கொழும்பு தாமரை கோபுரத்தில் (Colombo Lotus Tower) இருந்து தவறி விழுந்து பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது இன்று (07) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், கொழும்பு தாமரை கோபுரத்தின் கண்காணிப்பு தளத்தில் இருந்து குறித்த மாணவி தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த மாணவி
உயிரிழந்த மாணவி சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி கற்பவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், மாணவி வீழ்ந்தமை தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக