உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2024

a 25 யாழில் வட்டிக்கு கடன் பெற்ற இளம் குடும்பப் பெண்ணொருவரிற்கு நேர்ந்த கதி

 

யாழில் வட்டிக்கு கடன் பெற்ற இளம் குடும்பப் பெண்ணொருவரிற்கு நேர்ந்த கதி

யாழில் வட்டிக்கு கடன் பெற்ற இளம் குடும்பப் பெண்ணொருவரிற்கு நேர்ந்த கதி | Young Family Woman Suicide Jaffna

அதிக வட்டிக்கு கடன் பெற்ற இளம் குடும்பப் பெண்ணொருவர் கடனை மீளச் செலுத்த முடியாத நிலையில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.

யாழ்ப்பாணம் - ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய சயந்தன் கேதீசா என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மரண விசாரணை

குறித்த பெண் மீற்றர் வட்டிக்கு கடன் பெற்று கடை ஆரம்பித்ததையடுத்து வியாபாரம் இல்லாத நிலையில் கடையினை மூட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வாங்கிய கடனை செலுத்த முடியாமையினால், கடன் வழங்குனர்களால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.


இதனைதொடர்ந்தே இன்றையதினம்(30) தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.

அத்துடன், அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 203 மாமனிதர் ஆக மதிப்பளிக்கப்பட்டார் கலாநிதி சதாசிவம் மகேஸ்வரன்

  மாமனிதர் ஆக மதிப்பளிக்கப்பட்டார் கலாநிதி சதாசிவம் மகேஸ்வரன் சுயநல வாழ்வைத் துறந்து பொதுநல சேவையை இலட்சியமாக வரித்து அந்த உயர்ந்த இலட்சியத்...