யாழில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்கு சென்றவர்களுக்கு அதிர்ச்சி; வீடொன்றில் சடலம் மீட்பு
யாழ்ப்பாணத்தில் தனிமையில் வசித்துவந்த முதியவர் அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி கேணியடி பகுதியை சேர்ந்த 79 வயதுடையவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நல்லூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொது சுகாதார பரிசோதகர் ஆகியோர் நேற்று சனிக்கிழமை (26) டெங்கு ஒழிப்பு கள சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
அதன்போது அதிகாரிகள் இந்த முதியவரின் வீட்டுக்குச் சென்றபோது, வீட்டினுள் துவிச்சக்கர வண்டி மீது விழுந்த நிலையில் முதியவர் சடலமாக காணப்பட்டுள்ளார்.
சடலத்தை பார்வையிட்ட அதிகாரிகள் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தனர்.
அதன் பின்னர், செய்யப்பட்ட உடற்கூற்று பரிசோதனையின்போது மாரடைப்பு காரணமாகவே முதியவர் உயிரிழந்தமை தெரியவந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக