கேப்பாப்புலவு காணிகளை விடுவித்து தருமாறு வடக்கு மாகாண ஆளுநரிடம் கோரிக்கை
Courtesy: Thavaseelan
முல்லைத்தீவு - கேப்பாப்புலவு காணிகளை விடுவித்து தங்களிடம் ஒப்படைக்குமாறு கேப்பாப்புலவு மக்கள் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று (21.10.2024) ஆளுநரை சந்தித்த கேப்பாப்புலவு மக்கள், தமது கோரிக்கை அடங்கிய மனு ஒன்றையும் வழங்கியுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி 'L' வலயத்தில் கொக்குத்தொடுவாய், கொக்கிளாய், கருநாட்கேணி ஆகிய பிரதேசங்கள் உள்ளன.
கோரிக்கை அடங்கிய மனு
இவற்றை சொந்த இடமாக கொண்ட மக்களும் நேற்று வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்து தமது கோரிக்கை அடங்கிய மனுவை கையளித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக