ஐ.நாவில் இலங்கைக்கு எதிரான பிரித்தானியாவின் புதிய நகர்வு! மோசமடையும் ஈழத்தமிழர் விவகாரம்
இலங்கையில் நடந்த மனித பேரவலத்துக்கான ஒரு பொறுப்புக்கூறல் வேண்டும் என்றும், தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வு வேண்டும் என்று கூறி பிரித்தானியாவின் வாய்மூல அறிக்கையிலேயே கூறி வருகின்றார்கள் என பிரித்தானிய தமிழர் பேர்வையின் மனித உரிமைகள் ஒருங்கிணைப்பாளர் சுதாகரன் தெரிவித்துள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ஐ.நாவில் பிரித்தானியாவின் செயற்பாட்டால் எதிர்வரும் காலங்களில் ஈழத்தமிழர்களுக்கு ஒரு இக்கட்டான காலம் என எடுத்துக்கொள்ளலாமா என எமது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்,
நிச்சயமாக இல்லை ஏனென்று கூறினால், இங்கே நாங்கள் 400 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இருக்கின்றோம். பிரித்தானியாவின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றோம்.
பிரித்தானிய அரசாங்கத்தின் நெகிழ்வு தன்மையில் இருந்து வெளியே வந்த பின்பு அவர்களுக்கு தங்களுடைய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்ற ஒரு வேலை இருகின்றது.
ஆகவே அவர்கள் இந்த அரசாங்கம் இப்படியான வேலையை செய்தாலும் நாங்கள் அரசாங்கத்திற்கு கொடுக்கும் அழுத்தம் அது கடந்த காலங்களிலே நாம் நிகழ்த்தி காட்டியிருக்கின்றோம்.
ஆகவே இந்த தீர்மானத்தில் பிரித்தானிய அரசாங்கம் இதனை முன்னெடுத்தாலும் இந்த தீர்மானத்தை கொண்டு வந்த அமெரிக்கா அங்கு மீண்டும் வந்திருக்கின்றது.
அது மட்டுமின்றி முக்கியமாக எங்களுடைய நாட்டுக்கு பக்கத்தில் இருக்கக்கூடிய வல்லரசு நாடு இன்று எவ்வளவு காலத்திற்கு பின்பு இன்று இலங்கையில் நடந்த மனித பேரவலத்துக்கான ஒரு பொறுப்புக்கூறல் வேண்டும் என்றும், தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வு வேண்டும் என்று கூறி அவர்களுடைய வாய்மூல அறிக்கையிலே கூறிவருகின்றார்கள். ஆகவே அங்கு மாற்றங்கள் நடைபெறுகின்றன எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக