சுவிஸில் கோர விபத்து... இலங்கையைச் சேர்ந்த இளைஞன் உயிரிழப்பு! மூவர் படுகாயம்
சுவிட்சர்லாந்தில் உள்ள வலே மாநிலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞன் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விபத்தில் மேலும் மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து சம்பவம் இன்றையதினம் (19-11-2024) காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சீடஸ் (Siders) லோயூக் (Leuk) பிரதான வீதியில் உள்ள ஃபைன்ஸ்ட் (Pfynstrasse) வீதியில் இன்று பார ஊர்தியுடன் மோதி இடம்பெற்ற இவ்விபத்தில் மேலும் இரு வாகனங்கள் விபத்தில் சிக்கியுள்ளதாக பொலிஸ் இணையதள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வலே மாநில பொலிஸாருடன், வலாய்ஸ் மீட்பு பிரிவு, லோயூக் பிராந்திய தீயணைப்பு பிரிவு, லோயூக் - லோயூக்பாட் பிராந்திய பொலிஸார் மற்றும் பெர்ன் மாநில பொலிஸ் விபத்து சேவை ஆகியவை மீட்பு பணியில் இருந்துள்ளன.
சுமார் ஒரு மணியத்தியாலத்திற்கு மேலாக இவ்வீதியுடனான போக்குவரத்து தடைப்பட்டிருந்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனவும் பொலிஸ் இணையத்தள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக