உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

புதன், 30 மார்ச், 2022

mother a 205 6 பேர் தப்பிச் சென்றுள்ளனர்:

அனுராதபுரம் வான் படைத்தளம் மீது தாக்குதல் நடத்தியவர்களில் 6 பேர் தப்பிச் சென்றுள்ளனர்:
இக்பால் அத்தாஸ். அனுராதபுரம் வான் படைத்தளம் மீது தாக்குதல் நடத்தியவர்களில் 6 பேர் தப்பிச் சென்றுள்ளனர்: இக்பால் அத்தாஸ். அனுராதபுரம் வான் படைத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் 27 பேர் கொண்ட அணி தாக்குதல் நடத்தியதாகவும் அவர்களில் 6 பேர் தப்பிச் சென்றுள்ளதாகவும் “சண்டே ரைம்ஸ்” வார ஏட்டில் அதன் பாதுகாப்பு ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார். அதன் முக்கிய பகுதிகள் வருமாறு: கட்டடையாக தலைமுடி வெட்டிய ஆண்களும், பெண்களுமான கரும்புலிகள், இராணுவ உடையை அணிந்திருந்தனர். அவர்கள் தற்கொலை குண்டு அங்கிகளையும் அணிந்திருந்தனர். கனரக ஆயுதம் தரித்த அந்த அணியினர் இராணுவ அதிகாரி ஒருவருக்கு சொந்தமான கைவிடப்பட்ட இல்லத்தில் தங்கியிருந்தனர். இது அனுராதபுரம் தளத்திற்கு அண்மையாக இருந்தது. முகாமின் வேலிகளை நோக்கி திங்கட்கிழமை விடுதலைப் புலிகள் அதிகாலை 3:00 மணிக்கு ஊர்ந்து சென்றனர். பின்னர் அவர்கள் வேலிகளை வெட்டி ஒவ்வொருவராக உள்ளே புகுந்தனர். வானூர்தி ஓடுபாதை வடகிழக்காகவும், தென்மேற்காகவும் அமைந்திருந்தது. அதனை விரிவாக்கும் வேலைகளும் நடைபெற்று வந்தன. விடுதலைப் புலிகள் 300 மீற்றர் தூரம் ஓடுபாதைக்கு குறுக்காக நடந்து வானூர்தித் தரிப்பிடத்தை அடைந்தனர். அது திறந்த பகுதி அங்கு எதிர்ப்புக்கள் இருக்கவில்லை. அங்கு பாவனையில் உள்ள மற்றும் பாவனையில் அல்லாத வானூர்திகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அவற்றின் மீது ஆர்பிஜி உந்துகணை செலுத்திகள், இலகுரக டாங்கி எதிர்ப்பு உந்துகணை செலுத்திகள் ஆகியவற்றின் மூலம் விடுதலைப் புலிகள் தாக்குதலைத் தொடங்கினர். அது முகாமின் அமைதியை குலைத்தது. எனினும் தம்மை தயார்படுத்திக்கொண்டு தமது நிலைகளுக்கு செல்ல ஆரம்பித்த வான் படையினரை அங்கு நிலை எடுத்திருந்த விடுதலைப் புலிகள் தாக்கினர். பல வான் படையினர் தாக்குதலுக்கு உள்ளாகி வீழ்ந்தனர். தளத்தில் பெரும் வெடியோசைகளும், தீப்பிழம்புகளும் எழுந்தன. அனுராதபுரத்திற்கும் கொழும்பிற்கும் இடையிலான தொலைபேசி இணைப்புக்கள் மிகவும் வேகமாக இயங்கின. தாக்குதல் செய்தி எல்லா இடமும் பரவியது. செய்தி உலகெங்கும் பரவியது. அனைத்துச் செய்தியாளர்களும் கெரில்லாக்கள் முதற் தடவையாக வான், தரைத் தாக்குதல்களை இணைத்து மேற்கொள்வதாக பேசிக்கொண்டனர். விடுதலைப் புலிகள் பலவீனமடைந்து விட்டதாக அரசு தெரிவித்து வந்த சூழலில் இது நடைபெற்றுள்ளதாக சில ஊடகவியலாளர்கள் தெரிவித்தனர். கொழும்பில் உள்ள வான் படையினரின் நடவடிக்கை தலைமையகம் வேகமாக செயற்பட்டது. அனுராதபுரம் தளத்தில் உள்ள சில வானூர்திகளையாவது பாதுகாப்பாக நகர்த்துவது தொடர்பான நடவடிக்கைகளில் உயரதிகாரிகள் இறங்கினர். இது இரு நோக்கங்களைக்கொண்டது. ஒன்று வானில் எழும் வானூர்திகள் மூலம் விடுதலைப் புலிகளை தாக்குவது. இரண்டாவது தரையில் உள்ள வானூர்திகளைப் பாதுகாப்பது. ஆர்பிஜி மற்றும் ஏனைய ஆயுதங்களின் தாக்குதல்கள் தீவிரம் அடைந்தன. வவுனியா வான் படைத்தளத்தில் இருந்து உதவிகளை பெறுவதற்கும் அவர்களுக்கு நேரம் இருக்கவில்லை. எனினும் அரை மணிநேரத்திற்குப் பின்னர் வவுனியாவில் இருந்து பெல்-212 ரக உலங்குவானூர்தி புறப்பட்டுச் சென்றது. இரு வானோடிகளையும் இரு துப்பாக்கிதாரிகளையும் கொண்ட இந்த உலங்குவானூர்தி மிகிந்தலைப் பகுதியில் உள்ள டொரமடலாவா பகுதியில் சூட்டுக்கு இலக்காகி வீழ்ந்து நொறுங்கியுள்ளது. அதில் இருந்த அனைவரும் கொல்லப்பட்டுள்ளனர். வான் படைத்தளத்தின் ஓடுபாதையில் நிறுத்தப்பட்ட மற்றும் தரிப்பிடங்களில் நிறுத்தப்பட்ட வானூர்திகள் வெடித்துச் சிதறிக்கொண்டிருந்தன. தாக்குதல் அணியானது வன்னியில் உள்ள கட்டளை மையத்துடன் தொடர்ச்சியான தொடர்புகளை பேணி வந்திருந்தது. தாக்குதல் தொடர்பான தகவல்களையும் வழங்கிக்கொண்டிருந்தனர். தாக்குதல் தொடங்கிய 45 நிமிடங்களில் விடுதலைப் புலிகளின் இரு சிலின்-143 வானூர்திகள் வந்து மூன்று குண்டுகளை வீசின. விடுதலைப் புலிகளின் வானூர்தி வந்து குண்டு வீசிவிட்டுச் சென்றதனை வவுனியாவில் இருந்த படையினரும், காவல்துறையினரும் கண்டனர். எனினும் விடுதலைப் புலிகளின் வானூர்திகளைத் தாக்கச் சென்ற உலங்குவானூர்தி வீழ்ந்து நொறுங்கி விட்டது. ஆனால் எவ்வாறு இது நிகழ்ந்தது என்பது தொடர்பாக குழப்பங்கள் தோன்றியுள்ளன. விடுதலைப் புலிகளின் தாக்குதலில் அது வீழந்ததா? அப்படியானால் மற்றைய உலங்குவானூர்தியை அனுப்புவது பாதுகாப்பானதா என்ற கேள்வியும் எழுகின்றது. இராணுவத்தின் சிறப்புப் பயிற்சி பெற்ற படையினர், வான் படையினருடன் இணைந்து விடுதலைப் புலிகளை முறியடிக்கும் தாக்குதலில் ஈடுபட்டனர். சில விடுதலைப் புலிகள் தமது தற்கொலை அங்கிகளை வெடிக்க வைத்து இறந்தனர். சிலர் படையினருடனான மோதல்களில் இறந்தனர். தளத்தை முற்றாகக் கைப்பற்றி தமிழீழக் கொடியை ஏற்றும் விடுதலைப் புலிகளின் திட்டத்தை முறியடிப்பதற்காக படையினர் கடும் எதிர்த்தாக்குதலை மேற்கொண்டனர். முற்பகல் 9:00 மணியளவில் எஞ்சியிருந்த ஒன்று அல்லது இரண்டு விடுதலைப் புலிகளும் கொல்லப்பட்டனர். ஒரு விடுதலைப்புலி உறுப்பினர் வேப்ப மரத்தில் ஏறி அதன் மூலம் வானூர்தி தரிப்பிடத்தின் கூரையில் ஏறி படையினர் மீது தாக்குதலை நடத்தினர். இச்சமரின் போது ஒரு சமயத்தில் கவச வாகனம் ஒன்று கொண்டுவரப்பட்டும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் கவச வாகனத்தின் சக்கரம் சேதமடைந்ததால் அது செயலிழந்தது. எனினும் பின்னர் கூரையில் இருந்த விடுதலைப் புலி உறுப்பினர் சுட்டுக்கொல்லப்பட்டார். இத்தாக்குதலின் போது விடுதலைப் புலிகளின் 20 சடலங்களை கைப்பற்றியதாக படைத்துறைப் பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல தெரிவித்திருந்தார். ஆனால் 21 விடுதலைப் புலிகள் பங்குபற்றியதாக விடுதலைப் புலிகள் தெரிவித்திருந்தனர். எனவே கொல்லப்பட்ட எண்ணிக்கையில் ஒருவர் வேறுபடுகின்றார். விடுதலைப் புலிகளால் வெளியிடப்பட்ட புகைப்படத்தில் தாக்குதலாளிகள் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் அமர்ந்திருப்பது வெளியிடப்பட்டிருந்தது. இது தாக்குதலில் பங்குபற்றிய சில உறுப்பினர்கள் பாதுகாப்பாக திரும்பும் பொருட்டு புத்திசாலித்தனமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை. குறைந்தது ஒன்று அல்லது இரண்டு விடுதலைப் புலிகளாவது தளம் திரும்பும் பொருட்டு மேற்கொள்ளப்பட்டிருந்தது. தாக்குதல் தொடர்பாக குற்றப் புலனாய்வுத்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இத்தாக்குதலில் 27 விடுதலைப் புலிகள் பங்குபற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது. அதிகாலை 5:00 மணியளவில் இரு குழுக்களாக தாக்குதலாளிகள் வெவ்வேறு இடைவெளிகளில் தளத்தை விட்டுச்சென்றதை கண்டதாக தளத்திற்கு அருகில் வசிக்கும் சில கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு குழுவிலும் 3 பேர் இருந்தனர். அது சரி எனில் தாக்குதலில் பங்குபற்றியதாக கூறப்படும் ஒரு விடுதலைப்புலி உறுப்பினரின் நிலை தொடர்பான விளக்கமே தரப்படவில்லை. மூன்று வானூர்திகள் சேதமடைந்ததாக வான் படைப் பேச்சாளர் அஜந்தா சில்வா ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தார். ஆனால் 7 வானூர்திகள் அழிக்கப்பட்டதாகவும், பெல்-212 ரக உலங்குவானூர்தி வீழ்ந்து நொறுங்கியதாகவும் பிரதமர் ரட்ணசிறீ விகிரமநாயக்க கடந்த புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். கொழும்பில் உள்ள வான்படை தலமையகத்தில் உள்ள சில உயர் அதிகாரிகள், அனுராதபுரம் படைத்தளத்தில் உள்ள அதிகாரிகள் ஆகியோருடன் நான் மேற்கொண்ட உரையாடல்களில் இருந்து தாக்குதல் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொண்டேன். தாக்குதல் நடைபெற்ற போது தளத்தில் 27 வானூர்திகள் தரித்து நின்றன. அவற்றில் சில சேவையில் ஈடுபட முடியாதவை. எனவே சேதமடைந்த வானூர்திகளின் விபரம் வருமாறு: வான் படைத் தரிப்பிடத்தில் வைத்து அழிக்கப்பட்ட வானூர்திகள்: ஆளில்லாத உளவு வானூர்திகள் – 02 இவை மிகவும் புதியன, வான் படையினரின் ஆவணங்களில் கூட இன்னும் சேர்க்கப்பட்டிருக்கவில்லை. இஸ்ரேலின் புளு ஹரிசோன் நிறுவனத்திடம் இருந்து பரீட்சார்த்த நடவடிக்கைகளுக்காக கொண்டுவரப்பட்டிருந்தன. எம்ஐ-17 துருப்புக்காவி உலங்குவானூர்தி – 01 இது எரிந்து சாம்பலாகி விட்டது. சீனத் தயாரிப்பு பிரி-6 பயிற்சி வானூர்திகள் – 04 வானூர்தி ஓடுபாதைக்கு அருகில் வைத்து அழிக்கப்பட்ட வானூர்திகள் அமெரிக்க தயாரிப்பான பீச்கிராஃப் 200 வானூர்தி – 01 இது முக்கிய பிரமுகர்களின் பயணத்திற்கு என 1985 ஆம் ஆண்டு கொள்வனவு செய்யப்பட்டது. பின்னர் 1995 ஆம் ஆண்டு கண்காணிப்பு வானூர்தியாக மாற்றப்பட்டதுடன், அதிக பெறுமதியுள்ள ஒளிப்படக்கருவி உட்பட பல சாதனங்களும் பொருத்தப்பட்டன. இதன் இழப்பு ஆழ்கடல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் பாதிப்புக்களை ஏற்படுத்தும். சீனத் தயாரிப்பு கே-8 பயிற்சி வானூர்தி – 01 எம்ஐ-24 ரக தாக்குதல் உலங்குவானூர்தி – 01 இவை முற்றாக அழிந்து போனவை. இவை தவிர சேவையில் ஈடுபடும் மற்றும் சேவையில் ஈடுபடாத பல வானூர்திகளும் சேதமடைந்துள்ளன. அவற்றில் சிலவற்றையே மீண்டும் பயன்படுத்த முடியும் என வான் படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சேதமடைந்த வானூர்திகளை வான் படை பதிவு புத்தகத்தில் இருந்து அகற்றுவதற்கான அனுமதிக்காக வான் படைத்தளபதி பாதுகாப்பு அமைச்சிற்கு கடிதம் எழுதும் வரையிலும் இழக்கப்பட்ட வானூர்திகளின் எண்ணிக்கை யாருக்கும் தெரியவில்லை. அதன் தகவல் வருமாறு: வான் படைத் தரிப்பிடத்தில் சேதமடைந்த வானூர்திகள்: வான் படைக்குச் சொந்தமான ஆளில்லாத உளவு வானூர்தி – 01 பிரி-6 பயிற்சி வானூர்திகள் – 03 கே-8 பயிற்சி வானூர்திகள் – 05 இந்த வானூர்திகள் சிலவற்றின் கண்ணாடி கூரைகள் உருகிப் போனதுடன், உலோகப்பகுதிகளும் சிதைந்து போயுள்ளன. அவற்றில் சில கைவிடப்பட்டுள்ளதுடன், அதன் பாகங்கள் தான் பயன்படுத்த முடியும். சியாமாசெற்றி வானூர்திகள் – 04 (சேவையில் ஈடுபடுவதில்லை) ஓடுபாதையில் சேதமடைந்த வானூர்திகள்: எம்ஐ-24 ரக தாக்குதல் உலங்குவானூர்தி – 01 சேதமடையாத வானூர்திகள்: எம்ஐ-17 உலங்குவானூர்திகள் – 03 இவை தாக்குதல் நடைபெற்ற இடத்தில் தூரத்தில் நிறுத்தப்பட்டிருந்தன. வான் படைத்தளத்திற்கு ஏற்பட்ட சேதம் 30 மில்லியன் டொலர்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. அவை ஒரு வருடத்திற்கு முன்னர் கணிக்கப்பட்ட விலைகள். ஆனால் மீளக் கொள்வனவு செய்யும் விலைகள் மிகவும் அதிகமானவை. வான் கலங்களின் விலைகள் உயர்ந்து செல்வதுடன், டொலரின் பெறுமதியும் அதிகரித்து செல்கின்றது. விடுதலைப் புலிகளின் தாக்குதல் தொடர்பாக இரு காரணிகள் நோக்கத்தக்கது. முகாமின் ஒவ்வொரு நடவடிக்கைகள் தொடர்பாகவும் அவர்கள் தகவல்களை உடனுக்குடன் பெற்று வந்திருக்கின்றனர். அது உள்வீட்டுத் தகவல்களாகும். அவற்றின் உதவியுடன் அவர்கள் வன்னியில் மாதிரி வடிவங்களை அமைத்து கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். விடுதலைப் புலிகள் எவ்வாறு இத்தகவல்களை பெற்றார்கள் என்பது தான் முக்கிய கேள்வி. தளத்தின் வானூர்தி ஓடுபாதையின் விரிவாக்கம் காரணமாக அதன் பாதுகாப்புக்களில் சில மாதங்களாக பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இந்த நடவடிக்கை தனியார் ஒப்பந்தகாரருக்கு வழங்கப்பட்டிருந்தது. தினமும் கட்டப் பொருட்களுடன் பெருமளவான பாரஊர்திகள் அங்கு செல்வதுண்டு. முகாம் தாக்குதல் தொடர்பாகவும், பெல்-212 ரக உலங்குவானூர்தி வீழ்ந்து நொறுங்கியது தொடர்பாகவும் விசாரணைகளை மேற்கொள்வதற்கு இரு குழுக்கள் அமைக்கப்பட்டள்ளன. இவற்றில் ஒன்று குற்றப்புலனாய்வுத் துறையினரால் மேற்கொள்ளப்படுவது முக்கியமானது. காவலரண்களில் இருந்து எந்தவித எதிர்ப்புக்களும் இன்றி விடுதலைப் புலிகள் கம்பி வேலியை வெட்டி உட்புகுந்தது வெட்கக்கேடானது. கடந்த கால அனுபவங்களில் இருந்து கூட படையினர் பாடங்களை கற்கவில்லை. இதே போன்றே விடுதலைப் புலிகள் 2001 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கட்டுநாயக்க வான் படைத்தளம் மீதான தாக்குதலின் போதும் உள்நுழைந்திருந்தனர். சில மாதங்களுக்கு முன்னர் சப்புகஸ்கந்தவில் உள்ள எரிபொருள் சேமிப்பு களஞ்சியத்தின் கம்பி வேலியை வெட்டி விடுதலைப் புலி உறுப்பினர் உட்புக முயற்சித்திருந்தார். அதற்கு அண்மையில் ஒரு சடலம் காணப்பட்டது. புலனாய்வு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அவரை பாம்பு கடித்திருந்ததாக பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது. காவல்துறையினர் சில ஆவணங்களையும் கைப்பற்றியிருந்தனர். அவர் எரிபொருள் சேமிப்பு நிலையத்தின் மீதான தாக்குதலுக்கான ஆரம்பகட்ட புலனாய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாக பின்னர் அறியப்பட்டது. கட்டுநாயக்க தாக்குதலில் வான்படையினர் 8 வானூர்திகளை இழந்திருந்தனர். ஆனால் அனுராதபுரம் தாக்குதலில் அதிக வானூர்திகள் இழக்கப்பட்டுள்ளன. கட்டுநாயக்கா வான் படைத்தளம் மீதான தாக்குதலில் வானூர்தி தரிப்பிடங்களில் இருந்த வானூர்திகள் தாக்கப்படவில்லை. ஓடுபாதையில் நின்ற வானூர்திகளே தாக்கப்பட்டன. ஆனால் அனுராதபுரத்தில் தாக்குதலாளிகள் தரிப்பிடங்களுக்குள் சென்று தாக்கியுள்ளனர். யால வனவிலங்கு சரணாலயத்தில் தாக்குதல் நடைபெற்ற ஒரு வாரத்தில் இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சிங்க றெஜிமென்டை சேர்ந்த 12 ஆவது பற்றாலியன் துருப்புக்களின் உதவியுடன் தற்போதும் அங்கு தேடுதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மாவீரர் நாள் உரைக்கு 30 நாட்கள் இருக்கையில் இந்த இரு தாக்குதல்களும் நடைபெற்றுள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Related

செவ்வாய், 29 மார்ச், 2022

mother a 204 புலம்பெயர் வெளிநாட்டவர் அனுப்பும் பணம்

புலம்பெயர் வெளிநாட்டவர் அனுப்பும் பணம் தொடர்பில் முடிவை மாற்றிய இலங்கை அரசு (Video) வர்த்தக வங்கிகளில் இருக்கும் வெளிநாட்டு நாணயங்களை மத்திய வங்கிக்கு விற்க வேண்டும். நாங்கள் அதை வாங்கி அதற்கு சமமான இப்போது இருக்கும் நாணய மாற்று வீதத்தின் படி அதற்குரிய ரூபாவை நாங்கள் திருப்பி உங்களுக்கு தருவோம் என்கிற செய்தி பரவலாக பேசப்பட்டது. ஆனால் அது ஒரு சிக்கலை உருவாக்கி விடும் வெளிநாட்டில் இருந்து தங்களது உழைப்பை அனுப்பும் மக்கள் அந்த பணத்தை அனுப்பாமல் அந்தநாட்டு வங்கிகளிலே அந்த பணத்தை முதலீடு செய்யக்கூடிய ஒரு ஆபத்தான நிலையை உருவாக்கி இருக்கும் ஆகவேதான் இலங்கை மத்திய வங்கி அதை செய்ய விரும்ப வில்லையென என அரசியல் மற்றும் பொருளாதார ஆய்வாளர் இதயச்சந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இலங்கையில் தற்போது நடந்த தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தை மற்றும் அனைத்து கட்சி கூட்டங்களை பார்க்கும் போது வடக்கு கிழக்கு அபிவிருத்தி நிதியம் என்ற விடயத்தை உருவாக்குகிறார்கள். அதாவது அவர்களை பொருத்தவரை இந்த வங்குரோத்து நிலைக்குச் செல்லாமல் இருப்பதற்கு சீனாவிடம் இருந்து 1 பில்லியன் கடன், 1.5 பில்லியன் ரூபாக்கான கிரேடிட் லைன் என்ற கொடுக்கல் வாங்கல் விடயங்கள் மற்றும் இந்தியாவிடம் இருந்து 500 பில்லியன் கடன் என இலங்கை அரசாங்கம் பெற்று வருகிறது. இதனை பார்க்கும் போது வங்குரோத்து நிலையை நாடு அடையாமல் இருப்பதற்கான ஓர் நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கிறார்கள் அவர்களுடைய எதிர்பாப்பு என்னவென்றால் இந்த கோடை கால விடுமுறை ஆரம்பமாகிவிட்டது. இனி உல்லாச பயணத்துறை வளர்ச்சியடையும், கோவிட்டின் பாதிப்பும் குறைவு ஆகவே தங்களுடைய பொருளாதாரம் மேலெழும்பக்கூடிய அதாவது வெளிநாட்டு நாணய கையிறுப்பு கொஞ்சம் அதிகரிக்ககூடிய வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. பிறகு ஏன் நாம் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்ல வேண்டும் என்ற அடிப்படை சிந்தனையாக கூட இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

திங்கள், 28 மார்ச், 2022

mother a 203 அடையாழப்படுத்து . இவர்களா ?

அரசியல் கோமாளிகள் என தங்களை அடையாழப்படுத்து . இவர்களா ?
தலைவர் வந்தால் கொடுப்போம்! விடுதலைப்புலிகளின் சொத்துக்களை வைத்திருப்பவர்களின் முடிவு (VIDEO) தமிழீழ விடுதலைப் புலிகளின் சொத்துக்களை வைத்திருக்கும், தலைவர் வந்தால் சொத்துக்களை திரும்ப கொடுப்போம் என கூறுபவர்களின் சரித்திரத்தினை பார்த்தால் அவர்கள் யாரும் ஒற்றுமையினை விரும்பவில்லை என்பதே உண்மையென பிரான்ஸில் இருக்கும் மனித உரிமைகள் இல்லத்தின் இயக்குநரும்,மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான ச.வி.கிருபாகரன் தெரிவித்துள்ளார். புலம்பெயர் வாழ் மக்கள் அனைவரும் பணம் படைத்தவர்கள் அல்ல. சிலர் கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறியுள்ளனர்.சிலரிடம் வேறு பணமும் உள்ளது.தங்களது இருப்பு, பிழைப்பு கெட்டுப்போய்விடும் என்பதற்காக ஆட்களை வைத்து வெளிநாட்டு வேலைத்திட்டங்களை குழப்பி திட்டமிட்டு புலம்பெயர் வாழ் மக்களின் ஒற்றுமையினை சிலர் குழப்பி வருகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான பல விரிவான தகவல்களுடன் வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி, தமிழீழ விடுதலைபுலிகளும் சந்தர்ப்பத்தை பயன்படுத்துவோம்.சிங்கள மக்கள் தமிழர்களுக்கு எதனையும் தரமாட்டார்கள் என்பதினை காட்டுவதற்கே சர்வதேச விசாரணைக்கு சென்றார்கள்.இருப்பினும் அவர்கள் சில்லறை தனமாக செல்லவில்லை. ஆயுத பலத்தில் 3 இல் 2 பிரதேசத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த தமிழீழ விடுதலைப்புலிகளையே சிங்கள பேரினவாத பௌத்த அரசு பேய் காட்டிவந்தது. குறிப்பாக மகிந்தவின் அரச ஆட்சி காலத்தில் ஒன்றுமே நடக்காது, இன்றும் அதே ஆட்சிக்காரர்கள் ஆட்சிக்கு வந்து தமிழர்களை பகடைகாய்களாக பயன்படுத்துவதை தமிழ் தலைமைகள் இன்னும் புரிந்துக்கொள்ளவில்லை என்றால் இவர்கள் ஏன் அரசாங்கத்தில் உள்ளனர் என்ற சந்தேகம் நிலவுகின்றது என்றும் தெரிவித்துள்ளார்

ஞாயிறு, 27 மார்ச், 2022

mother a 202 ரஸ்யாவை 24 மணி நேரத்தில் பின் வாங்க வைத்த

துப்பாக்கி முனையில் ரஷ்யா படை துருப்புக்களை அடிபணிய வைத்த உக்ரைன்
உக்ரைன் மீதான ரஷ்ய போர் கடந்த 33 நாளாக நீடித்து வரும் நிலையில், வான்வெளி, தரைவழி தாக்குதல் மட்டுமின்றி கடல் வழியாகவும் கடுமையான தாக்குதல் நடத்தி வருகின்றது. இதன்போது ரஷ்ய படைகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் உக்ரைன் வீரர்களும் எதிர்த்து போராடி வருகின்றனர். இந்நிலையில், ரஷ்ய வீரர்கள் பலரை உக்ரைன் படையினர் பிடித்து வைத்துள்ள காணொளி வெளியாகியுள்ளது. ரஷ்யாவை சேர்ந்த 7 தளபதிகளை இதுவரையில் உக்ரைன் வீரர்கள் கொன்றுள்ளனர். உக்ரைனில் உள்ள Trostyanets-ஐ கடந்த 1ஆம் திகதி ரஷ்ய வீரர்கள் கைப்பற்றினர். இதனால் ஓய்ந்துவிடாத உக்ரைன் வீரர்கள் மீண்டும் நகரை நேற்று தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்நிலையில் கொத்து கொத்தாக ரஷ்ய வீரர்களை உக்ரைன் படையினர் பிடித்து கைது செய்துள்ளனர். பின்னர் அவர்கள் துப்பாக்கி முனையில் தரையில் குப்புற படுக்க வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான காணொளியை உக்ரைன் வீரர் ஒருவர் எடுத்து வெளியிட வைரலாகியுள்ளது.

வெள்ளி, 25 மார்ச், 2022

mother a 199 மகிந்தவை மீறி முடிவெடுக்க முடியாது நிலையில் கோட்டாபய - பசில்! அமெரிக்காவ...

மகிந்தவை மீறி முடிவெடுக்க முடியாத நிலையில் கோட்டாபய - பசில்! அமெரிக்காவின் புது வியூகம்
அரசாங்கத்தின் உண்மையான தலையென்பது இலங்கையின் பிரதமர் மகிந்த ராஜபக்சவினுடையது. இவரை மீறி முடிவெடுக்க முடியாது நிலையில் கோட்டாபய - பசில் ஆகியோர் செயற்பட்டு வருவதாக அமெரிக்காவின் சாஷ்பரி பல்கலைக்கழகத்தின் அரசியல்துறை பேராசிரியர் கலாநிதி கீதபொன்கலன் தெரிவித்துள்ளார். நாளுக்கு நாள் கடும் நெருக்கடியினை எதிர்நோக்கி வரும் இலங்கையின் பொருளாதாரம் தொடர்பில் எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மகிந்த ராஜபக்ச என்பவர் இயல்பாகவே சீன சார்பான தலைவர். அவர் திடீரென மாற்றமடைந்து சீனாவிடமிருந்து விலகி செயற்படுவதென்பது நடக்காத விடயம். சீனாவிற்கும்,இலங்கைக்கும் இடையில் தற்போது காணப்படும் முறுகல் நிலையானது கடனை திரும்ப செலுத்த வேண்டிய பிரச்சினை மட்டுமே காணப்படுகின்றது. இந்த விடயத்தில் இலங்கையின் தந்திரோபாயம் தற்போது செயற்பட்டு வருகின்றது. இந்த சந்தர்ப்பத்தை இந்தியா பயன்படுத்தி கடனை வழங்கி செயற்பட்டு வருகின்றது.இருப்பினும் இலங்கையை சீனா இந்தியாவிடம் ஒப்படைத்துவிட்டு ஒருபோதும் இலங்கையை விட்டு விலகாது. இலங்கையானது ஒரு தந்திரோபாய முக்கியத்துவம் வாய்ந்த நாடாகும்.இதன் காரணமானவே சீனா,அமெரிக்கா,இந்தியா போன்ற நாடுகள் இலங்கை மீது கரிசனையுடன் செயற்பட்டு வருகின்றது. இலங்கையில் தற்போது காணப்படும் நெருக்கடி நிலையினை பயன்படுத்தி அமெரிக்கா எம்.சீ.சீ உடன்படிக்கையை செயற்படுத்தும் முயற்சியில் செயற்பட்டு வருகின்றது.இலங்கையில் தனது செல்வாக்கினை அதிகரிக்கும் முயற்சியில் அமெரிக்கா தீவிரமாக செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

mother a 198 உலகத்தமிழர் பொருண்மிய மேம்பாடு | நேயர் நேரம்

13 ஐ முழுமையாக அமுல்படுத்த ஏன் தயக்கம்? ஜனாதிபதியிடம் கேள்வியெழுப்பிய சம்பந்தன்
"அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதில் உங்களுக்கு இருக்கின்ற பிரச்சினை என்ன?"என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச முன்னிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கேள்வியெழுப்பியுள்ளார். ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான பேச்சு இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போதே சம்பந்தன் மேற்கண்டவாறு கேள்வி தொடுத்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, "ஐக்கிய இலங்கையில் அரசியல் தீர்வின் மூலம் நாட்டை சுபீட்சத்தை நோக்கி நகர்த்துவதே எமது எதிர்பார்ப்பாகும். நாம் ஒரு நாடாக ஒன்றுபட வேண்டும். ஒரு நாடு, ஒரே மக்கள் என்று செயற்பட்டு, நாட்டின் தற்போதைய நிலைமையில் இருந்து, நாட்டை விடுவிப்பது அனைத்துத் தரப்பினரின் பொறுப்பாகும். இலங்கை, கிழக்கு சுவிட்சர்லாந்தாக மாறுவதைக் காண விரும்புகின்றோம்" - என்றார்.

mother a 197 இலங்கையில் திடீரென விலைவாசி உயர்ந்தது ஏன்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், கோட்டாபய ராஜபக்சவிற்கும் இடையில் முதல் பேச்சுவார்த்தை
பதமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கும் இடையில் முதல் முறையாக இன்று (25) விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றது. அரசியல் தீர்வு தொடர்பில் கலந்துரையாடும் நோக்கிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பின் ஊடாக, அரசியல் தீர்வொன்றை பெறுவது குறித்து பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விளம்பரம் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை இரண்டு மாத காலத்திற்குள் மொழி பெயர்ப்புக்களுடன் கிடைக்கும் எனவும், அதிகார பகிர்வு உள்ளிட்ட புதிய அரசியல் குறித்த விடயங்கள் அதன் பின்னர் தொடர முடியும் எனவும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உறுதியளித்ததாக, எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இந்த விடயத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை, இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, செய்ய வேண்டிய நான்கு விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்திற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் இணக்கம் எட்டப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நீண்ட காலமாக சிறை வைக்கப்பட்டுள்ளவர்களின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என இணக்கம் எட்டப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவ தேவைக்காக இனி காணிகள் சுவிகரிக்கப்படாது என ஜனாதிபதி இன்றைய பேச்சுவார்த்தையில் உத்தரவாதம் வழங்கியுள்ளார். அத்துடன், பிரதேச சபை எல்லைகள், மாவட்ட எல்லைகள், கரையோர எல்லைகள் ஆகியவை மாற்றப்படுவதற்கான சில முன்மொழிவுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கைகள் தற்போதைக்கு செய்யப்படாது எனவும் ஜனாதிபதி உறுதி வழங்கியுள்ளார். இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியது எப்படி? - ஓர் எளிய விளக்கம் "தனுஷ்கோடி கடலில் இறக்கி விடப்பட்டோம்" - கைக்குழந்தையுடன் தவித்த இலங்கை தம்பதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் காலப் பகுதியில் அந்த நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் உறுதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், விசேட சட்டங்களின் கீழ் நில ஆக்கிரமிப்பும் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனோர் விவகாரத்தில், காணாமல் போனோரின் உறவுகளுக்கு வழங்கப்படுவதாக கூறப்படும் ஒரு லட்சம் ரூபா பணமானது, காணாமல் போனோருக்கான இழப்பீடு அல்லவெனவும், அது தற்காலிக கொடுப்பனவு எனவும் ஜனாதிபதி தரப்பினர் இதன்போது கூறியுள்ளனர். காணாமல் போனோர் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் இன்றைய சந்திப்பில் உறுதி வழங்கப்பட்டுள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளின் பொருளாதார மீள் எழுச்சிக்காக ஒரு விசேட அபிவிருத்தி நிதியம் ஒன்று உருவாக்கப்படும் என இணக்கம் எட்டப்பட்டுள்ளது. இந்த நிதியத்தின் ஊடாக புலம்பெயர்ந்த மக்களின் முதலீடுகளை வருவிப்பதற்கு அரசாங்கம் அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுக்கும் எனவும் உறுதி வழங்கப்பட்டுள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கின்றார்.
இவ்வாறான நிலையில், அரசியல் தீர்வு தொடர்பிலான பேச்சுவார்த்தை, ஜனாதிபதி நிபுணர் குழுவின் மொழி பெயர்ப்பு அறிக்கை இரண்டு மாதங்களுக்குள் கிடைக்கப் பெற்றதை அடுத்து தொடரும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிடுகின்றார். இதேவேளை, பொருளாதார ரீதியில் நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கை ''நாட்டை கட்டியெழுப்புவதற்காக ஒன்றிணைந்து செயற்படுவோம்" என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கூறியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பட மூலாதாரம்,PMD SRI LANKA நாட்டு மக்கள் அனைவரினதும் தலைவராக, அனைத்து மக்கள் மீதும் தாம் ஒருசேர அவதானத்தைச் செலுத்துவதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார். நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களை விடுவித்தல், குற்றஞ்சாட்டப்பட்டு வழக்குத் தொடரப்படாத சந்தேக நபர்கள் தொடர்பில் எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுத்தல், உண்மையைக் கண்டறியும் பொறிமுறையை ஆரம்பித்தல், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை மறுசீரமைத்தல், காணாமற்போனோர் தொடர்பான பிரச்னைகளுக்கான தீர்வுகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி கூறியுள்ளார். அத்துடன், தொடர்ந்தும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம், வடக்கு - கிழக்கு உட்பட நாட்டின் அனைத்து மக்களின் நோக்கங்களையும் நிறைவேற்றி, நாட்டை அபிவிருத்தியை நோக்கி நகர்த்த முடியும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
பட மூலாதாரம்,PMD SRI LANKA ஐக்கிய இலங்கையில் அரசியல் தீர்வின் மூலம், நாட்டை சுபீட்சத்தை நோக்கி நகர்த்துவது தமது எதிர்பார்ப்பாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறுகின்றது. தாம் ஒரு நாடாக ஒன்றுபட வேண்டும். ஒரு நாடு, ஒரே மக்கள் என்று செயற்பட்டு, நாட்டின் தற்போதைய நிலைமையில் இருந்து, நாட்டை விடுவிப்பது அனைத்துத் தரப்பினரின் பொறுப்பாகும் என இரா.சம்பந்தன் தெரிவித்தார். இலங்கை, கிழக்கு சுவிட்சர்லாந்தாக மாறுவதை காண விரும்புவதாக இரா.சம்பந்தன் கூறியுள்ளார். நீண்டகாலமாக கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் எடுக்கப்படும் எதிர்கால நடவடிக்கைகள், நீண்டகாலமாக பயிர்ச் செய்யப்பட்ட காணிகளை விடுவித்தல், காணாமற்போனோர் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்தல், புதிய அரசியலமைப்பு தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டதன் பின்னர் அதில் சேர்க்கப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் கலந்துரையாடுதல், வடக்கு - கிழக்கு அபிவிருத்தி நிதியத்தை ஸ்தாபித்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் இங்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளன.

வியாழன், 24 மார்ச், 2022

mother a 196 விடுதலைப்புலிகளின் தலைவரைத் தேடும் தென்னிலங்கை மக்கள்!

விடுதலைப்புலிகளின் தலைவரைத் தேடும் தென்னிலங்கை மக்கள்! நிலைமை பாரதூரமாகிறது (VIDEO)
வடக்கு,கிழக்கினை விடுதலைப்புலிகளின் தலைவருக்கு கொடுத்திருந்தால் செல்வம் நிறைந்த நாடாக மாறியிருக்கும், இந்த நாட்டிலிருந்து கடனைப்பெற்று இலங்கையை மீட்டிருக்கலாம் என விடுதலைப்புலிகளின் தலைவரை தென்னிலங்கை மக்கள் தேடி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். இலங்கையின் நெருக்கடி நிலைமைக்கு பின்னரான மாற்றங்கள் குறித்து எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில், விடுதலைப்புலிகளின் தலைவரின் பெயரை உச்சரித்தால் தமிழர்கள் கைது செய்யப்பட்ட காலம் மாறி தற்போது தென்னிலங்கை சிங்கள மக்கள் அரசாங்கத்தின் மீதான விரக்தியில் விடுதலைப்புலிகளின் தலைவரின் பெயரை அதிகளவு உச்சரித்து வருகின்றனர்.இந்த நிலைமை காலப்போக்கில் படிப்படியாக மாறிவிடும். கடந்த மாதம் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வில் இலங்கையை விட்டு சென்ற காரணத்தினாலே பிரிட்டிஷ்காரர்கள் சுதந்திரமடைந்துள்ளனர்.இலங்கைக்கு சுதந்திரம் தந்தது அவர்கள் அல்ல. எங்களை விட்டு சென்றமையினால் பிரிட்டிஷ்காரர்கள் சுதந்திரம் பெற்றார்கள் என்று சொல்லும் அளவுக்கு விரக்தியில் சிங்கள மக்கள் தெரிவித்த கருத்தும் அண்மையில் பிரபலமானது. இந்த நிலையில், நெருக்கடி தான் வரலாற்றினை மாற்றும். இந்த மாற்றம் நல்ல மாற்றத்தினை அடைவதற்கான ஏற்பாடுகளில் நாம் அவதானமாக செயற்பட வேண்டும். இதற்கு உள்ளக சூழலும்,வெளிப்புற சூழலும் தகுந்தாற்போல அமைந்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்

mother a 195 ரஸ்ய படைகள் அடி வாங்கி 30 கி மீ பின் வாங்கியிருப்பது ஏன் ?

அதி பயங்கரமான ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கும் பிரபல நாடு! ரஷ்யாவிற்கு எச்சரிக்கை ரஷ்யாவின் தாக்குதலுக்கு எதிராக உக்ரைன் மட்டும் தனியாக போரிடவில்லை என பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் (Boris Johnson) தெரிவித்துள்ளார். அத்துடன், ரஷ்ய ஜனாதிபதி இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தினால், அதன் விளைவுகள் அவருக்கு பேரழிவை ஏற்படுத்தும் என்று அவர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் தொடர்ச்சியான தாக்குதல் குறித்து விவாதிக்க நேட்டோ, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் G7 தலைவர்கள் பிரஸ்சல்ஸில் அவசர கூட்டங்களை நடத்தி வருகின்றனர். நேட்டோ உச்சி மாநாட்டைத் தொடர்ந்து நடந்த செய்தி மாநாட்டில் பேசிய பிரித்தானிய பிரதமர் போரிஸ், பிரித்தானியா, உக்ரைனுக்கு கூடுதலாக 6,000 ஏவுகணைகளை அனுப்ப முடிவு செய்துள்ளது. ஏற்கனவே, டாங்குகளை எதிர்க்கக்கூடிய 4,000 ஆயுதங்களை உக்ரைனுக்கு அனுப்பியுள்ள நிலையில், தற்போது கூடுதலாக 6,000 ஏவுகணைகளை அனுப்ப பிரித்தானியா முடிவு செய்துள்ளது. அந்த ஏவுகணைகளில் Javelin ஏவுகணைகள், NLAW என்னும் அடுத்த தலைமுறை டாங்குகளை எதிர்க்கக்கூடிய ஆயுதங்கள் ஆகியவையும் அடங்கும். உக்ரைன் தலைநகர் கீவ்வில் ரஷ்ய துருப்புகள் எதிர்க்க ஆயுதங்கள் குறைந்துகொண்டே வருவதாக அச்சம் எழுந்துள்ள நிலையில், போரிஸ் ஜோன்சனின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது

புதன், 23 மார்ச், 2022

mother a 194 சீறிப் பாய்ந்த ரணில்! உங்களைச் சுடவும் எமக்கு அதிகாரமுண்டு

விடுதலைப் புலிகளின் தலைவரிடம் நாட்டை கொடுத்திருக்கலாமே என கேட்கும் சிங்கள பெண்கள்!
நீங்கள், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் காலத்தில் அவரிடம் நாட்டைக் கொடுத்திருக்கலாமே என சிங்கள பெண்கள் கேட்கின்றார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், சிங்கள மக்கள் துன்பப்படுவதனை, வேதனைப்படுவதனை, தெருக்களில் இறப்பதனை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களுக்காக நாம் அனுதாபப்படுகின்றோம். இதே விடயங்கள் எங்களது பகுதிகளில் நடக்கும் காலத்தில் விமானக்குண்டுகளுக்கும், பொஸ்பரஸ் குண்டுகளுக்கும், எறிகணைகளுக்கும், கொத்தணி குண்டுகளுக்கும் தமிழர்கள் கொல்லப்பட்ட போதெல்லாம் அதனை ஒரு நாட்டின் விடுதலையாக, தேசத்தின் விடுதலையாக இனப்படுகொலையை மறைத்து செய்த இலங்கை அரசு இன்று அதனது விளைவுகளை அனுபவிக்கின்றது என சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,

mother a 193 இலங்கை நெருக்கடியால் தமிழ்நாடு வந்த அகதிகள்

இலங்கை நெருக்கடியால் தமிழ்நாடு வந்த அகதிகள் - 'பிழைத்தால் இந்தியாவில் வாழ்வோம் இல்லையெனில் கடலோடு சாவோம்'
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சி மற்றும் கடும் விலை உயர்வு காரணமாக இலங்கை தமிழர்கள் தமிழகத்திற்கு அகதிகளாக வர தொடங்கியுள்ள நிலையில் ஒரே நாளில் 4 குடும்பத்தை சேர்ந்த 16 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வந்துள்ளனர். தமிழகத்திற்கு அகதிகளாக வந்தவர்கள் மீது மெரைன் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி பகுதி இலங்கைக்கு அருகே உள்ளதால் இலங்கை தமிழர்கள் இறுதிக்கட்ட போரின் போது அகதிகளாக தனுஷ்கோடி வழியாக தமிழகத்திற்குள் வந்து இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் தங்கியுள்ளனர். அதே போல் தற்போது, இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுபாட்டால் இலங்கை தமிழர்கள் இந்தியாவுக்கு அகதிகளாக வரக்கூடும், எனவே சர்வதேச கடல் எல்லை, மற்றும் கடலோர பகுதிகளில் கண்காணிப்பை தீவிர படுத்த வேண்டும் என கடலோர பாதுகாப்பு குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப் பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை இரவு மன்னார் மாவட்டம் பேசாலை கடற்கரையில் இருந்து மன்னாரை சேர்ந்த ஆறு பேர் ஒரு பைபர் படகில் புறப்பட்டு செவ்வாய்க்கிழமை அதிகாலை சுமார் 3 மணி அளவில் தனுஷ்கோடி அடுத்துள்ள நான்காம் மணல் திட்டு பகுதியில் வந்து இறங்கினர். விளம்பரம்
இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியது எப்படி? - ஓர் எளிய விளக்கம் "இலங்கையில் இது பஞ்ச நிலைமை இல்லை என்றால், எதனை நாங்கள் பஞ்சம் என்று கருதுவது?" ஒரு பவுன் தங்கம் விலை ரூ.1.61 லட்சம் - எங்கே போகிறது இலங்கை? மணல் திட்டில் அதிகாலை முதல் குடிநீர் மற்றும் உணவு இன்றி கைக்குழந்தையுடன் இலங்கை தமிழர்கள் தவித்து வருவதாக அப்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் மண்டபம் கடலோர காவல் படை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அதன் அடிப்படையில் மண்டபம் கடலோர காவல்படை முகாமிற்கு சொந்தமான ஹோவர் கிராப்ட் கப்பல் மூலம் மணல் திட்டில் இருந்த இலங்கை தமிழர்களை மீட்டு மண்டபம் கடலோர காவல்படை முகாமிற்கு அழைத்து வந்தனர். அதை தொடர்ந்து திங்கள் கிழமை காலை 9 மணியளவில் மன்னார் மாவட்ட கடற்கரையில் இருந்து தனது சொந்த பைபர் படகில் வவுனியாவை சேர்ந்த ஐந்து குழந்தைகள், மூன்று பெண்கள், இரண்டு ஆண்கள் என இரண்டு குடும்பத்தை சேர்ந்த 10 பேர் தனுஷ்கோடிக்கு புறப்பட்டுள்ளனர். 37 மணி நேரமாக குழந்தைகளுடன் நடுக்கடலில் தத்தளித்த இலங்கை தமிழர்கள் நடுக்கடலில் படகில் இன்ஜினில் ஏற்பட்ட பழுது காரணமாக கடும் வெயிலில் உணவு, தண்ணீர் இன்றி சுமார் 37 மணி நேரத்திற்கும் மேலாக குழந்தைகளுடன் நடுக்கடலில் தத்தளித்த நிலையில், பல மணி நேர முயற்சிக்குப் பின் இஞ்சின் சரி செய்து செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் தனுஷ்கோடி வடக்கு பாலம் மீன்பிடி துறைமுகத்திற்கு வந்தடைந்தனர்.
இலங்கை நெருக்கடி பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்திய பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் விசாரணைக்குப் பின் 16 இலங்கை தமிழர்கள் மீதும் உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக தமிழகத்திற்குள் நுழைந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிமன்ற நீதிபதி இலங்கை தமிழர்களை புழல் சிறையில் அடைக்கவும், அவர்களுடன் வந்துள்ள சிறுவர்களை தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டார். இதையடுத்து இலங்கை தமிழர்களை புழல் சிறையில் அடைக்க அழைத்து செல்ல தயாரான போது தமிழக அரசு மனிதாபிமான அடிப்படையில் இலங்கை தமிழர்கள் அனைவரையும் மண்டபம் ஈழ அகதிகள் மறு வாழ்வு முகாமில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கமாறு சிறப்பு அரசாணை வழக்கியதால் இலங்கை தமிழர்களை புழல் சிறைக்கு அழைத்து செல்லாமல் அரசாணைக்காக இரவு வரை நீதிமன்ற வளாகத்தில் இலங்கை தமிழர்கள் காத்திருந்தனர். இரவு வரை அரசாணை நீதிமன்றத்திற்கு சென்னை தலைமை செயலகத்தில் இருந்து அனுப்படாததால் மீண்டும் இலங்கை தமிழர்களை மீண்டும் தனுஷ்கோடி மெரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். தமிழகத்திற்கு அகதிகளாக வந்த இலங்கை தமிழர்களை சிறையில் அடைப்பதா அல்லது மண்டபம் ஈழ அகதிகள் முகாமில் ஒப்படைப்பதா என தெரியாமல் மெரைன் போலீசார் குழப்பத்தில் உள்ளனர். 'இலங்கையில் சாமானிய மக்கள் வாழ முடியாது' இலங்கை தமிழர்கள் தமிழகம் வருவதற்கான காரணம் குறித்து தனுஷ்கோடி வந்துள்ள மன்னாரை சேர்ந்த கியூரி பிபிசி தமிழிடம் பேசுகையில், "இலங்கையில் தற்போது நிலவி வரும் கடுமையான விலைவாசி உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக தனுஷ்கோடி வர முயற்சி செய்து திங்கள்கிழமை இரவு அங்கிருந்து கிளம்பினோம். மன்னார் மாவட்டத்திலிருந்து பைபர் படகில் எங்களை அழைத்து வந்து இங்கு விட்டவர்களின் முழுமையான தகவல் எதுவும் எங்களுக்கு தெரியாது. ஆனால் தமிழகம் அழைத்து வர தலா நபர் ஒருவருக்கு 10 ஆயிரம் என ஆறு நபர்களுக்கு 60 ஆயிரம் கொடுத்தோம்." இலங்கை நெருக்கடி
படக்குறிப்பு, கியூரி "எங்களுக்காக திங்கட்கிழமை நள்ளிரவு ஒரு பைப்பர் படகு பேசாலை கடற்கரையில் காத்திருந்தது. அந்த படகில் முகத்தை மூடி இருந்த நபர் ஒருவர் கையசைத்தார் நாங்கள் படகில் ஏறி செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணி அளவில் தனுஷ்கோடி நான்காம் மணல் திட்டில் வந்து இறங்கினோம். இறுதிக்கட்ட போரின் போது உயிரை காப்பாற்றி கொள்ள தமிழகத்திற்கு 2001ஆம் ஆண்டு அகதியாக வந்து குடியாத்தம் அகதிகள் முகாமில் தங்கி இருந்தேன். முகாமில் தங்கியிருந்த இலங்கை அகதியை திருமணம் செய்தேன். பின் இலங்கையில் போர் முடிவுக்கு வந்ததால் விமானம் மூலம் இலங்கைக்கு சென்று வாழ்ந்து வந்தோம். எனக்கும் என் கணவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 9 மாதங்களாக நான் அவரிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வருகிறேன். தற்போது இலங்கையில் உள்ள சூழ்நிலையில் எனது இரண்டு குழந்தைகளை வைத்துக் கொண்டு என்னால் தனியாக வாழ இயலாது. எனவே தமிழ்நாட்டில் அகதிகள் முகாமில் தங்கியுள்ள உறவினர்களுடன் சேர்ந்து வாழ்வதற்காக மீண்டும் படகு மூலம் அகதியாக தனுஷ்கோடி வந்தேன்" என்று கூறினார் கியூரி. உயிரை காத்து கொள்ள இரண்டாவது முறையாக தமிழகத்தில் தஞ்சம் தமிழகத்திற்கு அகதியாக வந்துள்ள சிவரத்தினம் பிபிசி தமிழிடம் பேசுகையில், நான் மன்னார் மாவட்டத்தில் மீன்பிடி தொழில் செய்து வருகிறேன். தற்போது இலங்கையில் தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை, பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அங்கு சாமானிய மக்கள் வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் எனது குடும்பத்துடன் எனது அக்கா குடும்பத்தையும் சேர்த்து 10 பேர் திங்கள்கிழமை புறப்பட்டு செவ்வாய்க்கிழமை இரவு தனுஷ்கோடி வந்து சேர்ந்தோம். இலங்கையில் தற்போது அரிசி 300 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. 300 ரூபாய் கொடுத்தாலும் போதிய அரிசி கிடைப்பதில்லை குழந்தைகளுக்கு கலந்து கொடுக்கும் பால் மாவு விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. YouTube பதிவை கடந்து செல்ல, 1 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம் YouTube பதிவின் முடிவு, 1 இலங்கையைப் பொறுத்த அளவு தற்போது உள்ள சூழ்நிலையில் கடுமையாக உழைத்தால் ஒரு வேளை சாப்பாடு சாப்பிட முடியும் ஆனால், போதிய வேலைவாய்ப்பு இல்லாததால் நாங்கள் குடும்பத்துடன் இந்தியா வந்துள்ளோம். எங்களை போல் இலங்கையில் வசிக்கும் பெரும்பாலானோர் தமிழகத்திற்கு வருவதற்கு தயாராகி வருகின்றனர். இருப்பினும் பைப்பர் படகிற்கு போதிய மண்ணெண்ணை கிடைக்காததாலும், மண்ணெண்ணெய் விலை உயர்வால் வாங்க இயலாததாலும் இலங்கையில் தங்கி உள்ளனர். நான் தனுஷ்கோடி வந்தது எனது சொந்த படகு என்பதால் 15 ஆயிரம் ரூபாய்க்கு மண்ணெண்ணெய் வாங்கி கொண்டு குடும்பத்துடன் அகதியாக தமிழகம் வந்துள்ளேன். இலங்கையில் ஒரு குடும்பம் ஒரு நாளைக்கு வயிறார சாப்பிட 2500 ரூபாய் தேவைப்படும் அதுவும் இரண்டு வேளை உணவு மட்டும் சாப்பிட முடியும் அடுத்த வேளைக்கு மீண்டும் சமைக்க வேண்டும். 1990 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட போரின் போது உயிரை காப்பாற்றி கொள்ள அகதியாக வந்து மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியிருந்தேன்.இலங்கையில் பிரச்சனை முடிவுக்கு வந்த பின்பு 2012 ஆம் ஆண்டு விமானம் மூலம் மீண்டும் இலங்கைக்குச் சென்றேன். ஆனால், தற்போது இலங்கையில் நிலவும் உணவு பொருள் தட்டுப்பாடு காரணமாக பட்டினிச்சாவு இருந்து பிழைப்பதற்காக மீண்டும் இரண்டாவது முறையாக தமிழகத்திற்கு அகதியாக வந்து உள்ளேன் என்றார் சிவரத்தினம். 'ஒரு நாள் சாப்பட்டிற்கு 3 ஆயிரம் செலவாகிறது' இலங்கையில் இருந்து வந்துள்ள சிவசங்கரி பிபிசி தமிழிடம் பேசுகையில், "ஒரு நாளைக்கு ஒரு வேளை சாப்பாட்டுக்கு இரண்டாயிரம் ரூபாய் வரை செலவாகிறது. அதுவே அசைவ உணவு சமைத்து சாப்பிட வேண்டும் என்றால் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் ரூபாய் வரை ஒரு வேலைக்கு செலவாகிறது." என்றார். "எனது கணவர் கூலி வேலைக்கு செல்கிறார். அவருக்கு தினசரி வருமானம் 1500 ரூபாய் மட்டுமே கிடைக்கிறது. இந்த வருமானத்தை வைத்து என்னால் எப்படி என் குழந்தையுடன் இலங்கையில் வாழ முடியும், எனவே என் தம்பி குடும்பத்துடன், படகில் இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ளோம். இலங்கை அரசு இதுவரை எந்த விதமான உதவியும் மக்களுக்கு செய்யவில்லை. இலங்கையில் பெரும்பாலானோர் தமிழகத்திற்கு வர தயாராக இருக்கின்றனர். ஆனால் அவர்கள் எப்போது வருவார்கள் என்பது குறித்து தகவல் எதுவும் தெரியாது. இலங்கை நெருக்கடி படக்குறிப்பு, சிவசங்கரி
என் தம்பி என்னையும் என் குடும்பத்தையும் தமிழகத்திற்கு அகதியாக செல்ல அழைத்த போது இங்கிருந்து கஷ்டப்படுவதற்கு பதில் இந்தியா போவோம் 'பிழைத்தால் இந்தியாவில் வாழ்வோம் இல்லையெனில் கடலோடு சாவோம்' என்று முடிவு செய்து தான் திங்கள்கிழமை காலை 9 மணிக்கு மன்னாரில் இருந்து கிளம்பினோம். கிளம்பி ஒரு மணி நேரத்தில் படகு என்ஜினில் பழுது ஏற்பட்டு நடுக்கடலில் நின்றது. இன்ஜினை சரி செய்ய சுமார் 37 மணி நேரத்துக்கு மேலானதால் இன்ஜினை சரி செய்யும் வரை கடும் வெயிலில் குடிநீர், உணவு இல்லாமல் உயிருக்கு போராடிய நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு 11 மணியளவில் தனுஷ்கோடி வந்து சேர்ந்தோம். இலங்கையில் இருக்கும் மக்கள் மன அழுத்தத்தில் வாழ்ந்து வருகின்றனர். காரணம் காலை எழுந்ததில் இருந்து இரவு தூங்கும் வரை ஒவ்வொரு மணி நேரத்தையும் கடப்பது கடும் சவாலாக உள்ளது. இன்னும் சில நாட்களில் தமிழகத்திற்கு அகதிகளாக அதிகமான இலங்கை தமிழர்கள் வர வாய்ப்புள்ளது" என்று தெரிவித்தார் சிவசங்கரி. உரிய ஆவணங்கள் இல்லாததால் சட்ட நடவடிக்கை தமிழகத்திற்கு வரும் இலங்கை அகதிகள் மீது எடுக்கப்பட்டு வரும் சட்ட நடவடிக்கைகள் குறித்து கடலோர காவல் குழும கண்காணிப்பாளர் குணசேகரன் பிபிசி தமிழிடம் பேசுகையில், 2012 ஆம் ஆண்டுக்கு பிறகு இலங்கையில் இருந்து கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் தமிழகத்திற்கு வரும் இலங்கை தமிழர்கள் அகதிகளாக பதிவு செய்யாமல் அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இலங்கை நெருக்கடி இலங்கையில் இருந்து வரக்கூடிய நபர்கள் உரிய ஆவணங்களுடன் விமானம் மூலம் வந்தால் மட்டுமே தமிழகத்திற்குள் அனுமதிக்க முடியும். உரிய ஆவணங்கள் இன்றி வரும் நபர்கள் மீது நிச்சயம் வழக்கு பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள். அதன் அடிப்படையில் தான் தற்போது தனுஷ்கோடி வந்துள்ள இலங்கை தமிழர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இலங்கையில் இருந்து குழந்தைகளுடன் தமிழகம் வரும் இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக தமிழகத்தில் தங்க அனுமதி கோரினால் அதை ஏற்க முடியாது. அவர்கள் எந்த நோக்கத்தோடு தமிழகத்திற்குள் வருகிறார்கள், அவர்கள் யார் என்ற பல்வேறு கோணங்களில் சந்தேகம் உள்ளதால் சட்ட ரீதியான நடவடிக்கை மட்டுமே எடுக்கப்பட்டு வருவதாக மெரைன் காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் தெரிவித்தார். சர்வதேச கடல் எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த திட்டம் கடந்த செவ்வாய்கிழமை ஒரே நாளில் 16 இலங்கை தமிழர்கள் இரு நாட்டு பாதுகாப்பையும் மீறி கடல் வழியாக படகில் தமிழகத்திற்குள் நுழைந்தது கடல் பாதுகாப்பு அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக இன்னும் பலர் தமிழகம் வர தயாராக இருப்பதாக இலங்கையில் இருந்து வந்துள்ள இலங்கை தமிழர்களிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்திய கடற்பரப்பில் கடற்படை, கடலோர காவல் படை அதிகாரிகள் பாதுகாப்பை தீவிரப்படுத்த முடிவு செய்ததுடன், கடற்கரை ஓரங்களில் தமிழக கடலோர காவல் குழும போலீசார், மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக இந்திய கடலோர காவல் படை அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தா

mother a 192 அசைக்க முடியாத ஆதிக்கத்தை காட்டிய ரஷ்யா

உலக நாடுகளுக்கு தனது அசைக்க முடியாத ஆதிக்கத்தை காட்டிய ரஷ்யா!
உக்ரைன் மீதான போருக்கு பின்பு ஆஸ்திரேலியா, பிரித்தானியா, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க மொத்தமாக தடை செய்துள்ளன. இதேவேளை, மற்ற நாடுகள் ரஷ்ய கச்சா எண்ணெய்யை தவிர்க்க முடியாமல், இந்தியா போன்ற நாடுகள் எப்போதும் இல்லாத வகையில் அதிக கச்சா எண்ணெய்யை ரஷ்யாவிடம் இருந்து வாங்க துவங்கியுள்ளது. வல்லரசு நாடுகள் கட்டம் கட்டி ரஷ்யா மீது தடை விதித்த நிலையிலும் பல நாடுகளால் ரஷ்யா கச்சா எண்ணெய் இல்லாமல் இயங்க முடியாத நிலையுள்ளது. இதன் மூலம் ரஷ்யா தனது ஆதிக்கத்தை காட்டியுள்ளது. உக்ரைன் மீதான போருக்கு பின்பும் எந்தெந்த நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குகிறது தெரியுமா? பல்கேரியா-வின் நெஃப்டோசிம் பர்காஸ் சுத்திகரிப்பு ஆலை சுமார் 60 சதவீத எண்ணெய்யை ரஷ்யாவிடம் இருந்து வாங்குகிறது. ஜெர்மனி நாட்டின் மிரோ, PCK SCHWEDT, LEUNA போன்ற முன்னணி சுத்திகரிப்பு ஆலைகள் அனைத்தும் ரஷ்யாவிடம் இருந்து அதிகப்படியான கச்சா எண்ணெய் வாங்குகிறது. கிரீஸ் நாட்டின் மிகப்பெரிய சுத்திகரிப்பு ஆலையாக விளங்கும் ஹெலனிக் பெட்ரோலியம் சுமார் 15 சதவீத கச்சா எண்ணெய்-ஐ ரஷ்யாவிடம் இருந்து வாங்குகிறது இத்தாலி நாட்டின் ISAB என்னும் சுத்திகரிப்பு ஆலை அதிகளவிலான ரஷ்ய கச்சா எண்ணெய்யை நம்பிதான் இயங்குகிறது ஹங்கேரி, ஸ்லோவாக்கியா, குரோஷியா, லிதுவேனியா, போலந்து மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகளின் சுத்திகரிப்பு ஆலைகள், டென்மார்க் நாட்டின் ஜீலாந்து மற்றும் ரோட்டர்டாம் சுத்திகரிப்பு நிலையம், இந்தியாவில் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில், பிரித்தானிய நாட்டின் BP. ஜப்பான் நாட்டின் ENEOS, நார்வே நாட்டின் ஈக்வினார், போர்ச்சுகல் நாட்டின் GALP, பினலாந்து நாட்டின் NESTE, ஸ்வீடன் நாட்டின் PREEM, ஸ்பெயின் நாட்டின் REPSOL, அதை தொடர்ந்து உலகின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களான ஷெல், டோட்டல் எனர்ஜி, வாரோ எனர்ஜி ஆகியவை ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குகிறது.

செவ்வாய், 22 மார்ச், 2022

mother a 191 ரஸ்ய பொருளாதார வீழ்ச்சியை சீனாவால் காப்பாற்ற முடியாது

மரியபோல் மீது ரஷ்யப் போர்க் கப்பல்கள் வெடிகுண்டுத் தாக்குதல்!
துறைமுக நகரமான மரியபோல் மீது ரஷ்யப் போர் கப்பல்கள் வெடிகுண்டு தாக்குதல்களை நிகழ்த்தி உள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்ய படைகள் வான்வெளி, தரைவழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அசோவ் கடல் பகுதியில் ரஷ்யப் போர் கப்பல்களின் செயற்பாடுகளை அமெரிக்கா தொடர்ந்து கண்காணித்து வருவதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, குறித்த பகுதியில் ஏழு ரஷ்யக் கப்பல்கள் இருக்கின்றது, கருங்கடலில் ரஷ்யா 21 கப்பல்களை நிறுத்தியிருக்கின்றது. இதனிடையே உக்ரைனில் உள்ள ரஷ்யப் படையினர் உணவு மற்றும் எரிபொருளைப் பெறுவதில் கடும் சிரமத்தைச் சந்தித்து வருவதாகவும் உறைபனி மற்றும் கடும் குளிரைச் சமாளிக்க அவர்களிடம் போதுமான உபகரணங்கள் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

திங்கள், 21 மார்ச், 2022

mother a 190 களத்தில் தடுமாறும் ரஸ்ய ராணுவம்

ரஷ்யா vs யுக்ரேன்: போரால் புதைபடிவ எரிபொருட்கள் பயன்படுத்த திரும்பியது
'முட்டாள்தனம்' -ஐ.நா. யுக்ரேனில் நடந்து வரும் படையெடுப்பு காரணமாக, புதைபடிவ எரிபொருட்களைப் பயன்படுத்துவதற்கான முடிவு என்பது 'முட்டாள்தனம்' என்றும், இது உலகளாவிய காலநிலை இலக்குகளை அடைவதற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் ஐ.நா பொதுச்செயலாளர் கூறியுள்ளார். யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு காரணமாக, ரஷ்யாவிடம் இருந்து பெறப்படும் எரிவாயுகளை பிற நாடுகள் நிறுத்தியதை அடுத்து, நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகியவற்றின் விலைகள் கடுமையான உயர்வைக் கண்டுள்ளது. ஆனால், இந்த புதைபடிவ எரிபொருட்களைப் பயன்படுத்தும் குறுகிய கால நடவடிக்கைகள் என்பது பாரிஸ் காலநிலை இலக்குகளின் நோக்கத்தை நிறைவேறவிடாமல் செய்யும் என்று ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டேரஸ் எச்சரித்துள்ளார்

mother a 189 தமிழீழத்தை அமைப்பதற்கு திரைமறைவில் நடக்கும் சதி

தமிழீழத்தை அமைப்பதற்கு திரைமறைவில் நடக்கும் சதி!
- மகிந்தவின் நெருங்கிய சகா தகவல் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச ஒரு நல்ல தேசபக்தர் மற்றும் தனது நாட்டை மிகவும் நேசிக்கிறார், பிரச்சினை என்னவென்றால், அவரது நாடு இலங்கை அல்ல அமெரிக்கா என்று முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். மஹரகம ஜனசபையில் உரையாற்றிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “எங்களுக்கு ஒரு பிரச்சினை உள்ளது. நிதியமைச்சரின் சகோதரர் ஜனாதிபதி மற்றும் மற்றொரு சகோதரர் பிரதமர். நிதியமைச்சர் வேண்டுமென்றே இந்த நாட்டை ஏன் வீழ்த்துகிறார்? தன் சகோதரர்களை சிக்கலில் தள்ளுகிறார்? பொருளாதார வீழ்ச்சிக்குப் பின்னால் ஒரு பெரிய கதை இருக்கிறது. “இலங்கையில் சோபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அமெரிக்கா முயற்சித்தது. சாலையில் சென்று நின்றோம். எம்.சி.சி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட முயற்சித்த போது நாங்கள் மக்களுடன் வீதியில் இறங்கி அதனை தடுத்து நிறுத்தினோம். கிழக்கு முனையத்தை இந்தியாவிடம் கையளிக்கப்பட்டு யுகதனவி ஒப்பந்தம் செய்யப்படும் போது இந்நாட்டு தேசப்பற்றுள்ள மக்கள் வீதியில் இறங்கி இந்த சதிகளை தடுத்து நிறுத்தினார்கள். நாட்டுக்காக கூக்குரலிடும் பலம் இந்த நாட்டு மக்களுக்கு இன்னும் உள்ளது. நாம் பலத்தை இழக்க வேண்டும் என சிலர் நினைக்கின்றனர். அதனால் தான் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருகிறது. நாட்டில் மருந்து பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எங்கள் அன்பான பெற்றோர்கள் தங்களுக்கு தேவையான மருந்து கிடைக்காமல் இறந்து கொண்டிருக்கிறார்கள். மருந்துக்காக அழுகிறார்கள். நாட்டில் இப்போது பால் மா இல்லை. கோதுமை மாவு இல்லை. இதேவேளை, இலங்கையில் உள்ள அனைத்து துறைமுகங்களையும் எமக்கு வழங்கினால் ஐந்து வருடங்களுக்கு இலவச உணவு வழங்கப்படும் என பலம் வாய்ந்த நாடு ஒன்று முன்வந்துள்ளது. இலங்கையில் இந்த நிலையை உருவாக்குவதற்காக நிதியமைச்சர் வேண்டுமென்றே நாட்டின் பொருளாதாரத்தை மந்தப்படுத்துகிறார். அமெரிக்காவிற்கு ஒரு பெரிய பிரச்சினை உள்ளது, அவர்கள் இலங்கை மக்களின் பலத்தைக் கண்டு பயப்படுகிறார்கள். எம்.சி.சி உடன்படிக்கையுடன் அமெரிக்கா எந்த நாட்டுக்கு சென்றதோ அந்த நாடுகள் அனைத்தும் கையெழுத்திட்டன என்பதை முழு உலகிற்கும் வலியுறுத்துகிறேன். எம்.சி.சி.யை அமெரிக்காவுக்கு திருப்பி அனுப்பிய ஒரே நாடு இலங்கை என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அதற்கான சாமர்த்தியம் அவர்களிடம் உள்ளது. ஆகையினால் இன்று எங்களை வலுவிழக்கச் செய்து உணவுக்காகவும் மருந்துக்காகவும் எதையும் காட்டிக்கொடுக்கும் மனநிலையை உருவாக்கவே இந்த நாடு கவிழ்க்கப்படுகிறது. இது ஒன்றும் புதிதல்ல. இதைத்தான் 1997ல் மேற்கத்திய நாடுகள் இந்தோனேசியாவில் செய்தன. சோவ்ஸ் என்ற அமெரிக்க முதலீட்டாளர் இந்தோனேசிய பங்குச்சந்தையில் பெரும் முதலீடு செய்து அதை அமெரிக்காவிற்கு ஒரேயடியாக எடுத்துச் சென்றார். இந்தோனேசியாவின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. டொலர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. அதேபோன்று மக்கள் மருந்தை இழந்து உண்ண முடியாமல் தவித்தனர். மேற்கத்திய நாடுகள் பொதிகளுடன் உதவிக்கு வந்தன. தனிநாடு கோரி போராடி வரும் கிழக்கு திமோருக்கு உடனடியாக சுதந்திரம் வழங்க வேண்டும் என்று நிபந்தனை வைத்தனர். தனி நாடு கோரி போராடும் ஆச்சே மாநிலத்துக்கு சுயாட்சி வழங்க வேண்டும் என்று கோரினர். நான் அதிபராக இருக்கும் போது இதை என்னால் செய்ய முடியாது என்று இந்தோனேஷியாவின் அதிபர் சுஹார்டோ கூறினார். என்னால் அதைச் செய்ய முடியாது என்று கூறி அதிபர் சுகார்டோ இராஜினாமா செய்தார். ஜனாதிபதி தேர்தல் வந்துவிட்டது. மேற்குலகின் கோரிக்கைகளை நிறைவேற்ற நான் தயாராக இருக்கிறேன் என்று தேர்தலில் போட்டியிட்ட மேகாவதி சுகர்னோவின் மகன் கூறினார். மேகாவதி சுகர்னோவின் மகனுக்கு தேசபக்தியுள்ள மக்கள் ஒன்று திரண்டு வாக்களித்து இந்தோனேசியாவின் அதிபராகக் கொண்டு வந்தனர். இப்போது கிழக்கு திமோர் என்ற புதிய நாடு உதயமாகியுள்ளது. இந்த பயணம் இலங்கையை தமிழீழப் பாதையில் கொண்டு செல்லுமா என்ற கேள்வி இன்று எம்மிடம் உள்ளது. பசில் ராஜபக்ச இந்தோனேசியாவுக்கு செய்ததை இலங்கைக்கும் செய்து அமெரிக்க நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்த முயலும் அசிங்கமான அமெரிக்கர் என்பதை நாங்கள் அச்சமின்றி அறிவிக்கிறோம். பசில் ராஜபக்சவுக்கு அமெரிக்காவில் விசாரணை. அவர் தனது ஓய்வு வாழ்க்கையை அமெரிக்காவில் வசதியான ஓய்வு வாழ்க்கையை வாழ விரும்பினால், அவர் தனது நாடு கோருவதைச் செய்ய வேண்டும். அவரை நாம் குறை கூற முடியாது. அவர் ஒரு நல்ல தேசபக்தர் மற்றும் தனது நாட்டை மிகவும் நேசிக்கிறார், பிரச்சினை என்னவென்றால், அவரது நாடு இலங்கை அல்ல அமெரிக்கா. அவர் அமெரிக்காவை நேசிப்பதைப் போல நாங்கள் எங்கள் நாட்டை நேசிக்கிறோம். இந்த நாட்டிற்கு அழிவை ஏற்படுத்தவும், அவரது உடைமைகளை எடுத்துச் செல்லவும் அவருக்கு அமெரிக்கா உள்ளது. ஆனால் எங்களிடம் இந்த சிறிய இலங்கை மட்டுமே உள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை, அரசாங்கத்தின் முக்கிய அமைச்சு பொறுப்பில் இருந்து உதய கம்மன்பில அண்மையில் பதவி நீக்கப்பட்டார். எனினும், தற்போது வரை அவர் பிரதமர் மகிந்த ராஜபக்சவுன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஞாயிறு, 20 மார்ச், 2022

:mother a 188 ரஸ்யாவுடன் பேச்சு தோல்வியடைந்தால்,அது மூன்றாம் உலகப் போர்!

ரஸ்யாவுடன் பேச்சு தோல்வியடைந்தால்,அது மூன்றாம் உலகப் போர்!(காணொளி)
உக்ரைன் ஜனாதிபதி உக்ரைன் மீதான ரஸ்யாவின் படையெடுப்பை முடிவுக்கு வருவதற்கான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் அது “மூன்றாம் உலகப் போரை" குறிக்கும் என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். சிஎன்என் செய்திச்சேவையுடன் இடம்பெற்ற உரையாடலின்போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் நேரடியாக பேச தாம் தயாராக இருப்பதாக கூறிய அவர், சண்டையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரே வழி பேச்சுவார்த்தைகள் மட்டுமே என்று தாம்; நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். எனினும் ரஸ்யாவின் ஆதரவுடனான பிரிவினைவாத பிராந்தியங்களை சுதந்திரமாக அங்கீகரிக்கும் எந்த உடன்படிக்கையையும் தாம் நிராகரிப்பதாக ஸெலென்ஸ்கி கூறியுள்ளார். தனது நாடு நேட்டோ உறுப்பினராக இருந்திருந்தால், இந்த போர் ஆரம்பித்திருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார். “நேட்டோ உறுப்பு நாடுகள், உக்ரைனை தமது கூட்டணியில் பார்க்கத் தயாராக இருந்தால், அதை உடனடியாகச் செய்யவேண்டும்” ஏனென்றால், மக்கள் தினந்தோறும் இறக்கின்றனர் என்றும் ஸெலன்ஸ்கி சுட்டிக்காட்டியுள்ளார்.

mother a 187 மகிந்தவுக்கு எதிராக தொடரும் போராட்டம்!!

மகிந்தவின் யாழ்.வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் மீது பொலிஸார் தாக்குதல்! மூவர் யாழில் பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த வந்த மக்கள், வீதியில் வழிமறிக்கப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் வாகன சாரதி பொலிஸாரின் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் பயணமாக நேற்றைய தினம் சனிக்கிழமை வந்திருந்த பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மட்டுவிலில் புதிதாக அமைக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையத்தினை திறந்து வைத்துள்ளார். குறித்த நிகழ்வுக்கு பிரதமர் வருவதனை எதிர்த்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் உள்ளிட்டோர் எதிர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுக்க முயன்றனர். நிகழ்வு நடைபெறும் இடத்தில் போராட்டத்தினை முன்னெடுக்க முல்லைத்தீவில் இருந்து, வந்திருந்தவர்களை மட்டுவில் அம்மன் ஆலயத்திற்கு அருகில் பொலிஸார் வாகனத்தில் இருந்து இறங்காதவாறு தடுத்து நிறுத்திருந்தனர். இதேவேளை பொலிஸாரின் காவலையும் மீறி பேருந்திலிருந்து இறங்கிய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வீதியில் அழுது புரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரதமரை வரவேற்கும் வகையில் கட்டப்பட்டு இருந்த பதாகைகளை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் எரித்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதேவேளை , மத்திய நிலைய பகுதியில் பெருமளவான பொலிஸார் , இராணுவத்தினர் குவிக்கப்பட்டுப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன்போது பொலிஸாரினால் மிலேச்சத்தனமாக தாக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க முல்லைத்தீவு மாவட்ட தலைவி ஈஸ்வரி மற்றும் வவுனியா மாவட்ட செயலாளர் ஜெனிட்டா ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

'mother a 186 கருக்கடலிலிருந்து சீறி வந்த ராட்சத ஏவுகணை!

கருக்கடலிலிருந்து சீறி வந்த ராட்சத ஏவுகணை! உக்ரைனில் நடந்த கொடூரம் உக்ரைனில் மரியபோல் நகரத்தில் இருக்கும் பள்ளி ஒன்றில் ரஷ்ய படைகள் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி உள்ளன. உக்ரைனில் உள்ள மரியபோல் நகரத்தில் ரஷ்ய படைகள் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன. அசோவ் கடல் பகுதியில் இருக்கும் துறைமுகம் ஆகும் இது. இந்த துறைமுக நகரத்தை சில நாட்களுக்கு முன் ரஷ்ய படைகள் சுற்றி வளைத்தன. இப்போது நான்கு பக்கங்களில் இருந்தும் இங்கு ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இங்கு ரஷ்ய படைகள் கொடூரமான தாக்குதல்களை நடத்துவதாகவும், பல நூற்றாண்டுகள் ஆனாலும் இந்த கொடுமையின் சுவடுகள் மறையாது என்றும் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் மரியபோல் நகரத்தில் இருக்கும் பள்ளி ஒன்று மொத்தமாக இடிந்துவிழுந்தது. இந்த பள்ளி தற்காலிக அகதிகள் முகாமாக செயல்பட்டு வந்தது. இங்கு மொத்தம் 400 அகதிகள் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். இங்குதான் சில மணி நேரங்களுக்கு முன் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் இடிபாடுகளுக்கு உள்ளே மக்கள் சிக்கி இருப்பதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் மரியபோல் நகரத்தில் இருக்கும் பள்ளி ஒன்று மொத்தமாக இடிந்துவிழுந்தது. இந்த பள்ளி தற்காலிக அகதிகள் முகாமாக செயல்பட்டு வந்தது. இங்கு மொத்தம் 400 அகதிகள் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். இங்குதான் சில மணி நேரங்களுக்கு முன் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் இடிபாடுகளுக்கு உள்ளே மக்கள் சிக்கி இருப்பதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. ஆனால் இந்த ஏவுகணை தாக்குதலில் எத்தனை பேர் பலியாகி இருப்பார்கள் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. இதுவரை 130 அங்கிருந்து காயங்களுடன் வெளியேற்றப்பட்டுள்ளனர். மீதம் உள்ள 270 பேரின் நிலை தெரியவில்லை. காயத்தோடு மீட்கப்பட்ட 130 பேர் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில் அதில், எத்தனை பேர் உயிரோடு இருப்பார்கள் என்பதும் தெரியவில்லை. இங்கு போர் குற்றங்கள் நடைபெற்று உள்ளதாக உக்ரைன் அதிபர் முன்பே குற்றஞ்சாட்டி இருந்தார். ரஷ்யா தற்போது உக்ரைன் தாக்குதலில் தனது புதிய வகை ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை பயன்படுத்தி வருகிறது. கின்சால் எனப்படும் ஏவுகணைகளை ரஷ்யா பயன்படுத்தி வருகிறது. இதுதான் தற்போது கடுமையான சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. கருங்கடல், அசோவ் கடல், காஸ்பியன் கடல் ஆகிய கடல் பகுதிகளில் இருந்தது ரஷ்யா போர் கப்பல்களை பயன்படுத்தி அதில் இருந்து ஏவுகணைகளை வீசி வருக்கிறது. திடீரென ரஷ்யா ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை பயன்படுத்த தொடங்கி உள்ளது. அதேபோல் இன்று செர்னிக்கிவ் பகுதியில் ரஷ்யா சார்பாக மருத்துவமனை ஒன்றில் ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அந்த மருத்துவமனை மொத்தமாக நொறுங்கியது. இதுவரை உக்ரைனில் போர் காரணமாக 20 லட்சம் மக்கள் வெளியேறி உள்ளனர். தோராயமாக பொதுமக்கள் 910 பேர் பலியாகி உள்ளனர். அதேபோல் குழந்தைகள் 112 பேர் ப்ளுயாகி உள்ளனர். 2800 பேர் கடுமையாக காயம் அடைந்துள்ளனர். ஆனால் போர் முடிந்த பின்பே உண்மையான பலி எண்ணிக்கை தெரிய வரும்.

சனி, 19 மார்ச், 2022

mother a 185 உக்ரேனிய அதிபரின் மனைவியும் இரண்டு பிள்ளைளும் எங்கே ?

நொருங்கிய டாங்கியில் இருந்தது ரஷ்ய பராஷூட் படையின் முக்கிய தளபதி- கேணல் பலி…
உக்கிரைன் ராணுவம் பதுங்கியிருந்து தாக்கியதில், ரஷ்யாவின் T22 ரக அதி நவீன டாங்கி ஒன்று அழிக்கப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் இந்த தாக்குதல் தலை நகர் கிவிக்கு அருகாமையில் இடம்பெற்றது. ஆனால் இதில் அதிர்ச்சியான விடையம் என்னவென்றால், அழிக்கப்பட்ட டாங்கியில் ரஷ்யாவின் பாராஷூட் படையின் தளபதி கேணல் Colonel Sergei Sukharev இருந்துள்ளார். அவர் பலியாகியுள்ளது தற்போது ரஷ்யாவால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் உக்கிரைனில் தரை இறக்கப்பட்ட பராஷூட் படையின், 331வது பிரிவினருக்கு, இனி யார் கட்டளை வழங்குவது என்று தெரியவில்லை. குறித்த படைப் பிரிவு மனச் சோர்வடைந்து விட்டதாக பிரித்தானிய ராணுவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளார்கள். இதுவரை இவ்வாறு 12 முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளார்கள். பொதுவாக இவர்கள் டாங்கிகளில் தான் பயணம் செய்கிறார்கள். ரஷ்ய டாங்கிகள் அழிக்கப்படும் வேளையில். சற்றும் எதிர்பாராத விதமாக இந்த தளபதிகளும் கொல்லப்படுகிறார்கள்

mother a 184 சீனாவுக்கு எதிராக இலங்கையைத் திசைதிருப்ப அமெரிக்கா திட்டம்

சீனாவுக்கு எதிராக இலங்கையைத் திசைதிருப்ப அமெரிக்கா போடும் இரகசியத் தகவல்!
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான பாதுகாப்பு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட உள்ளதாக இந்திய ஊடகத்தை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை இந்திய கடற்பரப்பினை கண்காணிப்பதற்கு இரண்டு விமானங்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளதாகவும், 4000 தொன் எடையுடைய மிதக்கும் கண்காணிப்பு கட்டமைப்பு ஒன்றும் உருவாக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கடற்படை உறவுகளுக்காக விசேட அதிகாரி ஒருவரை நியமிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கையும் இந்தியாவும் முதல் தடவையாக இவ்வாறு மூன்று பாதுகாப்பு உடன்படிக்கைகள் கைச்சாத்திடுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அவுஸ்திரேலியா, பிரான்ஸ், ஜப்பான், மாலைதீவு, சிங்கப்பூர், பிரித்தானியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடனும் இவ்வாறு இந்தியா உடன்படிக்கை கைச்சாத்திட்டுள்ளது. க்வாட் எனப்படும் இந்த பாதுகாப்பு உடன்படிக்கை பற்றிய விபரங்களை இலங்கை அரசாங்கம் இதுவரையில் அம்பலப்படுத்தவில்லை. இந்தியா ஊடாக அமெரிக்கா பாதுகாப்பு நடவடிக்கைகளை இலங்கையில் முன்னெடுக்கும் ஓர் முயற்சியாக இதனை கருத வேண்டுமென உயர்மட்டத் தகவல்கள் தெரிவிப்பதாக ஞாயிறு சிங்கள இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சீனாவிற்கு எதிராகவே இந்த பாதுகாப்பு நகர்வுகளை அமெரிக்கா மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

mother a 183 மனதை உருக வைக்கும் அஞ்சல

ரஷ்ய தாக்குதலில் கொல்லப்பட்ட குழந்தைகளுக்கு மனதை உருக வைக்கும் அஞ்சலி(Photos)
ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்த உக்ரைன் குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் குழந்தைகளை கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் தள்ளுவண்டிகள் உக்ரைனின் லிவில் நகர கவுன்சில் அலுவலகத்திற்கு வெளியே பொதுஇடத்தில் நிறுத்தப்பட்டிருந்தன. ரஷ்ய தாக்குதலில் இதுவரை 109 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் குழந்தைகளை கொண்டு செல்லும் 109 தள்ளு வண்டிகள் காலியாக நிறுத்தப்பட்டன. லிவிவ் நகர சபைக்கு வெளியே வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு தள்ளுவண்டியும் ஒரு குழந்தையைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.

வெள்ளி, 18 மார்ச், 2022

mother a 182 மரியுபோல் நகரமும் தமக்கே சொந்தமென புற்றின் புது கதை

உக்ரைனை ஆக்கிரமிக்கும் பிரயத்தனத்தில் ரஷ்யா- இராணுவ உதவி வழங்கியதா சீனா? அதிர்வலையை ஏற்படுத்திய ரஷ்யாவுக்கு உதவுவதற்காக ஆயுதங்கள் ஏந்திய சீன இராணுவ வாகனங்கள் ரஷ்ய எல்லையில் செல்வதாக ஒரு புகைப்படம் வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் அதன் உண்மை தன்மை குறித்து தெரியவந்துள்ளது. உக்ரைனுக்குள் புகுந்த ரஷ்ய படையினர் கடந்த 24 நாட்களாக தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன. பல உலக நாடுகளின் கண்டனம் மற்றும் எதிர்ப்பை மீறி ரஷ்யா இத்தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில் சீனாவின் கனரக இராணுவ வாகனங்கள் ஏவுகணைகள், ஆயுதங்களுடன் ரஷ்ய எல்லைக்குள் வருவதாக ஒரு புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது உக்ரைனை கைப்பற்றத் துடிக்கும் ரஷ்யாவுக்கு ஆதரவாக சீனா களம் இறங்கியுள்ளதாக கூறப்பட்டிருந்தது. அந்த பதிவில், 200 முதல் 300 வரையிலான இராணுவ ட்ரக்குகள் சீனாவின் Heilongjiang மாகாணம் அருகேயும், ரஷ்யாவின் எல்லையான Suifenhe அருகேயும் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இதை தற்போது சீனா மறுத்துள்ளது. 'தவறான புகைப்படங்களை வெளியிட்டு, வேண்டுமென்றே சிலர் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். சீன படைகள் ரஷ்யாவுக்கு செல்லவில்லை' என, சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புகைப்படம் கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் 10ஆம் திகதி சீனாவின் Xinjiang பகுதியில் எடுக்கப்பட்டதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

mother a 181 உக்ரேன் விவகாரம் உலக யுத்தமாக மாறுமா?

இன்றைய நேரலை பக்கத்திலிருந்து சில முக்கிய செய்திகள்: புதினும் அவருடைய நெருங்கிய அரசியல் கூட்டாளிகளும் மேற்கத்திய நாடுகளால் விதிக்கப்பட்ட “பேரழிவுகரமான” பொருளாதாரத் தடைகளின் அளவு குறித்து “பதற்றமாக” இருப்பதாக ரஷ்யாவின் முன்னாள் பிரதமர் மிகைல் காஸ்யனோவ் கூறியுள்ளார். ரஷ்யாவில், அதிபர் விளாதிமிர் புதின், க்ரைமியாவை இணைத்து எட்டு ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் நிகழ்வில், லுஷினிகி மைதானத்தில் நிரம்பியிருந்த பல்லாயிரக்கணக்கான ரஷ்ய மக்களிடம் பேசினார். பல்லாயிரக்கணக்கான ரஷ்யர்களுக்கு விளாதிமிர் புதின் ஆற்றிய உரையின் முடிவு நேரத்தில், ரஷ்ய அரசுத் தொலைக்காட்சி திடீரென அவருடைய பேச்சைப் பாதி வாக்கியத்தில் துண்டித்துவிட்டு, தேசபக்தி பாடலை ஒளிபரப்பத் தொடங்கியது

mother a 180 ரஸ்ய அதிபர் உலகை அச்சுறுத்தும் எரிமலையாக கக்கினார்

தீவிரமடையும் உக்ரைன் ரஷ்யா போர்! - அமெரிக்காவிற்கு சீனா அழைப்பு
உக்ரைன் ரஷ்யா இடையே நீடித்துள்ள போதை முடிவுக்கு கொண்டுவரவும், உலக அமைதி மற்றும் அமைதிக்கான சர்வதேச பொறுப்புகளை தோள்களில் சுமக்கவும் சீனா அமெரிக்காவுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பில் அமெரிக்க மற்றம் சீனா ஜனாதிபதிகள் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்கள். இதன் போது கருத்து வெளியிட்ட சீன ஜனாதிபதி, “தற்போது நிலவும் அமைதி மற்றும் வளர்ச்சிப் போக்கு கடுமையான சவால்களை எதிர்கொள்கிறது. உலகம் அமைதியாகவோ, நிலையானதாகவோ இல்லை. உக்ரைன் நெருக்கடி நாம் பார்க்க விரும்பும் ஒன்றல்ல. போர்க்களத்தில் சந்திக்கும் நிலைக்கு நாடுகள் வரக்கூடாது என்பதை மீண்டும் இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன. இந்நிலையில், உலக அமைதி மற்றும் அமைதிக்கான சர்வதேச பொறுப்புகளை தோள்களில் சுமக்க அமெரிக்கா - சீனா கூட்டாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் சீன ஜனாதிபதி அழைப்பு விடுத்தார். இதேவேளை, உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை சீனா கண்டிக்கவில்லை என்று அமெரிக்கா விமர்சித்து வரும் நிலையில், சீன ஜனாதிபதியின் இன்றைய பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

வியாழன், 17 மார்ச், 2022

mother a 179 தமிழர்களை கொல்ல உதவிய உக்ரெயினுக்கு ஏன் ஆதரவு நிலை?

உக்ரைன் ரஷ்ய யுத்தம் இரண்டாம் உலகப்போரின் பின்னரான வரலாற்று நெருக்கடி!
இரண்டாம் உலகப் போரிற்குப் பின்னர் ஐரோப்பா எதிர்நோக்கும் ஓர் வரலாற்று நெருக்கடி இந்த உக்ரைன் ரஷ்ய யுத்தம். நீதியின் பக்கம் நின்று உலகம் சுற்றுகின்றது என்றால் அதனுடைய வேகத்தை தடுக்க முடியாது. ஆனால் சுயநலத்தின் அடிப்படையில், தங்களது நலன்களின் அடிப்படையில் தான் உலகம் சுற்றிக் கொண்டிருக்கிறது. ஈழத் தமிழர்கள் மீதான இன அழிப்பு என்பது ஈழத்தமிழர்கள் உலகை எதிர்த்து தனியே மேற்கொண்ட யுத்தம் ஆனால் மேற்குலகம் இதனை மனிதாபிமானத்துடன் பார்க்கவில்லை. பிரித்தானியர்கள் உக்ரைனியர்களை அகதிகளாக தங்களது நாட்டிற்குள் நுழைய அனுமதித்திருக்கின்றார்கள். மனிதாபிமானத்தில் ஐரோப்பா தனது கதவுகளைத் திறந்திருக்கின்றது. இது தொடர்பிலான மேலதிகமான பல விடயங்களைப் பற்றிப் பேசுகிறது செய்திகளுக்கு அப்பால்

mother 178 இலங்கையில் தலைதூக்கும் சீனாவின் ஆதிக்கம்!

இலங்கையில் தலைதூக்கும் சீனாவின் ஆதிக்கம்!
அதிகாரப் பகிர்வை கோர காரணம் இதுதான் - சுமந்திரன் எம்.பி வடக்கு - கிழக்கு பகுதிகளில் சீனாவின் கட்டுப்பாட்டிற்குள் செல்வதை நாங்கள் கடுமையாக எதிர்க்கின்றோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார். கேள்வி - இலங்கையில் சீனாவின் ஆதிக்கப் பங்கை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்? இலங்கையுடன் இந்தியா கொண்டுள்ள வரலாற்று உறவை இது சீர்குலைக்குமா? பதில் - இலங்கை நீண்ட காலமாக சீனாவுடன் நெருங்கிச் செயற்படுகின்றது. நாங்கள் அதை எதிர்த்துள்ளோம். நாட்டின் தெற்கு மற்றும் மேற்கு ஏற்கனவே சீனாவின் கைகளில் உள்ளது. ஆனால் வடக்கையும் கிழக்கையும் சீனாவின் கட்டுப்பாட்டிற்குள் செல்வதை நாங்கள் கடுமையாக எதிர்த்துள்ளோம். சீனர்களை விரட்டியடிக்கும் வகையில் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படுவதை இந்திய அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்பதற்கான மற்றொரு காரணம் இதுவாகும். இலங்கையுடன் சீனாவின் அதிகரித்து வரும் நட்பு உண்மையில் இந்தியாவுடனான நமது உறவை மேம்படுத்துகிறது. ஒரு பெரிய மற்றும் அண்டை நட்பு நாடாக, இந்தியா இலங்கையில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை, வெளிநாட்டு சக்திகள் இங்கு களமிறங்குவது குறித்து கவலை கொண்டுள்ளது. எனவே, தமிழ் மக்களுக்கு சுயராஜ்யம் இருப்பதை உறுதி செய்வதற்கும், மற்ற வெளிநாட்டு சக்திகள் தலையீடு செய்து, செயல்முறையை சீர்குலைக்காமல் இருப்பதற்கும் நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என கூறியுள்ளார்.

புதன், 16 மார்ச், 2022

mother a 178 உக்ரேனுக்குள் சண்டையிட நுழையும் இஸ்லாமியர்களும்

உக்ரேனுக்குள் சண்டையிட நுழையும் இஸ்லாமியர்களும், இஸ்ரேலியர்களும்!
உக்ரேன் விவகாரத்தில் ரஷ்யாவின் நாகர்வுகள் திட்டமிட்டபடி மிக மிக நிதானமாக அமைந்திருப்பதாகவும், 'ஸீஜ்' என்று அழைக்கப்படுகின்ற ஒருவகை முற்றுகை தந்திரோபாயத்தை ரஷ்யப் படைகள் உக்ரேன் மீது மேற்கொண்டு வருவதாகவும் ரஷ்யா சார்பு நிலைப்பாடு எடுத்து வருகின்ற ஊடகங்கள் ஆய்வுகளை வெளியிட்டு வருகின்றன. ஆனால் உண்மையிலேயே உக்ரேனின் கள யதார்த்தம் என்பது , உக்ரேன் என்கின்ற தேசம் பல்வேறு தேசத்து வீரர்களின் சமர்க்களமாக மாறிவருகின்ற காட்சிகளைத்தான் வெளிப்படுத்தி நிற்கின்றது. மத்திய கிழக்கில் இருந்து, பிரித்தானியாவில் இருந்து, ஐரோப்பாவில் இருந்து, அமெரிக்காவில் இருந்து பலர் உக்ரேனில் போர் புரிவதற்காகவென்று இரண்டு தரப்புக்களாலும் அழைத்து வரப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள். இஸ்ரேலியர்களும் சண்டைபுரிவதற்காகவென்று உக்ரேனுக்குள் நுழைகின்றார்கள். இந்த விடயங்கள் பற்றிய ஒரு பதிவுதான் இந்த 'உண்மையின் தரிசனம்' நிகழ்ச்சி:

mother a 177 உக்ரைன் ஊடாக ஆயுதம் வாங்க முயற்சி செய்த விடுதலைப்

உக்ரைன் ஊடாக ஆயுதம் வாங்க முயற்சி செய்த விடுதலைப் புலிகள்! நேரடியாக சென்ற முக்கியஸ்தர் (Video
) 1991ஆம் ஆண்டு உக்ரைனிடம் விடுதலைப் புலிகள் ஆயுதம் வாங்க முயற்சித்த சம்பவமொன்று இடம்பெற்றிருந்ததாக பிரித்தானியாவில் இருக்கக்கூடிய வரலாற்று கற்கைகளை கற்றுக்கொண்டிருக்க கூடிய வரலாற்று ஆய்வு மாணவர் மயூரன் தெரிவித்துள்ளார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில், 1991ஆம் ஆண்டு உக்ரைனிடம் விடுதலைப் புலிகள் ஆயுதம் வாங்க முயற்சித்த சம்பவமொன்று இடம்பெற்றிருந்தது. அந்த நேரத்தில் போலந்திலிருந்து, அங்கு இருக்க முடியாத நிலை காரணமாக கிட்டு அண்ணன் ரஷ்யாவிற்கு செல்கிறார். ரஷ்யாவிற்கு போகும் போது உக்ரைனில் ஆயுத சந்தை இருக்கும் இடத்திற்கு, ஆயுதங்களை நேரில் பார்த்து வாங்குவதற்காக செல்கிறார். இதன்போது அவரை இலகுவாக அடையாளம் காண்கிறார்கள். இதன்போது வழமையாக ஆயுதங்கள் பரிமாற்றம் செய்யும் மாபியா முகவரொருவர், இலங்கை அரசு உங்களை கைது செய்து அங்கு அனுப்புமாறு கோரியிருக்கும் நிலையில் உக்ரைன் அரசாங்கம் உங்களை கண்காணித்து வருகிறது என சொல்லப்படுகிறது. உடனடியாக கிட்டு அங்கிருந்து ரஷ்யாவிற்கு கடத்தப்பட்டு அங்கிருந்து இந்தோனேசியாவிற்கு செல்லும் சந்தர்ப்பத்தில் அவர் உக்ரைனில் இருந்த வீடு அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் முற்றுகையிடப்பட்டது. இதேவேளை ரஷ்யாவிலிருந்து விடுதலைப் புலிகளால் கொள்வனவு செய்யப்பட்ட சில ஆயுதங்கள் போலியானவை என்ற விடயமும் இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான விரிவான தகவலுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான ஊடறுப்பு நிகழ்ச்சி,

mother a 176 தமிழர்களை கொல்ல உதவிய உக்ரெயினுக்கு ஏன் ஆதரவு நிலை? | செய்திகளுக்கு அப்ப...

இன்னும் 14 நாட்களே ரஷ்யாவால் தாக்குப் பிடிக்க முடியும்: அமெரிக்க உளவு நிறுவனம் சொல்லும் தகவல் இது … March 15, 2022 admin இன்றில் இருந்து இன்னும் 14 நாட்களுக்கு தான் ரஷ்ய ராணுவத்தால் உக்கிரைனில் தாக்குப் பிடிக்க முடியும் என்றும். அதன் பின்னர் அவர்களுக்கு வரும் சப்பிளை அனைத்தும் தடைப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. ரஷ்யா ஏற்கனவே பெரும் பொருளாதாரப் பிரச்சனையில் உள்ளதால். உக்கிரைனில் நிலை கொண்டுள்ள ராணுவத்தை கவனிக்க தேவையான பணத்தை ஒதுக்க முடியாமல் திண்டாடுவதாக அமெரிக்க செய்தி ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளது. இதனை பிரித்தானிய செய்திச் சேவையும் தெரிவித்து வருகிறது. இன் நிலையில் தலை நகர் கிவியை இதுவரை ரஷ்ய துருப்புகளால் கைப்பற்ற முடியவில்லை. கடுமையான ஆளில்லா விமான தாக்குதலை உக்கிரைன் ஆரம்பித்துள்ளது. உக்கிரைன் நாட்டின், கிரீமியா பகுதியில் இருந்து புறப்பட்ட ராணுவம், நாட்டை அப்படியே ஊடறுத்து முன்னேறி தலை நகர் வரை வரும் என்று எதிர்பார்கப்பட்ட நிலையில். குறித்த ரஷ்ய படைகள் அந்த இடத்தில் இருந்து சுமார் 150 KM தூரம் கூட நகர முடியவில்லை. இன் நிலையில் ரஷ்யா தனது ராணுவத்தை முன்னேற விடாமல் , அப்படியே நிலை கொள்ள வைத்து விட்டு. ஏவுகணையால் பல இடங்களை தாக்கி அழித்து வருகிறது. இந்த குறுந்தூர ஏவுகணைகள் அனைத்துமே மிக மிக விலை உயர்ந்தவை. மேலும் ரஷ்யா போர் விமானங்களும் தாக்குதல் நடத்தி வருகிறது. ஆனால் ரஷ்யா ஹெலிகளை பாவிப்பதை வெகுவாக குறைத்து விட்டது. காரணம் அமெரிக்கா கொடுத்துள்ள ஸ்ரிங்கர் ஏவுகணைகள் ரஷ்யாவின் பல ஹெலிகளை வீழ்த்தியுள்ளதே காரணம் என்கிறார்கள்

செவ்வாய், 15 மார்ச், 2022

mother a 175 ஜோ பைடன், -ஜெலரி, ஜஸ்டின் ரூடரை தடை செய்தத

ஜோ பைடன், -ஜெலரி, ஜஸ்டின் ரூடரை தடை செய்தது ரஷ்யா
- விற்ற அலாஸ்கா மாநிலத்தை மீண்டும் தரச் சொல்லும் சற்று முன்னர் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், முன் நாள் முதல் பெண் மணி ஹெலரி கிங்ரன் மற்றும் கனடா அதிபர் ஜஸ்ரின் ரூடர் ஆகியோரை தடை செய்து அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார். மேலும் அமெரிக்காவின் பல மூத்த அதிகாரிகளை ரஷ்யா தடை செய்துள்ளது. எனவே இவர்களில் இனி எவரும் ரஷ்யா செல்ல முடியாது. இந்த தடை பட்டியலில் இந்திய வம்சாவழி, அமெரிக்க துணை ஜனாதிபதியான கமலா ஹரில் பெயர் இல்லை என்பது ஒரு புறம் இருக்க. அலாஸ்கா என்ற தனது, பெரும் மாநிலத்தை 1867ம் ஆண்டு ரஷ்யா அமெரிக்காவுக்கு விற்றது. அது கனடா மற்றும் ரஷ்யாவை பிரிக்கும் எல்லையில் அமைந்துள்ளது. இன் நிலையில் விற்ற அலாஸ்காவை திருப்பி தருமாறு…. ரஷ்யா மீண்டும் கோரியுள்ளது… இந்தியாவுக்கு சொந்தமாக இருந்த கச்ச தீவை, இலங்கை பெற்றுக் கொண்டது போல, ரஷ்யாவின் பெரும் நிலப்பரப்பு ஒன்றை அமெரிக்கா விலைக்கு வாங்கி இருந்தது. தற்போது அங்கே பாரிய அமெரிக்க படைத் தளம் உள்ளது. அந்த இடத்தை மீண்டும் தருமாறு ரஷ்யா கோருவது, பெரும் சிக்கலை ஏற்படுத்தும். இதனை அடுத்து அமெரிக்கா தனது மேலதிக படைகளை அலாஸ்கா நோக்கி நகர்த்த ஆரம்பித்துள்ள அதேவேளை. கனடாவும் அதி உச்ச உஷார் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

mother a 174 வரலாறு காணாத நெருக்கடியில் நாடு! வைப்பிலிட்ட புலம்பெயர் இலங்கையர்களின் ந...

தீவிரமடையும் யுத்த களமுனை - இலங்கையை காப்பாற்ற தயாராகும் ரஷ்யா
உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இலங்கைக்கு சாதகமான நிலைப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பொருளாதார ரீதியில் ரஷ்யாவை மேற்குலக நாடுகள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், பெரும் சிக்கலில் புத்தின் அரசாங்கம் மாட்டியுள்ளது. இந்நிலையில் இலங்கை மற்றும் இந்தியாவிற்கு மிகக் குறைந்த விலையில் கச்சா எண்ணெயை வழங்க ரஷ்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் பெறுவது குறித்து பேச்சு வார்த்தை நடந்து வருவதாக அரசாங்கத்தின் உயர்மட்ட தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கச்சா எண்ணெயை பெறுவதற்காக ரஷ்யா மீது மேற்குலக நாடுகள் விதிக்கும் தடைகள் இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. அத்துடன் ரஷ்யாவிடமிருந்து இலங்கைக்கு எண்ணெயைப் பெற்றுக்கொள்ள முடியும். ரஷ்யாவின் நட்பு நாடுகள் என்ற வகையில் இலங்கை மற்றும் இந்தியாவுக்கு கச்சா எண்ணெயை அதிகரித்து வரும் சந்தை விலையை விட குறைவான விலையில் வழங்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது. அதற்கமைய, இலங்கைக்கு கச்சா எண்ணெய் கப்பலை வழங்க ரஷ்யா இணக்கம் தெரிவித்துள்ளது. ஷெல் நிறுவனம் பல வருடங்களுக்கு முன்னர் இலங்கையை விட்டு வெளியேறியதன் பின்னர் ரஷ்யா இலங்கைக்கு எண்ணெய் வழங்கும் நாடாக செயற்பட்டு வருகின்றது. ரஷ்யாவிடமிருந்து மலிவான விலையில் எண்ணெயை பெறுவதன் மூலம் இலங்கையில் எண்ணெய் விலையை அரசாங்கம் குறைக்க முடியும் என கூறப்படுகின்றது. இலங்கையில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி காரணமாக எரிபொருளின் விலைகள் வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ள நிலையில், அதற்கு பெரும் தட்டுப்பாடும் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

திங்கள், 14 மார்ச், 2022

mother a 173 திருப்பி அடித்திருப்போம், கட்டுப்படுத்திக் கொண்டோம்"

இந்திய ஏவுகணை சம்பவம்: "திருப்பி அடித்திருப்போம், கட்டுப்படுத்திக் கொண்டோம்" - இம்ரான் கான்
சஹர் பலோச் பிபிசி செய்தியாளர், இஸ்லாமாபாத் 14 மார்ச் 2022 புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியா பாகிஸ்தான் எல்லை பட மூலாதாரம்,GETTY IMAGES பாகிஸ்தான் மண்ணில் இந்தியாவில் இருந்து பறந்து வந்த ஏவுகணை வடிவிலான பொருள் விழுந்த விவகாரத்தில் அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் எதிர்வினையாற்றி இருக்கிறார். ஆனால், பிரதமர் அலுவலகம் மூலமாக இல்லாமல் கட்சி பொதுக்கூட்டத்தில் பேசும்போது அவர் இந்த ஏவுகணை விவகாரத்தை பேசியிருக்கிறார். இந்த விவகாரத்தில், ஏவுகணை போன்ற பொருள் விழுந்தவுடனேயே பாகிஸ்தான் விரும்பினால், ஏதாவது செய்திருக்கலாம், ஆனால் நாங்கள் அந்த விஷயத்தை மிகவும் சரியாகக் கையாண்டோம் என்று இம்ரான் கான் கூறினார். பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஹபிசாபாத் பேரணியில் பேசிய அவர், "பாகிஸ்தானுக்கு பல முனைகளில் இருந்து தொடர்ந்து அச்சுறுத்தல்கள் வருகின்றன. இப்போது இந்தியாவின் ஏவுகணையும் வந்துள்ளது. அந்த விவகாரத்தில் பாகிஸ்தான் மிகச் சிறப்பாக எதிர்வினையாற்றியது. நாங்கள் நினைத்தால் வேறு ஏதாவது கூட செய்து இருக்க முடியும். ஆனால், கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்தோம்" என்றார்.யுக்ரேன் நெருக்கடி பற்றி பேசும்போது இந்தியாவை தொடர்புபடுத்தியும் இதே பேரணியில் இம்ரான் கான் பேசினார். "நம் நாடு சரியான பாதையில் செல்கிறது. நமது எல்லையை பாதுகாத்துக் கொள்ளும் எல்லா திறன்களும் நம்மிடம் உள்ளன என்று இன்று நான் உங்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன்," என்று இம்ரான் கூறினார். மேலும் அவர், "அடிமை இந்தியாவில் நமது முகமது அலி ஜின்னா சுதந்திர தலைவராக இருந்தார். அவரை நினைத்து முஸ்லிம்கள் பெருமிதம் கொள்ள வேண்டும். அவர் யாருக்கும் அடிபணிந்ததில்லை." "இப்போதுதான் ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்து தூதர்களும் ரஷ்யாவுக்கு எதிராக இம்ரான் கான் அரசு அறிக்கை வெளியிட வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளனர். அது அனைத்து நெறிமுறைகளுக்கும் எதிரானது. முதலில் அப்படிச் செய்ய இந்தியாவுக்கு தைரியம் இருக்கிறதா என்று அவர்களிடம் நான் கேட்டேன்," என்று இம்ரான் காந் தெரிவித்தார். விளம்பரம் இம்ரான் கான் பட மூலாதாரம்,PPI "எந்தவொரு நாட்டின் வான் எல்லைக்குள் எது நுழைந்தாலும் அது தாக்குதலாகவே கருதப்படும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஏவுகணை போன்ற வடிவத்துடன் ஒரு பொருள் பக்கத்து நாட்டில் விழுந்தால் அதற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று பாதுகாப்பு விதிகளும் சட்டங்களும் கூறுகின்றன. பாகிஸ்தான் அப்படி செய்யாதது, புத்திசாலித்தனமான முடிவு மட்டுமின்றி ஒரு விவேகமான முடிவாகும்," என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். 2022ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் தேதி பாகிஸ்தானின் மியான் சன்னுவில் வெடிமருந்து நிரப்பப்படாத காலியான இந்திய ஏவுகணை கலன் (பிரமோஸ் போன்ற வடிவிலானது) "தற்செயலாக" விழுந்த பிறகு, பாகிஸ்தான் "தீர்க்கமாக சிந்தித்து வெளிப்படுத்திய எதிர்வினையை" பாராட்ட இந்திய கொள்கை ஆராய்ச்சி மையத்தின் மூத்த உறுப்பினரான சுஷாந்த் சிங்கின் பயன்படுத்திய வார்த்தைகள் இவை. இந்த விவகாரத்தில் பாகிஸ்தானை பாராட்டிய ஒரே இந்தியர் சுஷாந்த் சிங் மட்டுமல்ல. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றமான உறவுகள், சமீபத்திய நிகழ்வுகள் மற்றும் அணுசக்தி திறன்களை கருத்தில்கொள்ளும்போது, இந்த 'தற்செயலான ஏவுகணை' சம்பவம், இரு நாடுகளுக்கும் இடையே மோதலுக்கு வழி வகுத்திருக்குமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. ஆனால் இப்படி நடக்கவில்லை. பாகிஸ்தான் அரசுக்கே இதன் பெருமை சாரும் என்று பல இந்திய ஊடகவியலாளர்கள் மற்றும் ராணுவ நிபுணர்களும் கூறுகின்றனர். குறிப்பாக இந்தியா இதை ஏற்றுக்கொள்ள இரண்டு நாட்கள் எடுத்துக்கொண்ட சூழ்நிலையில் இது மேலும் முக்கியத்துவம் பெறுகிறது. பாகிஸ்தானின் கானேவால் மாவட்டத்தில் உள்ள மியான் சன்னு நகரில் மார்ச் 9ஆம் தேதி எதிர்பாராத ஒரு சம்பவம் நடந்தது. அதிவேகமாக பறந்துவந்த பொருள் ஒன்று உள்ளூர் குடியிருப்பு பகுதி மீது விழுந்தது. பிரமோஸ் ஏவுகணை விற்பனைக்கு பிலிப்பைன்ஸுடன் ஒப்பந்தம் செய்த இந்தியா - பின்னணி என்ன? இந்தியாவின் அக்னி-5 ஏவுகணையின் பலம் என்ன? எங்கெல்லாம் தாக்க முடியும்? வடகொரிய ஏவுகணைகளைக் கண்டு பிற நாடுகள் கவலைப்படுவது ஏன்? பாகிஸ்தான் ராணுவத்தின் மக்கள் தொடர்புத் துறையின் (ISPR) தலைமை இயக்குநர் ஜெனரல் மேஜர் பாபர் இஃப்திகார், மார்ச் 10 அன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் "மியான் சன்னுவில் விழுந்த அதிவேகப் பொருள் அநேகமாக இந்திய ஏவுகணையாக இருக்கலாம்" என்று கூறினார். அடுத்த நாள், மார்ச் 11 ஆம் தேதி, இந்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையில், "வழக்கமான பராமரிப்பு பணியின் போது தொழில்நுட்பக் கோளாறால் ஏவுகணை தவறுதலாக ஏவப்பட்டது" என்று ஒப்புக்கொண்டது. மேலும் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் உயர்மட்ட விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது. "ஒரு பெரிய நகரத்தை நோக்கி ஏவுகணை சென்றிருந்தால் என்ன ஆகியிருக்கும்?" ISPR பட மூலாதாரம்,ISPR இது குறித்து புது டெல்லியில் உள்ள கொள்கை ஆராய்ச்சி மையத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் சுஷாந்த் சிங் பிபிசியிடம் பேசினார். "இந்த ஏவுகணை ஒரு பெரிய நகரத்தை நோக்கிச் சென்றிருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதுதான் இப்போது விவாதத்தின் மையமாக உள்ளது. அதிர்ஷ்டவசமாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை," என்று குறிப்பிட்டார். பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைப்பு மிகவும் சிறப்பாக உள்ளது என்று சுஷாந்த் கூறினார். "அப்படி இருந்தபோதிலும், எல்லைக்கு அப்பாலில் இருந்து வந்த ஏவுகணை தற்செயலாக ஏவப்பட்டதா இல்லையா என்பதை எந்த பாதுகாப்பு அமைப்பும் கணிக்க முடியாது."என்கிறார் அவர். "எந்தவொரு நாட்டின் வான் எல்லைக்குள் எது நுழைந்தாலும் அது தாக்குதலாகவே கருதப்படும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஏவுகணை போன்ற வடிவத்துடன் ஒரு பொருள் பக்கத்து நாட்டில் விழுந்தால் அதற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று பாதுகாப்பு விதிகளும் சட்டங்களும் கூறுகின்றன. பாகிஸ்தான் அப்படி செய்யாதது, புத்திசாலித்தனமான முடிவு மட்டுமின்றி ஒரு விவேகமான முடிவாகும்," என்று அவர் குறிப்பிட்டா

a 294 காசாவில் உள்ள கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 24 பேர்

  காசாவில் தாக்குதல்: பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பலர் மரணம் காசாவில் உள்ள கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் ப...