உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

திங்கள், 11 நவம்பர், 2024

a 148 வெளிநாடுகளில் இருந்து தாயகம் செல்பவர்கள் புலி என்ற போர்வையில் கைது செய்யப்படுவதாக மக்கள் சந்தேகம்?

 

லண்டன் வாழ் புலம்பெயர் யாழ்ப்பாண தமிழர் அதிரடியாக கைது!

லண்டன் வாழ் புலம்பெயர் யாழ்ப்பாண தமிழர் அதிரடியாக கைது! | Expatriate Jaffna Tamil Living In London Arrested

லண்டன் வாழ் புலம்பெயர் தமிழர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று திங்கட்கிழமை (11) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 39 வயதுடையவர் ஆவார். சந்தேக நபர் லண்டனிலிருந்து இன்றைய தினம் காலை 05.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.


போலி கடவுச்சீட்டு 

இதன்போது விமான நிலை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கொண்டு வந்த கடவுச்சீட்டு போலியானது என தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் கடந்த 2004 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக மன்னாரிலிருந்து படகு மூலம் இந்தியாவிற்குத் தப்பிச் சென்று அங்கிருந்து போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இங்கிலாந்துக்குத் தப்பிச் சென்றமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 204 சர்வதேச பிடியாணை உத்தரவு

சர்வதேச பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தம்பதியினர் கட்டுநாயக்கவில் கைது சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்ட  தம்பதியின...