உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

புதன், 21 ஆகஸ்ட், 2024

a 02 இளம் குடும்பஸ்தர் ஒருவர் மரத்தில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!

 

இளம் குடும்பஸ்தர் ஒருவர் மரத்தில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு! அதிர்ச்சி சம்பவம்



 கற்பிட்டிப்பகுதியில் உள்ள மரத்தில் தொங்கிய நிலையில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இன்றையதினம் (21-08-2024) மாலையில்டம்பெற்றுள்ளது.

இளம் குடும்பஸ்தர் ஒருவர் மரத்தில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு! அதிர்ச்சி சம்பவம் | Family Member Was Found Dead Hanging Tree Puttalam

குறித்த சம்பவத்தில், கற்பிட்டி – அல்மனார் பகுதியில் வசித்து வந்த எம்.ஆர்.எம்.பஸால் எனும் இளம் குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் நேற்றிரவு (20-08-2024) வீட்டை விட்டு துவிச்சக்கர வண்டி ஒன்றில் வெளியேறிச் சென்றிருந்ததாகவும், அதனையடுத்து அவர் வீடு திரும்பவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இளம் குடும்பஸ்தர் ஒருவர் மரத்தில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு! அதிர்ச்சி சம்பவம் | Family Member Was Found Dead Hanging Tree Puttalam

இந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டவரின் தாய் மற்றும் உறவினர்கள் அவரைத் தேடியுள்ளனர் என்றும் புதன்கிழமை கற்பிட்டி – அல்மனார் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் குறித்த நபர் மரமொன்றில் தொங்கிய நிலையில் இருப்பதனை அவரது சகோதரர் கண்டுள்ளார் எனவும் கூறப்படுகிறது.

பின்னர், இதுபற்றி கற்பிட்டி பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டதுடன், சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த கற்பிட்டி பொலிஸார் முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுத்தனர்.

மரத்தில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டவருக்கு சொந்தமானது என தெரிவிக்கப்படும் துவிச்சக்கர வண்டியும், இரண்டு பாதனிகளும் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

இளம் குடும்பஸ்தர் ஒருவர் மரத்தில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு! அதிர்ச்சி சம்பவம் | Family Member Was Found Dead Hanging Tree Puttalam

சடலமாக மீட்கப்பட்டவரின் இரண்டு கைகளும் கட்டப்பட்டிருந்ததாகவும், இது கொலையா? தற்கொலையா?  என்ற கோணத்தில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

கற்பிட்டி பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி எஸ்.எம்.நாசிம் சம்பவ இடத்திற்கு விஜயம் செய்து, அங்கு முதற்கட்ட மரண விசாரணையை நடத்தி, புத்தளம் மாவட்ட நீதிவானின் உத்தரவுக்கமைய சடலத்தை புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 308 தமிழீழ விடுதலை போராட்டத்தில் பன்முகத்தன்மையுடைய மாபெரும் வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம்

  தமிழீழ விடுதலை போராட்டத்தில் பன்முகத்தன்மையுடைய மாபெரும் வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம் பதிவேற்றுனர்:  திரு வேந்தனார் திகதி:  15 May, 2025...