உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

செவ்வாய், 8 அக்டோபர், 2024

a 109 யாழ்ப்பாணத்தில் பல லட்சம் ரூபா பணத்தை தீயிட்டு எரித்த குடும்பஸ்தர்

 

யாழ்ப்பாணத்தில் பல லட்சம் ரூபா பணத்தை தீயிட்டு எரித்த குடும்பஸ்தர்... நடந்தது என்ன?

யாழ்ப்பாணத்தில் பல லட்சம் ரூபா பணத்தை தீயிட்டு எரித்த குடும்பஸ்தர்... நடந்தது என்ன? | Person Set Fire Several Lakhs Of Rupees In Jaffna

யாழ்ப்பாணத்திலுள்ள பகுதியொன்றில் பல லட்சம் ரூபா பெறுமதியான பணத்தினை தீயிட்டு எரித்து வீதியில் எறிந்த சந்தேக நபர்  வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,


அராலி பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேக நபர் இன்றையதினம் (08-10-2024) காலை அவரது வீட்டுக்கு முன்பாக ரூபா 10 லட்சம் பெறுமதியான பணத்தினை தீயிட்டு எரித்துள்ளார்.

இதனையடுத்து, வட்டுக்கோட்டையில் உள்ள இலங்கை வங்கிக்கு சென்று அங்கிருந்து 7 இலட்சம் ரூபா பணத்தினை எடுத்து வந்து வீதியில் எறிந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பல லட்சம் ரூபா பணத்தை தீயிட்டு எரித்த குடும்பஸ்தர்... நடந்தது என்ன? | Person Set Fire Several Lakhs Of Rupees In Jaffna

இந்த நிலையில் வீதியால் சென்றவர்கள் அந்த பணத்தினை எடுத்துச் சென்றதை காணக்கூடியதாக இருந்தது.

இது தொடர்பில் சந்தேகநபரின் மனைவி வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து, 42 வயதுடைய, 3 பிள்ளையின் தந்தையான குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 298 20 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கண் பார்வையற்ற தீர்க்கதரிசியான பாபா வங்கா

  20 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கண் பார்வையற்ற தீர்க்கதரிசியான பாபா வங்கா  (Baba Vanga) உலகப்புகழ் பெற்றவராவார்.  அவரது பல கணிப்புகள் பலித்து ...