உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

சனி, 12 மார்ச், 2022

mother a 168 ரஷ்யாவை சுற்றிவளைத்துவிட்ட மேற்குலகம்!!

உக்ரைன் விவகாரத்தில் இந்திய தலையீடு - உலக நாடுகளுக்கும் அழைப்பு

1 மணி நேரம் முன்
0SHARES
  •  
  •  
  •  
Download Now & Watch Free

இரசாயன ஆயுதங்களை தடை செய்யும் ஒப்பந்தத்துக்கு கீழ்படியுமாறு அனைத்து நாடுகளுக்கும் இந்தியா அழைப்பு விடுத்துள்ளதுடன், ரஷ்யா - உக்ரைனுக்கு இடையிலான நேரடிப் பேச்சு வார்த்தையே போர் நிறுத்தத்திற்கு வழி வகுக்குமென நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

உக்ரைன் இரசாயனத் தாக்குதலுக்குத் தயாராகி வருவதாக எழுந்த குற்றச்சாட்டு மற்றும் ரஷ்யாவின் தாக்குதல் குறித்து நேற்று இடம்பெற்ற ஐ.நா பாதுகாப்பு பேரவை கூட்டத்தில் உரையாற்றும்போதே ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி இதனை தெரிவித்தார்.

உக்ரைன் இரசாயனத் தாக்குதலுக்குத் தயாராகி வருவதாக குற்றஞ்சாட்டியுள்ள ரஷ்யா, இந்த விடயம் குறித்து அவசரமாக ஆய்வு செய்ய ஐ.நா பாதுகாப்பு பேரவையை கூட்ட அழைப்பு விடுத்திருந்தது.

இதனையடுத்து. ஐ.நா. பாதுகாப்பு பேரவை கூட்டம் நியூயோர்க் நகரில் நேற்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பேசிய ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி, உக்ரைனின் தற்போதைய நிலைமை குறித்து இந்தியா பலமுறை தீவிர கவலையை வெளிப்படுத்தி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே இடம்பெறும் நேரடிப் பேச்சுவார்த்தைகளே போர் நிறுத்தத்திற்கு வழிவகுக்கும் என்று இந்தியா நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தூதரக ரீதியான நடவடிக்கை மற்றும் பேச்சுவார்த்தையை தவிர வேறு வழியில்லையென்றும் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி இதன்போது தெரிவித்தார்.

ஐ.நா. சாசனம் மற்றும் சர்வதேச சட்டத்தின் கொள்கைகளை கடைப்பிடிக்க வேண்டுமெனவும், நாடுகளின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டையும் அனைத்து நாடுகளும் மதிக்க வேண்டுமென்றும் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, உயிரியல், இரசாயன ஆயுதங்களை தடை செய்யும் ஒப்பந்தத்துக்கு கீழ்படியுமாறு அனைத்து நாடுகளுக்கும் இந்தியா அழைப்பு விடுத்துள்ளதுடன், உயிரியியல் மற்றும் நச்சு ஆயுதங்கள் முழுமையாக தடை செய்யப்படுவதை அனைத்து நாடுகளும் உறுதி செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 205 தமிழர் பகுதியில் தீக்கிரையான பெண்களின் வர்த்தக சந்தை

  தமிழர் பகுதியில் தீக்கிரையான பெண்களின் வர்த்தக சந்தை ; சந்தேக நபர் கைது மட்டக்களப்பு - கல்லடி பழைய பாலத்தில் பெண்களால் முன்னெடுக்கப்பட்டுவ...