உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

புதன், 27 நவம்பர், 2024

a 171 கொட்டும் மழைக்கு மத்தியிலும் கண்ணீரால் நனைந்தது அளம்பில் துயிலுமில்லம்

 

கொட்டும் மழைக்கு மத்தியிலும் கண்ணீரால் நனைந்தது அளம்பில் துயிலுமில்லம்

Gallery

முல்லைத்தீவு - அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தில் இடைவிடாத கொட்டும் மழைக்கு மத்தியிலும் மாவீரர்நாள் நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.

மாலை 06.05மணிக்கு மணி ஓசை எழுப்பப்பட்டு, தொடர்ந்து அகவணக்கம் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து மாவீரர்களுக்கான பிரதான பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.

பிரதான பொதுச்சுடர் மாவீரர் மேஜர் பாலுவின் சகோதரியும், மாவீரர் லெப்ரினன்ட் பொன்னம்பலம் அவர்களின் மனைவியுமான கமலாதேவி அவர்களால் ஏற்றப்பட்டது.

அத்தோடு சமநேரத்தில் ஏனைய சுடர்களும் ஏற்றப்பட்டதுடன், மாவீரர்களின் உறவுகள் கண்ணீர்சொரிந்து உணர்வெழுச்சியுடன் நினைவேந்தலை அனுஷ்டித்தனர்

மேலும் மாவீரர் துயிலுமில்லத்தில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனும் மாவீரர்களின் உறவுகளுடன் இணைந்து உணர்வெழுச்சியுடன் மாவீரர்நாள் நினைவேந்தலில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


Gallery
GalleryGalleryGalleryGalleryGalleryGallery

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 204 சர்வதேச பிடியாணை உத்தரவு

சர்வதேச பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தம்பதியினர் கட்டுநாயக்கவில் கைது சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்ட  தம்பதியின...