உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

ஞாயிறு, 6 மார்ச், 2022

mother a153

 

கிளிநொச்சி பகுதி கோர விபத்தில் ஒருவர் பலி

2 மணி நேரம் முன்
0SHARES
  •  
  •  
  •  
Download Now & Watch Free


கிளிநொச்சி இரணைமடு அம்பாள்நகர் பகுதியில் நேற்று மாலை 7 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரணைமடு பகுதியிலிருந்து A9 வீதி நோக்கி பயணித்த ஐஸ்கிறீம் வண்டியுடன் எதிரே பயணித்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி திருவையாறு பகுதியை சேர்ந்த பத்மநாதன் சஞ்ஜீவன் எனும் 29 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிபவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரிணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 205 தமிழர் பகுதியில் தீக்கிரையான பெண்களின் வர்த்தக சந்தை

  தமிழர் பகுதியில் தீக்கிரையான பெண்களின் வர்த்தக சந்தை ; சந்தேக நபர் கைது மட்டக்களப்பு - கல்லடி பழைய பாலத்தில் பெண்களால் முன்னெடுக்கப்பட்டுவ...