உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

சனி, 24 ஆகஸ்ட், 2024

a09 சஜித் அவர்களிற்கே சிங்கள மக்களின் ஆதரவு?

 

அரச ஊழியர்களுக்கும் ஓய்வூதியர்களும் சஜித் வெளியிட்டுள்ள மகிழ்ச்சி தகவல்

அரச ஊழியர்களுக்கும் ஓய்வூதியர்களும் சஜித் வெளியிட்டுள்ள மகிழ்ச்சி தகவல் | Gov Servants Salary Allowance Pension Increment

அரச ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் பெறுகின்றவர்களுக்கும் பல சலுகைகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை இன்று (24) காலை கண்டி திகன பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அரச ஊழியர்களின் வாழ்க்கைச் செலவுக்கேற்ப சம்பளம் வழங்குவது தொடர்பாக ஆராய்வதற்கு பூரண அதிகாரத்துடன் கூடிய ஆனைக்குழு ஒன்று நிறுவப்படும்.

ஊழியர்களுக்கான வரி

அரச ஊழியர்களின் சம்பளத்தை 24% அதிகரிப்பதோடு அரச ஊழியர்களுக்கான வரியை குறைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு கணக்குகளுக்கு இதற்கு முன்பு வழங்கப்பட்டதை போன்று 15 வீத வட்டியை சேமிப்பு வட்டி வீதமாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

15 வீத வட்டியுடன் கூடிய இலட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்களின் உரிமை இன்று பறிக்கப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களுக்கும் ஓய்வூதியர்களும் சஜித் வெளியிட்டுள்ள மகிழ்ச்சி தகவல் | Gov Servants Salary Allowance Pension Increment

ஓய்வூதியதாரர்கள் ஏமாற்றப்பட்டாலும் தாம் அவர்களை ஏமாற்றப் போவதில்லை.

2016 ஆம் ஆண்டுக்கு முன்பு ஓய்வு பெற்ற அனைவருக்கும் அக்ரஹார காப்புறுதித் திட்டத்தை முன்னெடுப்போம்.

2016 தொடக்கம் 2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஓய்வு பெற்றவர்களுக்கு இந்த சலுகையை கோட்டாபய ராஜபக்ச இல்லாமல் ஆக்கி உள்ளார் அதனை மீண்டும் வழங்குவோம்.

சம்பள முரண்பாட்டு 

ஓய்வு பெற்றவர்களின் சலுகைகளை உயர்ந்த தரத்தில் பேணும் பொருட்டு 1999 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க சட்டத்தைத் திருத்துவதன் மூலம் புதியதொரு சட்ட மூலமொன்று கொண்டு வரப்படும்.

சிரேஷ்ட பிரஜைகளுக்காக வழங்கப்படுகின்ற 3000 ரூபா கொடுப்பனவை 5000 ரூபாவாக அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்தோடு, இராணுவ வீரர்களுக்காக One rank one pay வேலை திட்டத்தையும் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.


கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள சம்பள முரண்பாட்டு பிரச்சினையையும் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவை பொய்யான வாக்குறுதிகள் அல்ல இது முன்மொழிவும் திட்டங்களும் ஆகும்.

பிரேமதாசாக்கள் செய்வதாகச் சொன்ன விடயங்களை செய்யாமல் இருந்ததில்லை எனது தந்தையான ரணசிங்க பிரேமதாசவின் நாமத்தால் நான் சொல்வதை செய்வேன்” என அவர் தெரிவித்துள்ளார்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
GalleryGalleryGallery

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 203 மாமனிதர் ஆக மதிப்பளிக்கப்பட்டார் கலாநிதி சதாசிவம் மகேஸ்வரன்

  மாமனிதர் ஆக மதிப்பளிக்கப்பட்டார் கலாநிதி சதாசிவம் மகேஸ்வரன் சுயநல வாழ்வைத் துறந்து பொதுநல சேவையை இலட்சியமாக வரித்து அந்த உயர்ந்த இலட்சியத்...