வன்னிவிளாங்குளம் துயிலுமில்லத்தில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுப்பு
முல்லைத்தீவில் (Mullaitivu) மாவீரர்நாள் நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றுள்ளது.
குறித்த நினைவேந்தல் நிகழ்வானது இன்று (27) வன்னிவிளாங்குளம் துயிலுமில்லத்தில் இடம்பெற்றுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் கொட்டும் மழையிலும் உணர்வெளிச்சியுடன் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மாவீரர் நினைவேந்தல்
இதனுடன், முல்லைத்தீவு - அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தில் இடைவிடாத கொட்டும் மழைக்கு மத்தியிலும் மாவீரர்நாள் நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது.
மேலும், மாலை 06.05 மணிக்கு மணி ஓசை எழுப்பப்பட்டு, தொடர்ந்து அகவணக்கம் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து மாவீரர்களுக்கான பிரதான பொதுச்சுடர் ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமானமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக