உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

வியாழன், 31 அக்டோபர், 2024

a 138 மாவீரர்களைப் போற்ற ஆளுக்கொரு மரம் நடுவோம்: ஐங்கரநேசன் வலியுறுத்து

 

மாவீரர்களைப் போற்ற ஆளுக்கொரு மரம் நடுவோம்: ஐங்கரநேசன் வலியுறுத்து

மாவீரர்களைப் போற்ற ஆளுக்கொரு மரம் நடுவோம்: ஐங்கரநேசன் வலியுறுத்து | Emphasis On Green By Aingaranesan

மாவீரர்களைப் போற்றும் இப் புனித கார்த்திகையில் பண்பாட்டின் தொடர்ச்சியைப் பேணி அவர்களின் நினைவாகவும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும் ஆளுக்கொரு மரம் நடுவோம் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர பொ. ஐங்கரநேசன்(P. Ayngaranesan) தெரிவித்துள்ளார்.

இதனை முன்னிட்டு பொ. ஐங்கரநேசன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நல்லாட்சி ஆணையம்

''போரின் முற்றுகைக்குள்ளும் இயற்கை எனது நண்பன் என்று சொல்லி சூழல் நல்லாட்சி ஆணையம், வனவளப் பாதுகாப்புப்பிரிவு என்பனவற்றை உருவாக்கி எமது சூழலைப் பேணிப் பாதுகாத்த தலைமைத்துவத்தைக் கொண்டிருந்தவர்கள் நாங்கள்.


மரங்களை ஆதித் தெய்வங்களாக வழிபட்ட நாம் இறந்தவர்கள் நினைவாக மரங்களை நாட்டும் தொல் மரபையும் கொண்டிருந்தோம். இந்தப் பண்பாட்டு மரபே காலநிலை மாற்றங்களின் தாக்குதல்களில் இருந்து எம்மையும் எம்பூமியையும் காப்பாற்றும்.

வடக்கு மாகாணசபையின் தீர்மானத்துக்கு அமைவாக 2014ஆம் ஆண்டுமுதல் கார்த்திகை மாதம் வடமாகாண மரநடுகை மாதமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. உலகம் இன்று எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளில் தலையாய பிரச்சினையாகக் காலநிலை மாற்றம் உருவெடுத்துள்ளது.

பூமியின் சராசரி வெப்பநிலை ஆண்டுக்கு ஆண்டு எகிறிவருகிறது. காட்டுத்தீயும் வெப்ப அலைகளும் முன்னெப்போதையும்விட மூர்க்கம் கொண்டு பொசுக்கி வருகிறது. இன்னொருபுறம், பருவம் தப்பிக் கடும்மழை கொட்டுகிறது.

[NM7L26X ]

வருடாந்த மழை வீழ்ச்சி

வருடாந்த மழை வீழ்ச்சி ஓரிரு நாட்களிலேயே பேய்மழையாகப் பொழிகிறது. இவை ஏற்படுத்தும் வெள்ளப்பெருக்கிலும் மண்சரிவிலும் சிக்கி உலகம் பூராவும் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கானோர் பலியாகி வருகிறார்கள்.

துருவப் பகுதிகளில் உள்ள பனிமலைகள் உருகி வருவதன் காரணமாகக் கடல் மட்டம் உயர்ந்து செல்கிறது. இதனால் , உலகநாடுகள் பலவற்றின் கரையோரங்களைக் கடல்நீர் விழுங்கத் தொடங்கியுள்ளது.

இதற்கு இலங்கைத் தீவும் விதிவிலக்கல்ல. கடல் மட்ட உயர்வால் யாழ். குடாநாடு ஆனையிறவுப்பகுதியில் கடலால் துண்டிக்கப்பட்டுத் தனித் தீவாக உருவாகும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

உலகம் இன்று அனுபவிக்கத் தொடங்கியுள்ள இந்த அவலங்களுக்குக் கரிக்காற்றை உறிஞ்சுகின்ற காடுகளை அளவுகணக்கில்லாமல் நாம் அழித்துத் தள்ளுவதே அடிப்படைக் காரணமாகும்.

பூமி சூடாகிவருவதன் எதிர்விளைவுகளாகக் கடும் வறட்சி ஏற்பட்டுத் குடிநீருக்காக நெடுந்தொலைவு அலைய வேண்டி ஏற்படும். பயிர்களின் உற்பத்தி வீழ்ச்சியடைந்து உணவுப் பாதுகாப்புக் கேள்விக்குறியாகும்" என்றார்.

புதன், 30 அக்டோபர், 2024

a 137 அரசகைக்கூலிகளின் துணையுடன் நடக்கும் கொலைகள் பீதியில் தமிழீழ மக்கள்?

 

யாழில் கணவன் மனைவி கொலை; அதிர்ச்சியில் பிரதேசவாசிகள்; தீவிர விசாரணையில் பொலிஸார்

யாழில் கணவன் மனைவி கொலை; அதிர்ச்சியில் பிரதேசவாசிகள்; தீவிர விசாரணையில் பொலிஸார் | What Happened To Husband And Wife In Jaffna

 யாழ்ப்பாணம் வடமராட்சி கற்கோவளம், ஐயனார் கோவிலடி பகுதியில் கணவன், மனைவி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம்  அதிச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

 மருத்துவ மனையில் ஒப்பந்த அடிப்படையில் சலவை தொழிலில் ஈடுபடுபவரும் அவரது மனைவியுமே கொங்கிறீட் கற்களால் தலையில் நசுக்கிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கணவன், மனைவி இருவரும் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.


நடந்தது என்ன?

சம்பவத்தில் மாணிக்கம் சுப்பிரமணியம் என்ற 53 வயதுடைய கணவனும், மேரி என்ற 54 வயதுடைய மனைவியுமே கொலை செய்யப்பட்டுள்ளனர்.

யாழில் துயரத்தை ஏற்படுத்திய பல்கலைக்கழக மாணவனின் உயிரிழப்பு

யாழில் துயரத்தை ஏற்படுத்திய பல்கலைக்கழக மாணவனின் உயிரிழப்பு

கொலை செய்யப்பட்ட கணவன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்பந்த அடிப்படையில் சலவை தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

யாழில் கணவன் மனைவி கொலை; அதிர்ச்சியில் பிரதேசவாசிகள்; தீவிர விசாரணையில் பொலிஸார் | What Happened To Husband And Wife In Jaffna

பாடம் கற்றுகொடுப்பதாக மாணவிகள் இருவர் துஸ்பிரயோகம்; கணித ஆசிரியர் கைது !

பாடம் கற்றுகொடுப்பதாக மாணவிகள் இருவர் துஸ்பிரயோகம்; கணித ஆசிரியர் கைது !

மேலும் பருத்தித்துறை நீதிமன்ற நீதவான் சம்பவ இடத்திற்குச் சென்று சடலங்களைப் பார்வையிட்டதுடன், மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.   

யாழில் கணவன் மனைவி கொலை; அதிர்ச்சியில் பிரதேசவாசிகள்; தீவிர விசாரணையில் பொலிஸார் | What Happened To Husband And Wife In Jaffna

திங்கள், 28 அக்டோபர், 2024

a 136 புலம்பெயர் தமிழர்களை இலக்கு வைக்கும் விசமிகள் சோதனையின் மூலம் அறிய முடியாத நஞ்சி விசமிகளின் கையில் இருப்தை நாம் அறிந்ததே

 

யாழில் லண்டன் வாழ் புலம்பெயர் தமிழருக்கு நேர்ந்த


யாழில் லண்டன் வாழ் புலம்பெயர் தமிழருக்கு நேர்ந்த சோகம் | London Tamil Diaspora Jaffna Death

  லண்டனில் இருந்து யாழ்ப்பாணம் வந்த புலம்பெயர் தமிழர் ஒருவர் பேருந்தில் மயங்கி விழுந்த நிலையில் மருத்துவமனையில் சிகிற்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த குறித்த புலம்பெயர் தமிழர் லண்டனில் நீண்ட காலமாக வசித்து வந்த நிலையில் , அண்மையில் யாழ்ப்பாணம் வருகை தந்திருந்தார்.


அந்நிலையில் கடந்த 17ஆம் திகதி பேருந்தில் தனது உறவினர் வீட்டுக்கு பயணித்துக்கொண்டிருந்த வேளை கல்வியங்காட்டு பகுதியில் பேருந்தினுள் மயங்கி சரிந்துள்ளார்.

உடனடியாக அவரை யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

சம்பவத்தில் 56 வயதான புலம்பெயர் தமிழரே உயிரிழந்துள்ளார். இந்நிலையில் சிகிற்சை பலனின்றி நேற்றைய தினம் (27) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஞாயிறு, 27 அக்டோபர், 2024

a 135 யாழில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்கு சென்றவர்களுக்கு அதிர்ச்சி; வீடொன்றில் சடலம் மீட்பு

 

யாழில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்கு சென்றவர்களுக்கு அதிர்ச்சி; வீடொன்றில் சடலம் மீட்பு

யாழில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்கு சென்றவர்களுக்கு அதிர்ச்சி; வீடொன்றில் சடலம் மீட்பு | Dead Body Recovery In A House Jafna

  யாழ்ப்பாணத்தில் தனிமையில் வசித்துவந்த முதியவர் அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி கேணியடி பகுதியை சேர்ந்த 79 வயதுடையவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நல்லூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொது சுகாதார பரிசோதகர் ஆகியோர் நேற்று சனிக்கிழமை (26) டெங்கு ஒழிப்பு கள சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.


அதன்போது அதிகாரிகள் இந்த முதியவரின் வீட்டுக்குச் சென்றபோது, வீட்டினுள் துவிச்சக்கர வண்டி மீது விழுந்த நிலையில் முதியவர் சடலமாக காணப்பட்டுள்ளார்.

சடலத்தை பார்வையிட்ட அதிகாரிகள் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தனர்.

அதன் பின்னர், செய்யப்பட்ட உடற்கூற்று பரிசோதனையின்போது மாரடைப்பு காரணமாகவே முதியவர் உயிரிழந்தமை தெரியவந்துள்ளது. 

வெள்ளி, 25 அக்டோபர், 2024

a 134 தமிழர்களின் கால்நடைகளை திட்டமிட்டு களவாடும் பெரும்பாண்மை இனத்தவர்?

 

புதுக்குடியிருப்பில் மாட்டை திருடிச்சென்ற கும்பல்

புதுக்குடியிருப்பில் மாட்டை திருடிச்சென்ற கும்பல் | Cow Has Been Stolen In Jaffna

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியில் பட்டியில் நின்ற வளர்ப்பு மாட்டினை கும்பலொன்று திருடிச்சென்றுள்ளது.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அண்மைக்காலமாக வளர்ப்பு மாடுகள் திருட்டுப்போகும் சம்பவங்கள் அதிகளவில் பதிவாகி வருகின்றன.

குறித்த பகுதியில் வீட்டு காணி ஒன்றில் இருந்த சிறிய பட்டியில், கன்றுகளை தவிக்கவிட்டு மனிதாபிமானம் அற்ற நிலையில் இரண்டு தாய் மாடுகளை திருடிச் சென்றுள்ளனர்.

பொலிஸார் விசாரணை

இதனையடுத்து, குறித்த கால் நடைவளர்ப்பு உரிமையாளரினால் பொலிஸில் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில், சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்



200 மில்லியன் ரூபா பெறுமதியான திமிங்கல கழிவுடன் ஒருவர் கைது


Gallery

GalleryGallery
GalleryGallery
GalleryGallery

a 203 மாமனிதர் ஆக மதிப்பளிக்கப்பட்டார் கலாநிதி சதாசிவம் மகேஸ்வரன்

  மாமனிதர் ஆக மதிப்பளிக்கப்பட்டார் கலாநிதி சதாசிவம் மகேஸ்வரன் சுயநல வாழ்வைத் துறந்து பொதுநல சேவையை இலட்சியமாக வரித்து அந்த உயர்ந்த இலட்சியத்...