மோடியின் சொல்லுக்கு கட்டுப்பட்ட புட்டின்! வியப்பில் மேற்குலகம் (VIDEO)
இந்து சமுத்திர பிராந்தியத்தில் தமது நலனை அடைவதற்கு ரஷ்யாவிற்கு இந்தியாதேவையாக இருக்கின்றது. ஆகவே இந்தியாவினுடைய சொல்லை கேட்கக்கூடிய நிலையிலே ரஷ்யா எப்போதும் இருக்கும் என அரசியல் ஆய்வாளர் திபாகரன் தெரிவித்துள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மோடி அவர்கள் இன்றிருக்கக்கூடிய இந்த யுத்த களமுனையில் ஒரு வல்லமை மிக்கவராக நீங்கள் பார்க்கின்றீர்களா? யுத்த தவிர்ப்பு ஒன்றை ஏற்படுத்தும் படி பிரான்சினுடைய அதிபர் அதே போன்று பல்வேறுப்பட்ட மேற்குலக தலைவர்கள் எல்லாம் கோரிக்கை விட்டபோதும் அதனை ஒரு பொருட்டாக மதிக்காத ரஷ்ய ஜனாதிபதி புடின், மோடியினுடைய கோரிக்கையை ஏற்று அந்த நடவடிக்கையினை மேற்கொண்டிருக்கின்றார். அப்படியென்றால் உலக ஒழுங்கில் ரஷ்ய ஜனாதிபதி புடின்னை கட்டுப்படுத்தக் கூடிய அதிகாரம் மிக்கவராக மோடி இருக்கின்றாரா? என எமது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அரசியல் ஆய்வாளர் திபாகரன்,
நிச்சயமாக இந்த உலக அரசியலில் ஐ. நாவில் இந்த வீட்டோ அதிகாரம் உடைய ஐந்து நாடுகளுக்கு அடுத்தப்படியாக இருக்கின்ற ஒரு பெரிய நாடு இந்தியாதான்.
உலகினுடைய மிகப் பெரிய பொருளாதார சக்தியை கொண்ட நாடு, இரண்டாவது மிக அதிக சனத்தொகையை கொண்ட நாடு, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற அடிப்படையில் அதாவது மோடி அவர்களுக்கு ஒரு கௌரவமும், அந்தஸ்தும் இருக்கின்றது.
அதேநேரத்தில் இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்குமான நீண்டகால பாதுகாப்பு ஒப்பந்தங்கள், பொருளியல் ஒப்பந்தங்கள் இருகின்றன.
அந்த அடிப்படையில் ரஷ்யாவிற்கு இந்தியா தேவையாக இருகின்றது. இந்து சமுத்திர பிராந்தியத்தில் தமது நலனை அடைவதற்கு ரஷ்யாவிற்கு இந்தியா தேவையாக இருக்கின்றது. ஆகவே இந்தியாவினுடைய சொல்லை கேட்கக்கூடிய நிலையிலே ரஷ்யா எப்போதும் இருக்கும் என தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக