மனிதப் புதைகுழிகளுக்கு உரிய நீதி கோரி கொக்குத்தொடுவாயில் இன்று போராட்டம்
Share
விளம்பரம்
விளம்பரம்
முல்லைத்தீவு(Mullaitivu), கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழிக்கு முன்பாக இன்று (20.08.2024) கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத் தலைவி மரியசுரேஸ் ஈஸ்வரி இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
நீதி கோரி
முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட மனிதப் புதைகுழிகளுக்கு உரிய நீதி கோரி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக