உழவு இயந்திரத்துடன் கனரக வாகனம் மோதி விபத்துக்குள்ளாகி ஒருவர் ஸ்தலத்தில் பலி
உழவு இயந்திரத்துடன் கனரக வாகனம் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்முனை அம்பாறை பிரதான வீதியில் அமைந்துள்ள மல்வத்தை பள்ளிவாசலுக்கு அருகாமையில் இன்று (05) மாலை இடம்பெற்றுளள்து.
குறித்த விபத்தில் சம்மாந்துறை விளினியடி 03 பகுதியை சேர்ந்த 64 வயதுடைய நபர், ஸ்தலத்தில் மரணமடைந்துள்ளார்.
அத்துடன் மற்றுமொருவர் காயமடைந்து நிலையில், அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்தானது உழவு இயந்திரம் வயலை உழுது விட்டு வீடு திரும்பும் வழியில் இடம்பெற்றுள்ளதுடன், உழவு இயந்திரத்துடன் மோதிய கனரக வாகனத்தின் சாரதி சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்தில் மரணமடைந்தவரின் சடலம் அம்பாறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக