உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

வெள்ளி, 4 அக்டோபர், 2024

a 104 யாழில் நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள் விபத்து

யாழில் நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள் விபத்து

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் இன்று (4.10.2024) மாலை 6 மணி அளவில் விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மாமுனையிலிருந்து தாளையடி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் செம்பியன்பற்று கடற்கரை வீதியில் இருந்து பயணித்த மோட்டார் சைக்கிளும் செம்பியன்பற்று வடக்கு நாற்சந்தியில் ஒன்றுடன் ஒன்று மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. யாழில் நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள் விபத்து விபத்தின் போது காயமடைந்தவர்களை அயலவர்கள் மீட்டு மருதங்கேணி வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் அவர்கள் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு வருகை தந்த மருதங்கணி போக்குவரத்து பொலிசார் விபத்து இடம்பெற்ற பகுதியை பார்வையிட்டதுடன் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 204 சர்வதேச பிடியாணை உத்தரவு

சர்வதேச பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தம்பதியினர் கட்டுநாயக்கவில் கைது சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்ட  தம்பதியின...