உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

ஞாயிறு, 13 மார்ச், 2022

mother a170 ஆவேசமடைந்து உக்ரைன் அதிபர்

 

ஆவேசமடைந்து உக்ரைன் அதிபர் வெளியிட்ட புதிய காணொளி! ரஷ்யாவில் நிலை?

10SHARES
  •  
  •  
  •  
Download Now & Watch Free

உக்ரைன் நாட்டில் ரஷ்யா, புதிய போலி குடியரசை உருவாக்க முயற்சித்து வருகிறது. நாட்டை பிரிக்க சூழ்ச்சி செய்து வருகிறதாக அந்நாட்டின் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி புதிய காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த காணொளியில்,

ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்கள் ஏராளமான ஆயுதங்களை வைத்து இருக்கிறார்கள். ஆனால் ரஷ்யாவால் எங்களை வெற்றி கொள்ள முடியாது. அவர்களுக்கு வெற்றி கிடைக்காது. அவர்களுக்கு அதற்கான வலிமை இல்லை. வெற்றி கொள்வதற்கான உத்வேகம் இல்லை. அவர்கள் வன்முறையை மட்டுமே வைத்து இருக்கிறார்கள்.

பயங்கரவாதத்தை மட்டுமே வைத்து இருக்கிறார்கள். படை எடுப்பாளர்களுக்கு இயல்பான வாழ்க்கைக்கு அடிப்படை இல்லை. ரஷ்யா ஒரு வெளிநாட்டு நிலத்துக்கு வந்தாலும் அவர்களது கனவுகள் சாத்தியமற்றது.

ரஷ்யா படையெடுத்த எல்லா இடங்களிலும் கனவுகள் சாத்திய மற்றது. ரஷ்யா, உக்ரைனில் புதிய போலி குடியரசை உருவாக்க முயற்சித்து வருகிறது. நாட்டை பிரிக்க சூழ்ச்சி செய்து வருகிறது. போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தையில் ரஷ்யா அடிப்படை வேறுபட்ட அணுகுமுறையை கொண்டுள்ளது. பேச்சு வார்த்தையில் ரஷ்யா இறுதி எச்சரிக்கைகளை மட்டுமே விடுத்தது. இவ்வாறு அவர் கூறினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 302 பூமியின் கடைசி நாள் எப்போது : வெளியான அதிர்ச்சி தரும் அறிவிப்பு

  பூமியின் கடைசி நாள் எப்போது : வெளியான அதிர்ச்சி தரும் அறிவிப்பு   பூமியில் அனைத்து உயிர்களும் அழியும் நாளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக...