உக்ரைன் - ரஷ்ய போர்! உயிரிழப்பு விபரங்களை வெளியிட்டுள்ள ஐ.நா
உக்ரைன் - ரஷ்யா நாடுகளுக்கு இடையிலான போர் இன்றுடன் 14 ஆவது நாளாக நீடித்து வருகின்றது.
உக்ரைனின் சில நகரங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றிவிட்டன. தலைநகர் கீவ், கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை பிடிக்க ரஷ்ய இராணுவம் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றது.
இதுவரை பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 20 லட்சம் பொதுமக்கள் உக்ரைனில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இந்த நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரில் மார்ச் 8 ஆம் திகதி அதிகாலை வரை 474 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக ஐ.நா சபையின் மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஐ.நா சபையின் மனித உரிமை ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின் படி, உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரில் மார்ச் 8 ஆம் திகதி அதிகாலை வரை 474 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களில் ஆண்கள் 97 பேர், பெண்கள்-58 பேர், சிறியவர்கள்-8 பேர், சிறுமிகள்-8 பேர், 17 குழந்தைகள், 294 நபர்களின் பாலினம் தெரியவில்லை என்றும் கூறியுள்ளது.
மேலும், தாக்குதலில் 861 பேர் காயமடைந்துள்ளனர். இதில் ஆண்கள் -76 பேர், பெண்கள் -55 பேர், சிறுவர்கள் - 3 பேர், சிறுமிகள்-11, 30 குழந்தைகள், 686 நபர்களின் பாலினம் தெரியவில்லை. பெரும்பாலான பொதுமக்கள் பீரங்கி தாக்குதல், ராக்கெட் வீச்சுகள், விமான தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக