மட்டக்களப்பில் காணாமல்போன பாடசாலை மாணவி! தாய் விடுத்த கோரிக்கை
மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலையை சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் கடந்த 2 மாதங்களாக காணாமல் போயுள்ளதாக தாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இச்சம்பவத்தில் கொக்கட்டிச்சோலையை சேர்ந்த 17 வயதான மனோகரன் யதுர்னா எனும் மாணவியே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.
இதெவேளை, மாணவி கடந்த 10/08/2024 ம் திகதியில் இருந்து காணாமல்போயுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு பதிவு செய்யப்பட்டும் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லைனெ தாய் தெரிவித்துள்ளார்.
எனவே காணாமல்போயுள்ள மாணவி தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் தொலைபேசி இலக்கத்திறக்கு 0775994497 அறிவிக்குமாறு தாய் கோரிக்கை விடுத்துள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக