கிளிநொச்சியில் நபர் ஒருவர் மாயம்: பொலிஸார் தேடுதல் நடவடிக்கை
கிளிநொச்சியில் நபர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்போது, சுரேஷ்குமார் என்ற நபரே கடந்த வெள்ளிக்கிழமை(23.08.2024) காணாமல் போயுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை
இந்த நிலையில், கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அத்துடன், குறித்த நபர் தொடர்பான தகவல்கள் தெரிந்தால் கீழ் உள்ள தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக