உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

சனி, 30 நவம்பர், 2024

a 180 மது போதையில் இருந்த கணவனை நல்வழிப்படுத்த முயன்ற மனைவி பலி

 

மது போதையில் இருந்த கணவனை நல்வழிப்படுத்த முயன்ற மனைவி பலி

மதுப் பாவனையில் இருந்த கணவனை நல்வழிப்படுத்த முயற்சித்த மனைவி உடலில் தீப்பற்றி உயிரிழந்துள்ளார்.

இதன்போது, பாலையூற்று, திருகோணமலையைச் சேர்ந்த 31வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த பெண்ணின் கணவர் தினமும் மதுபான பாவனையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், அவரை நல்வழிப்படுத்துவதற்காக குறித்த பெண் கடந்த 21ஆம் திகதி தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிவிட்டு தீப்பெட்டியில் இருந்து தீ மூட்டி மிரட்டிய வேளை திடீரென அவர்மீது தீப்பற்றியது.

மரண விசாரணைகள்

இவ்வாறு தவறான முடிவை எடுத்த அவரை காப்பாற்ற முயன்ற கணவனின் கை மீதும் தீப்பற்றியது. இதன்போது, இருவரும் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

மது போதையில் இருந்த கணவனை நல்வழிப்படுத்த முயன்ற மனைவி பலி | Wife Dies Trying To Save Drunk Husband

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கடந்த 27ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவேளை, சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

மது போதையில் இருந்த கணவனை நல்வழிப்படுத்த முயன்ற மனைவி பலி | Wife Dies Trying To Save Drunk Husband

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு கணவன் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.

வெள்ளி, 29 நவம்பர், 2024

a 179 யுத்தம் முடிந்து 14 வருடங்கள் களித்து மாவீரர் நாள் செய்ய அனுமதி வழங்கிய முதலாவது ஐனதுபதி அனுரா என்பதை தமிழர்கள் மறக்க மாட்டார்கள்,

 

ஜனாிதிபதிக்கு நன்றி தெரிவித்த செல்வம் அடைக்கலநாதன்ஜனாிதிபதிக்கு நன்றி தெரிவித்த செல்வம் அடைக்கலநாதன் | 

மக்களின் மனதில் இருக்கும் வலி சுமந்த நாளை அஞ்சலி செய்து நினைவு கூறும் அந்த நாட்களான நடந்து முடிந்த மாவீரர் தினத்தை நினைவு கூற ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் அரசு அனுமதியை வழங்கியமைக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை நேற்று (29) மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “மக்களின் மனதில் உள்ள சோகங்களை அவர்களை நினைவு கூறுகிற இந்த சந்தர்ப்பத்தையும் எவ்வித இடையூறுகளும் இல்லாமல் முன்னெடுப்பதற்கான அனுமதியை வழங்கிய ஜனாதிபதிக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மாவீரர் நினைவேந்தல்

கடந்த காலங்களில் நாங்கள் பார்க்கின்ற போது மாவீரர் நினைவேந்தலின் போது காவல்துறையினர் மற்றும் இராணுவத்தின் கெடுபிடிகள் தொடர்ந்த வண்ணம் காணப்பட்ட நிலையில், இம்முறை மாவீரர் தின நினைவேந்தலின் போது ஒரு சில இடங்களில் காவல்துறையினாரால் அசௌகரியங்கள் ஏற்படுத்தப்பட்டது.


எனினும், இம்முறை ஒரு நிறைவான நினைவேந்தல் நிகழ்வு வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் ஜனாதிபதிக்கும்,தற்போதைய அரசிற்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

வியாழன், 28 நவம்பர், 2024

a 178 சிட்னியில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு - 2024

 சிட்னியில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு - 2024

 தமிழீழ மக்களின் சுதந்திர வாழ்வுக்காக, ஓரு கட்டமைக்கப்பட்ட விடுதலை இயக்கமாக, உயரிய இலட்சிய பயணத்தில், தமது குறிக்கோளை எந்த சமரசத்திற்கும் இடமின்றி, இறுதிவரை உறுதியுடன் போராடிய மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நிகழ்வு புதன்கிழமை 27-11-2024 அன்று சிறப்பாக நடைபெற்றுள்ளது.




அதிகாலை முதல் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வு ஏற்பாட்டுப்பணிகள் மதியம் அளவில் 42 பாகை வெப்பநிலை இருந்த நிலையிலும் அதன் பின்னர் மாலை 5 மணியளவில் எதிர்பாராத பலத்த காற்றும் மழையும் ஏற்பட்டு, நிகழ்வுக்கான தயார்படுத்தல்களில் சிரமங்கள் எதிர்கொள்ளப்பட்டபோதும், அதனையும் சவாலாக ஏற்று, அனைவரின் ஒத்துழைப்புடன் சரியாக மாலை 6.05 மணிக்கு மாவீரர் நாள் நிகழ்வு ஆரம்பமாகியது.


பொதுச்சுடரினை கப்டன் திருநாமம் அல்லது கதிர் என்று அழைப்படும் சௌந்தரராஜா நவநீதன் அவர்களின் சகோதரர்  சௌந்தரராஜா தர்சன் அவர்கள் ஏற்றிவைத்தார். தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரான கோகிலநாத் தர்மகுலசிங்கம் அவர்கள் அவுஸ்திரேலிய பூர்விக மக்களின் கொடியை ஏற்றிவைக்க, அவுஸ்திரேலியத் தேசியக் கொடியை நியுசவுத்வேல்ஸ் மாநில அவை உறுப்பினர் Anthony D’Adams (Member of the Legislative Council in the NSW parliament) அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக் கொடியை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுச் செயற்பாட்டாளர் தியாகராசா சதீஸ்வரன் அவர்கள் ஏற்றிவைத்தார். இந்நிகழ்வில் நியுசவுத்வேல்ஸ் மாநில அவை உறுப்பினர் Jason Yat-Sen LI (Member of the Legislative Assembly in the NSW parliament) அவர்களும் இணைந்து கொண்டு கொடிவணக்கம் செலுத்தினார்.


தொடர்ந்து முதன்மை ஈகைச்சுடரினை, கப்டன் புவிராஜ் என்று அழைக்கப்படும் சண்முகம் சந்திரறொகான் அவர்களின் சகோதரி திருமதி பிரபா பாலகிருஸ்ணன் அவர்கள் ஏற்றிவைக்க, சமநேரத்தில் மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கான ஈகைச்சுடரினை மாவீரர்களின் குடும்பங்களை சேர்ந்தோர்களும் மற்றும் உரித்துடையோர்களும் 280 மாவீரர்களின் திருவுருவப்படங்களை தாங்கிய மாதிரி கல்லறைகளுக்கு ஈகைச்சுடரினை ஏற்றிவைத்தனர். 


அதனைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு, துயிலுமில்லப் பாடல் ஒலிபரப்பப்பட அனைவரும் உணர்வு மயமாக மாவீரர்களுக்கு நினைவு வணக்கம் செலுத்தினர். தொடர்ந்து, மாவீரர் நாள் நிகழ்வுக்கு வருகை தந்த அனைவரும் வரிசையாக சென்று கல்லறைகளுக்கு மலர்வணக்கம் செய்தனர். நீண்ட வரிசையில் காத்துநின்று அனைவரும் மலர்வணக்க நிகழ்வில் உணர்வுபூர்வமாக கலந்துகொண்டனர்.


தொடர்ந்து, மலர்வணக்க நிகழ்வு நிறைவடையும் வேளையில், "ஓ வீரனே... எங்கள் மண்ணில் உன் பெயர்" என்ற தாயகப்பாடலை சிருஸ்திகா செல்வம் அவர்களும், "சாவினைத் தோள் மீது தாங்கிய காவிய சந்தன பேழைகளே ..." என்ற பாடலை கிசோமி சிவநேசன் அவர்களும், "மண்ணில் புதையும் விதையே.." என்ற பாடலை காந்தன் அவர்களும், "கார்த்திகை 27...." என்ற பாடலை பாடகர் ஜெய்கரன் அவர்களும் உணர்வுபூர்வமாக பாடினார்கள்.


தொடர்ந்து சிறார்கள் இளையோர்கள் பெரியவர்கள் இணைந்து மாவீரர்கள் பாடல்களுக்கு உணர்வுமயமான நடனநிகழ்வை வழங்கினர்.


இந்நடன நிகழ்வில் கலாநிதி யசோதரபாரதி சிங்கராஜர் அவர்களின் நெறியாள்கையில்:


திவாசினி சிவராசா

துளசி யசிதரன்

றேமருதா கருணைவேந்தன்

ரியன்னா ஞானராஜா

கவின் கீதன்

துவாரகன் உதயசங்கர்

பிறைக்குமரன் பேரின்பராசா


கீதா மனோகரன் மற்றும் பைரவி மனோகரன் அவர்களின் நெறியாள்கையில்


தினுசன் ஜெயரூபன்

லக்சன் ஜெயரூபன்

மாயா யாதவன்

யாரா யாதவன்

அக்சிகா சிவராஜா

திசான் உதயசங்கர்

அபிஷயா மதிவதன்

வினுசா சதீஸ்வரன்

அக்சயா கீதன்

யதீஸ் ஜெயபாலன்

ஜெசிந்தன் ஜெயபாலன்

அஸ்மிதா திருச்செல்வம்


அபிரா அசோக்குமார்

பிதுர்சிகா சிவராஜா

கபிசன் நரேஸ்குமார்

வாகீஸ்வரன் தமிழரசன்

தமிழ்நிலா சிவராம்

தமிழ்திவ்யா சிவராம்

துஜானியா உதயசங்கர்

பார்த்தீபன் செல்வகணேசன்

சாமந்தி சிவரூபன்

யசிதரன் ஜெயபாலன்

ஜெவின் ஜெயரே

அகர்வின் திருச்செல்வம்

சனோசன் செல்வகுமார்

லக்சரா செல்வகுமார்

தஸ்வின் சிவராசா


தமிழினி அன்ரன்

கலை அன்ரன்

கீதா மனோகரன்

சேரன் சிறிபாலன்

நிதர்சினி செல்வகுமார்

சிறிபைரவி மனோகரன்

உதயானி அன்ரனி ஜெகநாதன்

ஜமிலா உதயசங்கர்

லக்ஸ்மி ஜெயரூபன்

சர்மிளா கீதன்

டனிஸ்ரா அகிலன்

கோமதி நரேஸ்குமார்


ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.


நிறைவாக தேசியக் கொடிகள் இறக்கிவைக்கப்பட்டு, மாவீரர் நாள் நிகழ்வை உணர்வுபூர்வமாக நினைவுகூருவதற்கு பல நாட்களாக மாவீரர் நாள் ஏற்பாட்டுப் பணிகளில் தங்களை பங்களித்து நின்றும், மாவீரர் நாளில் தங்கள் முழுப்பங்களிப்பையும் வழங்கி நின்றும், நிகழ்வு நிறைவடைந்த பின்னரும் அனைத்து துப்பரவு பணிகளிலும் பங்களிக்க காத்திருந்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்து, உறுதியேற்றலுடன் நிகழ்வு நிறைவுபெற்றது.


இந்நிகழ்வை திருமதி. நிதர்சினி செல்வகுமார், திரு. யாழவன், செல்வி கிறிசனா ஆகியோர் சிறப்பாக தொகுத்து வழங்கியிருந்தனர். 


இந்நிகழ்வில் மாவீரர் நாள் வெளியீடுகள் விற்கப்பட்டதுடன் இவ்வாண்டு மாவீர்களினதும் தமிழீழ தாயகத்தினதும் விடயங்களை தாங்கிய காந்தள் என்ற புத்தகமும் வெளியிட்டுவைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் 3000 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடதக்கது.


A2

A3

A31

B2

B1

B3

B5

B31

C2

C3

C4

C5

C6

D2

D3

D8

D91

D92

S2

S1



S3

S4

S5

S6

S7

S8


F1

F2

F3

F5

F6

G1

G2

G3

G4

G5

G6

H1

H2

H3

H4

H5

I1

I2

I4

J1

J2

J3

K1

K2

K3

K4

K6

E1


E2

a 203 மாமனிதர் ஆக மதிப்பளிக்கப்பட்டார் கலாநிதி சதாசிவம் மகேஸ்வரன்

  மாமனிதர் ஆக மதிப்பளிக்கப்பட்டார் கலாநிதி சதாசிவம் மகேஸ்வரன் சுயநல வாழ்வைத் துறந்து பொதுநல சேவையை இலட்சியமாக வரித்து அந்த உயர்ந்த இலட்சியத்...