உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

புதன், 28 ஆகஸ்ட், 2024

a 21 தொடர்ந்து போராடும் தமிழர்கள்?

 

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு மாபெரும் போராட்டம் !

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு மாபெரும் போராட்டம் ! | Tomorrow Protest In Kilinochchi

சர்வதேச காணாமல் வலிந்து ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டத்தில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த பேராட்டமானது நாளை (30) கிளிநொச்சி கந்தசாமி ஆலய முன்றலிலே ஆரம்பமாகவுள்ளது.

இந்த போராட்டத்திற்கு எட்டு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவி கனகரஞ்சி (Kanakaranji) மற்றும் செயலாளர் லீலாதேவி (Leela Devi) ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.


கவனயீர்ப்பு போராட்டம்  

இதனடிப்படையில், 30 இற்கும் மேற்பட்ட பச்சிளங்குழந்தைகள், மற்றும் கையளிக்கப்பட்ட, இழுச்துச் செல்லப்பட்ட, கைது செய்யப்பட , சரண்டைந்த உறவுகளுக்கு சர்வதேச நீதி வேண்டி போராட்டத்திற்கான அழைப்பில் தமிழ் தேசிய அரசியல் கட்சிகள், சிவில் சமூகத்தினர் எனைய அமைப்புகள், சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் பங்குகொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


மேலும், புலம்பெயர் தேசங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான போராட்டங்களில் அந்தந்த நாடுகளில் வலுச்சேர்த்து அழுத்தம் கொடுக்குமாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 340 ஈரவிழிகள் நனைய.

  ஈரவிழிகள் நனைய. மாவீரர்கள் உமைக் காண கல்லறை நோக்கி வருகின்றோம்.. காந்தள் மலர்கள் கரமேந்தி கண்ணீர் துளிகள் கரைமீறி தேச மாந்தர் உமைக் காண தே...