உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

செவ்வாய், 8 மார்ச், 2022

mother a 157 நாட்டிற்குள் இந்திய அமைதிப்படை நுழையலாம்!


நாட்டிற்குள் இந்திய அமைதிப்படை நுழையலாம்! முக்கிய புள்ளிகளை சர்வதேசத்திற்குள் நகர்த்தும் 

நாட்டிற்குள் இந்திய அமைதிப்படை வருவதற்கு வாய்ப்பிருப்பதாக பிரான்ஸ் மனித உரிமைகள் இல்லத்தின் இயக்குனரும், மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான எஸ்.வி.கிருபாகரன் தெரிவித்துள்ளார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

இன்னும் பல முக்கிய விடயங்களுடன் வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,

 

இதன்போது வடக்கு, கிழக்கு பகுதியை சீனா ஆக்கிரமிக்கின்ற அல்லது முழுமையான ஒரு பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுகின்ற போது இராணுவ நடவடிக்கையொன்றை இந்தியா மேற்கொள்வதற்கு வாய்ப்பு இருக்கிறதா கடந்த காலம் போல் என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், ஈழத்தமிழர்களின் விடயத்தை அலட்சியம் செய்தால் இந்தியாவின் எதிர்காலம் நிச்சயம் சிக்கலில் முடியும்.

இப்போதைய நிலைமையில் ஈழத்தமிழ் மக்கள் ஒற்றுமையாக இந்தியாவிடம் கையை காட்ட வேண்டும். இந்தியாவை நோக்கிய ஊர்வலங்களை செய்ய வேண்டும். இந்திய அமைதிப்படை இலங்கைக்குள் வருவதற்கு என்றும் வாய்ப்பிருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சிங்கள பௌத்த அரசிற்காக இன்று தற்சமயத்தில் சர்வதேச பிரச்சாரத்தில் ஈடுபடுபவர்கள் யார்? முதலாவது ஜீ.எல்.பீரிஸ், அவருடைய செயலாளர் கொலம்பகே, நீதியமைச்சர் அலிசப்ரி, அதேபோல் இந்தியாவில் இருக்கிறார் மிலிந்த மொரகொட, சீனாவில் பாலித கொகன, அமெரிக்காவில் முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ், முன்னாள் மனித உரிமை அமைச்சர் மஹிந்த சமரசிங்க, ஜெனீவாவில் சந்திர பெரும ஆகியோரே இவ்வாறு சர்வதேச பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர் என சுட்டிக்காட்டியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 338 யாழ். கடற்கரையில் இளம் பெண்ணின் சடலம் ;

 தீவிர விசாரணையில் பொலிஸார் 8 முதல் 22 வயதி இவ்வாறு து. எனினும் இவ்வாறு உயிரிழந்த பெண்ணின் விபரம் இதுவரை வெளியாகவில்லை இந்நிலையில் மேலதிக வி...