உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க முடியும். நிர்வாகி b10 பிரிகேடியர், கேணல் தர அதிகாரிகள் b11 லெப் கேணல் தர அதிகாரிகள் b12 மேஜர் தர அதிகாரிகள் 13 கப்டன் தர அதிகாரிகள் b14 லெப்ரினன் தரஅதிகாரிகள் b15 2ம் லெப்ரினன் தரஅதிகாரிகள் b16 வீர வேங்கைகள் b17 உதவியாழர் b18 கரும்புலிகள் b19 தலைவர் படம்
உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

ஞாயிறு, 20 மார்ச், 2022
mother a 187 மகிந்தவுக்கு எதிராக தொடரும் போராட்டம்!!
மகிந்தவின் யாழ்.வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் மீது பொலிஸார் தாக்குதல்! மூவர்
யாழில் பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த வந்த மக்கள், வீதியில் வழிமறிக்கப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் வாகன சாரதி பொலிஸாரின் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் பயணமாக நேற்றைய தினம் சனிக்கிழமை வந்திருந்த பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மட்டுவிலில் புதிதாக அமைக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையத்தினை திறந்து வைத்துள்ளார்.
குறித்த நிகழ்வுக்கு பிரதமர் வருவதனை எதிர்த்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் உள்ளிட்டோர் எதிர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுக்க முயன்றனர்.
நிகழ்வு நடைபெறும் இடத்தில் போராட்டத்தினை முன்னெடுக்க முல்லைத்தீவில் இருந்து, வந்திருந்தவர்களை மட்டுவில் அம்மன் ஆலயத்திற்கு அருகில் பொலிஸார் வாகனத்தில் இருந்து இறங்காதவாறு தடுத்து நிறுத்திருந்தனர்.
இதேவேளை பொலிஸாரின் காவலையும் மீறி பேருந்திலிருந்து இறங்கிய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வீதியில் அழுது புரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பிரதமரை வரவேற்கும் வகையில் கட்டப்பட்டு இருந்த பதாகைகளை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் எரித்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதேவேளை , மத்திய நிலைய பகுதியில் பெருமளவான பொலிஸார் , இராணுவத்தினர் குவிக்கப்பட்டுப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்போது பொலிஸாரினால் மிலேச்சத்தனமாக தாக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க முல்லைத்தீவு மாவட்ட தலைவி ஈஸ்வரி மற்றும் வவுனியா மாவட்ட செயலாளர் ஜெனிட்டா ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
a 302 பூமியின் கடைசி நாள் எப்போது : வெளியான அதிர்ச்சி தரும் அறிவிப்பு
பூமியின் கடைசி நாள் எப்போது : வெளியான அதிர்ச்சி தரும் அறிவிப்பு பூமியில் அனைத்து உயிர்களும் அழியும் நாளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக...

-
உலக நாடுகளில் உள்ள தேசியச் செயல்பாட்டாளர்கல் இணைந்து சீரோ உதவித்திடம் ஊடாக தாயகத்தில் வறுமைகோட்டில் வாழும் மக்களை இனங்கண்டு இவ் உதவி செய்யப...
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்று ஆவணத்தொகுப்பு......... தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆசிரியர் புத்தகம் LTTE MASTER BOOK தலைமைப்பீடத்தி...
-
விடுதலைப்புலிகளின் தலைவரை பேச்சுக்கு அழைத்த மகிந்தவிடம் பின்னர் ஏற்பட்ட மனமாற்றம் (VIDEO) தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரிடம் காணப்பட்ட ஆய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக