உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

சனி, 19 அக்டோபர், 2024

a 126 வெளிநாட்டு மோகத்தால் உயிரைவிடும் தமிழ் இளைஞர்கள்,?

 

ஐரோப்பிய எல்லையில் உயிரிழந்த யாழ் இளைஞன்; வெளியான பகீர் 

ஐரோப்பிய எல்லையில் உயிரிழந்த யாழ் இளைஞன்; வெளியான பகீர் தகவல்! | Jaffa Youth Dies At European Border

லித்துவேனியா எல்லை பாதுகாப்பு படையினரால்  யாழ்ப்பாண இளைஞன் அடித்துக்கொல்லப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த (14-10-2024) 8 பேர் கொண்ட இளைஞர் குழு ஒன்று, ஐரோப்பா ரஷ்யா எல்லையை கடக்க முயற்சி செய்த நிலையில் , 24 வயதான குறித்த இளைஞன் எல்லை பாதுகாப்பு படையினரால் அடித்துக்கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.


பெலாரஸ் - லித்துவேனியா எல்லையில் சடலம்

கடந்த வாரம் பெலாரஸ் - லித்துவேனியா எல்லையில் ஒரு  இலங்கை அகதியின் உடலை ஐரோப்பிய எல்லை பாதுகாப்பு காவலர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவரிடம் தொலைபேசிகள் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பிய எல்லையில் உயிரிழந்த யாழ் இளைஞன்; வெளியான பகீர் தகவல்! | Jaffa Youth Dies At European Border

உயிரிழந்தவர் இலங்கையை சேர்ந்த 24 வயதுடைய பிரஜை என அவரது சடலத்திற்கு அருகில் கிடந்த ஆவணங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, உயிர்ழந்தவர் யாழ்ப்பாணம் - கோப்பாய் பகுதியை சேர்ந்த எஸ். ஜதுசன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அதில் இருந்த பெயர் மற்றும் விபரங்களை கொண்டு உயிரிழந்த இளைஞன் அடையாளம் உறுதி செய்யப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். 

இந்நிலையில்  குறித்த  இளைஞனின்  மரணம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 204 சர்வதேச பிடியாணை உத்தரவு

சர்வதேச பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தம்பதியினர் கட்டுநாயக்கவில் கைது சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்ட  தம்பதியின...