யாழ்ப்பாணம், உரும்பிராய் பகுதியில் அதிகளவான ஹெரோயின் போதைப்பொருள் பாவித்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் நேற்றிரவு (31-10-2024) உரும்பிராய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஹெரோயின் போதைக்கு அடிமையான குறித்த இளைஞன், முன்னர் ஊசி மூலம் போதையேற்றி வந்துள்ளார்.
இருப்பினும், பின்னர் திருந்தி வாழ்ந்து வந்த நிலையில், நேற்று நண்பர்களுடன் ஹெரோயின் போதைப்பொருள் பாவித்துள்ளார்.
அதிகளவான ஹெரோயின் உட்கொண்ட நிலையில், வாயில் இருந்து நுரைதள்ளிய நிலையில் உயிரிழந்துள்ளார்.
இளைஞனின் தாய் ஏற்கனவே உயிரிழந்த நிலையில், தந்தையும் சகோதரியும் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இளைஞன் பாட்டியுடன் உரும்பிராயில் வசித்து வருகின்றார்.
போதையில் வீட்டுக்கு வந்த இளைஞன் 4க்கும் மேற்பட்ட தடவை வாந்தி எடுத்துவிட்டு படுத்துள்ளார். பாட்டியரும் போதையில் தான் இளைஞன் படுத்துள்ளான் என நினைத்துள்ளார்.
ஆனாலும் நீண்ட நேரமாகியும் இளைஞன் எழும்பாததால் இளைஞனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் இளைஞன் உயிரிழந்து சில மணித்தியாலம் ஆகிவிட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டுள்ளனர்.
மேலும் பரிசோதனையில் அதிக ஹெரோயின் உட்கொண்டதே மரணத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது. இறந்தவரின் தாய் மாவீரர் எனவும் தகப்பன் போராளி ஈஸ்வரன் அவர்களின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது. தகப்பனும் மகளும் வெளிநாடு ஒன்றில் உள்ள நிலையிலே இந்தப்பரிதாபகம் நடந்துள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக