உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2024

a0 7யாழில் ஆலயத்தில் இருந்த குடும்பஸ்தர் மர்மமான a 07 முறையில் உயிரிழப்பு! வெளியான பின்னணி

யாழில் ஆலயத்தில் இருந்த குடும்பஸ்தர் மர்மமான முறையில் உயிரிழப்பு! வெளியான பின்னணி

யாழில் ஆலயத்தில் இருந்த குடும்பஸ்தர் மர்மமான முறையில் உயிரிழப்பு! வெளியான பின்னணி | Person Died Mysteriously In A Temple In Jaffna

யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியிலிருந்து குடும்பஸ்தர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் சுன்னாகம் - சூளானை பகுதியைச் சேர்ந்த தங்கவேலு கோபிநாத் என்பவரே இவ்வாறு சடலமாக இன்றையதினம் (23-08-2024) மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சுன்னாகம் - சூளானை பகுதியில் உள்ள ஆலயமொன்றில் திருவிழா இடம்பெற்று வரும் நிலையில் குறித்த நபர் பிரசாதம் தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

ஆலயத்திற்கு அருகில் உள்ள வீடொன்றின் உரிமையாளர் குடும்பத்துடன் வவுனியாவில் வசித்து வருகிறார். அவர்கள் திருவிழாவிற்காக ஊருக்கு வந்திருந்தார்கள்.

யாழில் ஆலயத்தில் இருந்த குடும்பஸ்தர் மர்மமான முறையில் உயிரிழப்பு! வெளியான பின்னணி | Person Died Mysteriously In A Temple In Jaffna

இவ்வாறு வவுனியாவிலிருந்து வந்த வீட்டின் உரிமையாளர் தனது வீட்டின் மோட்டார் இயங்கவில்லை என கூறி, பிரசாதம் தயாரிப்பில் ஈடுபட்ட குறித்த நபரை அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு சென்று பார்த்த குறித்த நபர் டெஸ்டர் எடுத்து வருமாறு வீட்டின் உரிமையாளரிடம் கூறியுள்ளார்.

அவர் டெஸ்டரை எடுத்துக்கொண்டு வந்து பார்த்தவேளை குறித்த நபர் கீழே விழுந்து உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

யாழில் ஆலயத்தில் இருந்த குடும்பஸ்தர் மர்மமான முறையில் உயிரிழப்பு! வெளியான பின்னணி | Person Died Mysteriously In A Temple In Jaffna

அவரது சடலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 203 மாமனிதர் ஆக மதிப்பளிக்கப்பட்டார் கலாநிதி சதாசிவம் மகேஸ்வரன்

  மாமனிதர் ஆக மதிப்பளிக்கப்பட்டார் கலாநிதி சதாசிவம் மகேஸ்வரன் சுயநல வாழ்வைத் துறந்து பொதுநல சேவையை இலட்சியமாக வரித்து அந்த உயர்ந்த இலட்சியத்...