உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

வியாழன், 17 அக்டோபர், 2024

a 124 தமிழீழப்பகுதியில் துயரம்,

 

வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் ஒருவர் உயிரிழப்பு

வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் ஒருவர் உயிரிழப்பு | Trincomale Scuffle One Died

திருகோணமலை -  தம்பலகாமம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட கோயிலடி பகுதியில் நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்தர்க்கம் காரணமாக ஏற்பட்ட கைகலப்பினால் ஒருவர்  உயிரிழந்துள்ளார்.

இதன்போது, கோயிலடி, தம்பலகாமத்தை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 35 வயதுடைய கந்தசாமி பேரின்பராசா என்பவரே நேற்று(17)மாலை உயிரிழந்துள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காவல்துறையினர் விசாரணை

குறித்த நபர் குடி போதையில் வாய்தகராறில் ஈடுபட்ட நிலையில் அது கைகலப்பாக மாறியதில் அவர் காயமடைந்து தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் நேற்று முன்தினம்(16) இரவு 10.00 மணியளவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து,  திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று(17) மாலை உயிரிழந்துள்ளார்.


இந்நிலையில்,  சம்பவத்துடன் தொடர்புடைய கோயிலடி தம்பலகாமம் பகுதியை சேர்ந்த 22 மற்றும் 36 வயதுடைய இருவரை தம்பலகாமம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை தம்பலகாமம் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 204 சர்வதேச பிடியாணை உத்தரவு

சர்வதேச பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தம்பதியினர் கட்டுநாயக்கவில் கைது சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்ட  தம்பதியின...