உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

சனி, 12 மார்ச், 2022

mother a 167 ரஸ்ய படைகளுக்கு மிகப் பெரிய இழப்பு 600 பேர் சரணடைவு



ரஷ்ய பெற்றோருக்கு உக்ரைன் அதிபரின் உருக்கமான வேண்டுக்கோள்


 
 
 


உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்திவரும் நிலையில், ரஷ்ய பெற்றோருக்கு உக்ரைன் அதிபர் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷியா 17-வது நாளாக அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் ராணுவ நிலைகள்,ஆஸ்பத்திரிகள், பள்ளிக்கூடங்கள் மற்றும் குடியிருப்பு கட்டிடங்கள் என தாக்குதல்களை விரிவுபடுத்தியுள்ளது.

இந்நிலையில், உக்ரைன் அதிபர் வொலடிமிர் ஜெலன்ஸ்கி (Volatimir Zhelansky) தனது சமூக வலைதள பக்கத்தில், "ரஷ்யத் தாய்மார்கள் உங்கள் பிள்ளைகளை வேறு நாட்டில் சண்டையிட அனுப்பாதீர்கள். உங்கள் மகன்கள் எங்கிருக்கிறார்கள் என்று உடனே உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

ஒருவேளை அவர்கள் உக்ரைனுக்கு வந்திருந்தால் கொல்லப்படலாம் அல்லது சிறைப்பிடிக்கப்படலாம். உக்ரைன் இந்தப் போரை விரும்பவில்லை. ஆனால், எங்கள் நாட்டைப் பாதுகாக்க நாங்கள் தேவையான நடவடிக்கையை எடுப்போம்" என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 313யாழ் செம்மணி புதைகுழி தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு

யாழ் செம்மணி புதைகுழி தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு  செம்மணி – சித்துபாத்தி மனித புதைக்குழி விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் வழக்க...