உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

புதன், 2 அக்டோபர், 2024

a 103 யாழில் அதிர்ச்சி சம்பவம்..

 

யாழில் அதிர்ச்சி சம்பவம்... வெளிநாட்டவரிடம் இலஞ்சம் வாங்கி நபரை தாக்கிய பொலிஸ் அதிகாரி!

யாழில் அதிர்ச்சி சம்பவம்... வெளிநாட்டவரிடம் இலஞ்சம் வாங்கி நபரை தாக்கிய பொலிஸ் அதிகாரி! | Police Officer Assault Man Bribe Foreigner Jaffna

யாழ்ப்பாணம் - நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஒருவர் வெளிநாட்டவரிடம் இருந்து இலஞ்சம் வாங்கிக்கொண்டு தனது வீட்டினுள் அத்துமீறி நுழைந்து தாக்குதல், நடத்தியதாக பருத்தித்துறையை சேர்ந்த பாதிக்கப்பட்ட நபர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அது தொடர்பில் தெரிவிக்கையில்,

நான் தற்போது வசித்து வரும் வீடு தொடர்பில் பிறிதொரு நபர்களுடன் பிரச்சனை உள்ளது.


குறித்த பிரச்சனை சிவில் வழக்கு என்பதால், பொலிஸார் நேரடியாகத் தலையிடமுடியாது. முறைப்பாட்டின் அடிப்படையில் வழக்குத் தாக்கல் செய்து நீதிமன்றில் முற்படுத்தியிருக்க வேண்டும்.

மாறாக வெளிநாட்டவரிடம் இருந்து இலஞ்சத்தைப் பெற்றுக் கொண்டு நேரடியாக எனது வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடாத்தி எனது உடமைகளை தூக்கி வெளியே எறிந்தனர்.

மேலும், பொலிஸாரின் ஆதரவுடன் என்மீது வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

யாழில் அதிர்ச்சி சம்பவம்... வெளிநாட்டவரிடம் இலஞ்சம் வாங்கி நபரை தாக்கிய பொலிஸ் அதிகாரி! | Police Officer Assault Man Bribe Foreigner Jaffna

4 நாட்களாக பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது வீடு திரும்பியுள்ளதாக பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார்.

பொலிஸாரின் இந்த அடாவடி தொடர்பில் இலங்கை மனித உரிமை ஆணைக் குழுவிலும், மாவட்ட பிராந்திய பொறுப்பதிகாரியிடமும் முறையிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

பொலிஸார் இலஞ்சம் வாங்கிக் கொண்டு செய்யப்படும் விதத்தை ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்காவைச் சென்றடையும் வகையில் இதனை நான் வெளிக்கொணர்வதாக பாதிக்கப்பட்ட நபர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 313யாழ் செம்மணி புதைகுழி தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு

யாழ் செம்மணி புதைகுழி தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு  செம்மணி – சித்துபாத்தி மனித புதைக்குழி விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் வழக்க...