உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

சனி, 5 அக்டோபர், 2024

a 105 கொழும்பு - கண்டி பிரதான வீதியில் இரவு கோர விபத்து..

 

கொழும்பு - கண்டி பிரதான வீதியில் இரவு கோர விபத்து...பரிதாபமாக உயிரிழந்த பாதசாரி!

கொழும்பு - கண்டி பிரதான வீதியில் இரவு கோர விபத்து...பரிதாபமாக உயிரிழந்த பாதசாரி! | Colombo Kandy Street Accident Pedestrian Died

கொழும்பு - கண்டி பிரதான வீதியில் மொலகொட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து சம்பவம் நேற்றிரவு (04-10-2024) இடம்பெற்றுள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு - கண்டி பிரதான வீதியில் இரவு கோர விபத்து...பரிதாபமாக உயிரிழந்த பாதசாரி! | Colombo Kandy Street Accident Pedestrian Died

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கண்டியில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த நோயாளர் காவு வண்டி ஒன்று வீதியில் பயணித்த பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


உயிரிழந்தவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, நோயாளர் காவு வண்டியின் சாரதி சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கேகாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 296 மட்டக்களப்பில் (Batticaloa) குடும்பஸ்தர் ஒருவர் அடித்து கொலை

  மட்டக்களப்பில் (Batticaloa) குடும்பஸ்தர் ஒருவர் அடித்து கொலை  செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த கொலைச...