் மிகோலைவ் நகரையும் ரஷ்யப் படைகள் கைப்பற்றும் முனைப்பில் தீவிரமாகத் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இங்கு ரஷ்ய படையை எதிர்த்து பொதுமக்களும் சண்டையிட்டு வருகின்றனர்.
நீப்ரோ நகரம் வெள்ளியன்று முதன்முறையாக தாக்குதலுக்கு உள்ளானது.
தலைநகர் கீயவில் தன்னார்வலர்கள் நீண்ட பள்ளங்களைத் தோண்டி தடுப்பு அரண்களை உருவாக்கி வருகின்றனர்.
பல இடங்களில் மக்கள் கூட்டமாக உணவு சமைக்கின்றனர்.
யுக்ரேனிலிருந்து பெண்களும் குழந்தைகளும் தப்பிச் செல்லலாம் ஆனால் ஆண்கள் சண்டையிடத் தயாராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் இதுவரை 25 லட்சம் மக்கள் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர்.
மால்டோவாவில் உள்ள அகதிகள் மையத்தில் குழந்தை ஒன்றைச் சிரிக்க வைக்க முயல்கிறார் கோமாளி வேடமணிந்த ஒருவர்.
லீவிவ் நகரில் அருங்காட்சியகம், தேவாலயங்கள் போன்ற வரலாற்று சிறப்புமிக்க இடங்களைப் பாதுகாக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக